Loading...
press release
பத்திரிகை செய்திக் குறிப்பு பற்றிய விவரங்கள்

இந்தியாவின் பிரபல பொதுமக்கள் போக்குவரத்து பிராண்ட்- டாடா மேஜிக் மூன்று லட்சம் விற்பனை அடையாளத்தை கடக்கிறது

2015 செப்டம்பர் 21

டாடா மோட்டார்ஸ் தனது மிகவும் பிரபல பொது போக்குவரத்து வாகனமான டாடா மேஜிக்கின் விற்பனை அடையாளத்தை அடைந்து தனது பொது போக்குவரத்து துறையில் புதிய சாதனையை படைத்துள்ளது. வாகன பதிவு தவிர, சரக்கு வாகனம் போல அல்லாமல் பொது போக்குவரத்து வாகனத்தைப் பயன்படுத்த ஒரு பொது போக்குவரத்து வாகனத்திற்கும் மாநில அல்லது மண்டல போக்குவரத்து ஆணையங்கள் வழங்கும் அனுமதி தேவைப்படுகிறது என்பது நிறுவனத்தின் முக்கியமான சாதனையாகும். இந்த அனுமதிகளை வாங்கிய பின்னரே ஒருவர் இந்த வாகனங்களை சாலையில் இயக்க முடியும். டாடா மேஜிக் மூலமாக டாடா மோட்டார்ஸ் இந்தப் பிரிவில் 85% சந்தை பங்குடன் தொழிற்துறையில் இந்த மிகவும் சிக்கல் வாய்ந்த கட்டமைப்பை உடைத்துள்ளது.

இந்தப் பிரிவில் டாடா மேஜிக் இணையற்ற பிராண்ட் ஈக்விட்டிைய பெற்றுள்ளது. இது எல்லா காலங்களுக்கும் ஏற்ற, ஸ்டெயிலிஷ், நான்கு சக்கர, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணிகள் வாகனமாக உள்ளது. இது சிறந்து புகைக் கட்டுப்பாடு மற்றும் மேம்பட்ட பொருளாதார மேம்பாட்டைத் தருகிறது. கடந்த ஆண்டுகளில், டாடா மேஜிக் பழைய மூன்று சக்கர வாகனங்ளுக்கு பதிலாக மாற்றக் கூடிய மற்றும் இந்திய கிராமப்புறச் சந்தைகள் மற்றும் நகர்புற பொது போக்குவரத்து வாகனத்திற்காக பல்வேறு அரசாங்க பங்குதாரர்கள், மாட்ட ஆணையங்கள்/ போக்குவரத்து ஆணையங்கள், நகர்வளர்ச்சி அமைச்சகத்தின் பாராட்டுக்களைப் பெற்றது.

வர்த்தக வாகனப் பிரிவில் நிர்வாக இயக்குனரான திரு ரவி பிஷரோடி, "இன்று டாடா மேஜிக்கின் 3,00,000 வாகனங்கள் விற்பனை செய்து மூலம், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மதிப்பு மற்றும் நம்பிக்கைக்கான சான்றாக உள்ளது. மேஜிக்கின் வெற்றி எங்களது பொறியியல் சிறப்பு மற்றும் வலிமையான வாடிக்கையாளர் ஆதரவுக்கான சாட்சியமாக உள்ளது. 85% சந்தைப் பங்குடன், டாடா மேஜிக் தொலைதூர பயணிகளுக்கான வாகனப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களுக்கு வழங்கிய பெரும் ஆதரவு மற்றும் நம்பிக்கையால் நாங்கள் பெருமைப்படுகிறோம். இதுவே நாங்கள் இந்தச் சாதனையைச் செய்ய உதவியது. மிகப்பெரிய, வளரும் நெட்வொர்க், தொடர்ச்சியான அப்கிரேடுகள், புதிய துவக்கங்கள் மற்றும் குறிப்பிட்ட சந்தை குறுக்கீடுகள் மூலமாக நாங்கள் தொடர்ச்சியாக முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறோம். சிறிய வர்த்தக வாகன தொழிற்துறையில் பெரும் வளர்ச்சியை அடைந்து வருகிறோம்.

