Loading...
press release
பத்திரிகை செய்திக் குறிப்பு பற்றிய விவரங்கள்

டாடா மோட்டார்ஸ் நகரம் மற்றும் கிராமப்புற பயணிகள் போக்குவரத்தில் மக்கள் பயணிக்கும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் மேஜிங் மற்றும் விங்கரை அறிமுகப்படுத்தியுள்ளது

2007 ஜூன் 18-ல் வெளியிடப்பட்டது

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் மக்களின் பயணத்தை மாற்றக் கூடிய தனது புதிய தயாரிப்புகளான மேஜிக் மற்றும் விங்கரை உற்பத்தி செய்வதை இன்று அறிவித்துள்ளது. மேஜிக் வெற்றிகரமான ஏஸின் தளத்திலிருந்து உருவாக்கப்பட்டது. இப்போது இது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் மக்கள் பயணிப்பதை சௌகரியமாக மற்றும் பாதுகாப்பான நான்கு சக்கர வாகனப் பயணமாக மாற்றியுள்ளது. இந்தியாவின் ஒரே மேக்ஸி வேன் ஆன விங்கர், நகரங்களுக்கு இடையேயான மற்றும் நீண்ட தூர பயணத் தேவைக்கான சௌகரியமான கார் மற்றும் இட வசதியுள்ள பஸ்ஸின் கலவையாகும்.

மேஜிக் மற்றும் விங்கர் ஆகிய இரண்டும் மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்திலிருந்து நாடு முழுவதுமாக துவங்கப்பட்டது. இது நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படும். இந்த இரண்டு வாகனங்களும் புதிய பிரிவுகளை உருவாக்க உள்ளன. மேலும் குக்கிராமப்பகுதிகள் முதல் நகரங்கள் வரையான மக்கள் போக்குவரத்துக்கான வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்.

இந்த துவக்கங்கள் பற்றி பேசிய டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனங்கள் பிரிவு இயக்குனரான திரு பி.எம். தெலாங், "டாடா மோட்டார்ஸ் எப்போதுமே, இந்தியாவில் போக்குவரத்து முறையை மாற்றக் கூடிய போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதற்கான அர்ப்பணிப்பில் முன்னணியில் உள்ளது. இந்த திசையில் மேஜிக் மற்றும் விங்கர் எங்களது புதிய முனைவுகளாகும். இவற்றின் அடிப்படையில் பல வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். இவை உறுதியான வாடிக்கையாளர் ஆதரவுடன் டாடா மோட்டார்ஸின் பாரம்பரிய என்ஜினியரிங் சிறப்பை ஒருங்கிணைக்கின்றன. இவையும் எங்கள் வர்த்தக மற்றும் பயணிகள் வாகனங்களைப் போல வெற்றியைத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஆதாரம் : - https://www.tatamotors.com/press/tata-motors-introduces-magic-and-winger/