Loading...
press release
பத்திரிகை செய்திக் குறிப்பு பற்றிய விவரங்கள்

டாடா மோட்டார்ஸ் புதிய ஏஸ் கோல்டின் எஸ்சிவிகளின் விற்பனை அதிகரிப்பை எதிர்பார்க்கிறது

2018 ஏப்ரல் 13 அன்று வெளியிடப்பட்டது.

டாடா மோட்டார்ஸ், தீவிரமான சந்தை பங்கைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இன்று ரூ. 375,000-க்கு ஏஸ் கோல்ட் சிறு வர்த்தக வாகன விற்பனையை துவக்கியுள்ளது. விரிவான ஆராய்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்ததுக்களை வைத்து ஏஸ் கோல்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

702 சிசி ஐடிஈ என்ஜின் ஆற்றல் கொண்ட அராடிக் ஒயிட் நிற மினி டிரக் டாடா மோட்டார்ஸின் அங்கீகரிக்கப்பட்ட வினியோகம் இன்றே துவங்குகிறது. ஏஸ் கோல்டு கடினமான, அதிகரித்த பாதுகாப்பு, வசதியுடன் மேம்பட்ட செயல்திறனை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

டாடா மோட்டார்ஸ் கீழ்க்கண்டவை உள்ளிட்ட மதிப்புக் கூட்டுதல் சேவைகளையும் வழங்குகிறது:

டாடா செய்தி: நேர அர்ப்பணிப்புடன் 24x7 பழுது நீக்கும் உதவித் திட்டம்.

டாடா டிலைட்: லாயல்டி திட்டம் இலவச காப்பீடு மற்றும் லாயல்டி புள்ளிகளை மீட்டல் முதலான பயன்களை வழங்குகிறது.

டாடா ஜிப்பி: குறிப்பிட்ட நேரத்திற்குள் பழுது பார்ப்பதற்கான அர்ப்பணிப்பு.

டாடா கவச் : குறிப்பிட்ட நேரத்திற்குள் விபத்துக்குள்ளாகும் வாகனத்தை பழுது பார்ப்பதற்கான அர்ப்பணிப்பு.

துவக்க விழா பற்றி கருத்துக் கூறிய டாடா மோட்டார்ஸ், வர்த்தக வாகன தொழில் பிரிவின் தலைவர் கிரிஸ் வாக், "டடா மோட்டார்ஸ் இந்தியாவில் சிறிய வர்த்தக வாகன சந்தையை உருவாக்கி விரிவுபடுத்தி வருவதில் முன்னோடியாக உள்ளது. சந்தைப் பங்கு 68 சதவீதம் உடன், இது தொடர்ந்து மினி டிரக்ஸ் பிரிவில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. 20 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சாலையில் ஓடுவதன் மூலம், ஏஸ் வாடிக்கையாளர்களின் உணர்வில் பின்னிப் பிணைந்துள்ளது. அதிகரிக்கப்பட்ட சிறப்பம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஸ் கோல்டு கவர்ச்சிகரமான விலையான ரூ. 3,75,000-ல் இது தொடர்ந்து முன்னணியில் இருக்கும்" என்று தெரிவித்தார்.

ஏஸ் வாகனங்களில் தற்போது என்ஜின் வகை, என்ஜின் சக்தி மற்றும் பாடி வரையறைகளை பொறுத்து 15 போர்ட்ஃபோலியோக்கள் வழங்கப்படுகிறது. இதில் சரக்கு வாகனங்களில் ஏஸ், ஜிப், மெகா, மின்ட் அடங்கும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பயணிகளுக்கான மேஜிக், மந்த்ரா மற்றும் ஐரிஸ் அடங்கும்.

எல்லாப் பகுதிகளிலும் ஒர்க்-ஷாப்களை அமைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது. தற்போது, சராசரியாக 62 கிமீ தூரத்தில் என 1800 சேவை மையங்கள் மற்றும் ஒர்க்-ஷாப்களை அமைத்துள்ளது.

நிதியாண்டு 2017-18-ல் டாடா மோட்டார்ஸ் 376456 வர்த்தக வாகனங்களை (எம் மற்றும் எச்சிவிகள் மற்றும் எல்சிவிகள்) விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இதனுடைய சந்தைப் பங்களிப்பு 42.80 சதவீதத்திலிருந்து 43.96 சதவீதமாக உயர்ந்துள்ளது (ஒய்ஓஒய்).

ஆதாரம் : - http://www.autocarpro.in/news-national/tata-motors-looks-strengthen-scv-market-share-ace-gold-29033