இந்திய வர்த்தக வாகன தொழிற்துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து, டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களின் உணர்வு மற்றும் தேவைகளின் ஆழத்தை புரிந்துகொள்கிறது. நிறுவனம் சிறிய பயணிகளுக்கான கருத்தின் முன்னோடியாக முழுமையான புதிய சந்தை பிரிவை உருவாக்குவதற்கான மறைமுக வாடிக்கையாளர் தேவையை புரிந்துள்ளது. வெற்றிகரமான ஏசிஈ தளத்தில் உருவாக்கப்பட்ட டாடா மேஜிக் 2007-ல் தொலை தூர பொதுப் போக்குவரத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. டாடா மேஜிக் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறத்தில் சௌகரியமான, பாதுகாப்பான, நான்கு சக்கர பொதுப் போக்குவரத்து முறையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏஸ் பிராண்டைப் போலவே, மேஜிக் வாகனமும் பலரின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் பல தொழில் முனைவோரை உருவாக்க உதவியுள்ளது.

டாடா மேஜிக் வாகனத்தின் பெருமை காரணமாக டாடா மோட்டார்ஸ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கால் பதித்தது. தற்போது 184 டீலர்கள், 1600 ஷோரூம்களில் மேஜிக் வாகனங்களை விற்பனை செய்கிறார்கள். டாடா மேஜிக் நகரங்களுக்கு இடையேயான மற்றும் நகரத்தின் உள்ளேயான வாகனமாக பயன்படுத்தப்படுகிறது. டாடா மேஜிக் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் விற்பனையாகிறது. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஒரிஸா, மேற்கு வங்கம், பீஹார், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், கர்நாடகா, ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முக்கியச் சந்தைகளாக உள்ளன. ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், மேஜிக் நகரத்தின் உள்ளேயான வழித்தடங்களில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குஜராத், ராஜஸ்தான், அஸ்ஸாம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் டாடா மேஜிக் ஆட்டோ ரிக்ஷாக்களின் இடத்தை பிடித்துள்ளது.

டாடா மேஜிக், டாடா மோட்டார்ஸின் கிராமப்புறங்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தும் நீவ் என்றழைக்கப்படும் வர்த்தக வாகனங்களுக்கான கிராமப்புற சந்தை முனைவுகளின் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் உட்பட கிராங்களில் உள்ள மற்ற தயாரிப்புகளுடன் டாடா மேஜிக்கை விற்பனை செய்யும் டாடா கிராம் மித்ராஸ் மற்றும் டாடா கிஸான் மித்ராஸ் என்றழைக்கப்படும் கிராம பிரதிநிதிகளை உள்ளடக்கியது.

மேஜிக் வாகனம் தொடர்ச்சியாக வடிவமைத்து, சந்தையில் உள்ள இடைவெளிகளை அடையாளம் கண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தளம் இதுவரை என்ஜின் வகை மற்றும் எரிபொருளை அடிப்படையாகக் கொண்டு 4 வழங்குதல்களை உருவாக்கியுள்ளது. மேஜிக் வாகனக் குடும்பத்தில் தற்போது மேஜிக் டீஸல் (BS3 & BS4), மேஜிக் சிஎன்ஜி (BS4), மேஜிக் ஐரிஸ் டீஸல் (BS3 & BS4) மற்றும் மேஜிக் ஐரிஸ் சிஎன்ஜி (BS4) இடம்பெற்றுள்ளன. எதிர்காலத்தில் அதிக வகைகளை சேர்க்க உள்ளது. அத்துடன், உத்தரவாதம் நீடிக்கப்பட்டுள்ளது.டாடா மேஜிக் தற்போது ஈடிணையற்ற 2 ஆண்டுகள்/ 72000 கிமீ (இதில் எது முன்னதாக நடைபெறுகிறதோ அது வரை) உத்தரவாதம் அளிக்கிறது.

