டாடா மோட்டார்ஸ் 2005ஆம் ஆண்டில் சிறு வணிக வாகன தொழில்துறையில் முன்னோடியாக டாடா ஏஸை அறிமுகப்படுத்தியது. அப்போதிலிருந்து, டாடா ஏஸ் தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒட்டுமொத்த அமைப்பிற்கும் குறிப்பிடத்தக்க சமூகப் பொருளாதார நன்மைகளை வழங்கி வருகிறது. குட்டி யானை என பரவலாக அறியப்படும் டாடா ஏஸ் 23 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதற்கு உதவியுள்ளது, மேலும் இந்தியாவில் விற்பனையாகும் மிகப்பெரிய வணிக வாகனப்பிராண்டாகவும் உள்ளது.
டாடா ஏஸ் கோல்ட் டீசல் BS-6 இப்போது அதிக மைலேஜ், சிறந்த பிக்-அப், அதிக சுமை தாங்கும் திறன், அதிக வசதி, குறைந்த பராமரிப்பு, அதிக இலாபங்களுடன் வருகிறது.