டாடா மேஜிக் 2007 ஆகஸ்ட் மாதம் பந்த்நகர் தொழிற்சாலையில் வர்த்தக ரீதியான உற்பத்தியைத் துவக்கியது. இந்த தொழிற்சாலை 953 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 337 ஏக்கர்கள் விற்பனையாளர் பூங்கா அமைந்துள்ளது. இது ஜாம்ஷெட்பூர் (வர்த்தக வாகனங்கள்), புணே (வர்த்தக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள்) மற்றும் லக்னோவை (வர்த்தக வாகனங்கள்) தொடர்ந்து நிறுவனத்தின் நான்காவது தொழிற்சாலையாக உள்ளது. நவீன வசதிகளுடன், பந்த்நகர் தொழிற்சாலையில் வெல்ட் கடைகள், பெயிண்ட் கடைகள், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் கடைகள் மற்றும் அசெம்பிளி லைனகள் உள்ளன. டாடா மோட்டார்ஸ் பந்த்நகர் தொழிற்சாலையில் ரூ.1000 கோடிகள் முதலீடு செய்துள்ளது. மேலும் விற்பனையளார் பூங்காவை ஒட்டியுள்ள தொழிற்சாலையில் கூடுதலாக முதலீடு செய்யப்பட்டது. இது இருப்புகளை குறைவாக வைத்து ஜேஐடி (சரியான நேரத்தில்) வழங்குதல்களை உறுதிப்படுத்துவதற்கான விற்பனையாளர் பூங்காவுடன் கூடிய டாடா மோட்டார்ஸின் முதல் தொழிற்சாலை ஆகும். பந்த்நகர் தொழிற்சாலையில் ஏறக்குறைய 75% வகைகளை 73 விற்பனையாளர்கள் விற்பனை செய்கிறார்கள்.

நாடு இன்று "இந்தியாவில் உற்பத்தியை" கொண்டாடி வருகையில், டாடா மேஜிக்கை வெற்றிகரமாக உலக எல்லைகளை கடந்து விற்பனை செய்கிறது என்பதில் டாடா மோட்டார்ஸ் பெருமைப்படுகிறது. இன்று, டாடா மோட்டார்ஸ் சார்க் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் அங்கோலா, பங்களாதேஷ், பூடான், காங்கோ, ஜீபோட்டி, எத்தியோப்பியா, கானா, கென்யா, மொஸாம்பிக், மியான்மர், நேபாள், நைஜீரியா, பிலிப்பைன்ஸ், செனீகல், தென்னாப்பிரிக்கா, இலங்கை, சூடான், தான்ஸானியா, வியட்னாம், ஜாம்பியா போன்ற 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் பற்றி

டாடா மோட்டார்ஸ் லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய வாகன நிறுவனமாகும். இது 2014-15 ஆண்டுகளில் மொத்தமாக ரூ. 2,62,796 கோடிகள் (யுஎஸ்டி 42.04) வருவாய் ஈட்டித் தந்துள்ளது. துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களின் மூலமாக டாடா மோட்டார்ஸ் யுகே, தென் கொரியா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தோனிஷியா நாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது. இந்த தொழில் இரண்டு முக்கிய பிரிட்டிஷ் பிராண்ட்களை உள்ளடக்கிய ஜாகுவார் லேண்ட் ரோவர். இது இந்தியாவில் ஃபியட் நிறுவனத்துடன் தொழிற்துறை முனைவை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் 80 லட்சம் டாடா வாகனங்கள் இயங்குவதோடு டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் வர்த்தக வாகனத்தில் முன்னணி நிறுவனமாகவும் பயணிகள் வாகனத்தில் உச்ச நிறுவனமாகவும் உள்ளது. டாடா கார்கள், பேருந்துகள் மற்றும் லாரிகள் ஐரோப்பா, ஆப்பரிக்கா, மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிஐஎஸ் மற்றும் ரஷ்யாவில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆதாரம் : - https://www.tatamotors.com/press/indias-popular-last-mile-public-transport-brand-tata-magic-crosses-three-lakh-sales-mark/

3-lakh
car