Loading...
press release
பத்திரிகை செய்திக் குறிப்பு பற்றிய விவரங்கள்

டாடா மோட்டார்ஸ் ஏஸ் மெகாவைத் துவங்குகிறது. இது புத்தம் புதிய புத்திசாலித்தனமான, சிறிய பிக்-அப் டிரக் ஆகும்

2015 ஆகஸ்டு 27

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • 1 டன் பாரம் ஏற்றி பல்வேறு நிலப்பகுதிகளிலும் எடுத்துச் செல்லக் கூடிய ஒரு உறுதியான வாகனம்.
  • 40 எச்பி வழங்கும் ஆற்றலுடன் 4வது தலைமுறை டிகோர் என்ஜின் கொண்டது.
  • இந்த வகுப்பில் சிறந்த வேகமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. இது விரைவில் சவாரியை எடுத்துவர உதவுவதால் அதிக சவாரிகளுக்கு வழிவகுக்கிறது
  • 1 லிட்டருக்கு 18.5** கிமீ தூரம் செல்லக் கூடியது.
  • சிறிய பிக்-அப் பிரிவில் குறைந்த இயக்கச் செலவு கொண்டது.

டாடா மோட்டார்ஸ் இன்று புதிய சிறிய பிக்-அப் வாகனமான டாடா ஏஸ் மெகாவை துவக்குவதை அறிவித்துள்ளது. ஏஸ் மெகா மேம்பட்ட செயல்திறன் கொண்டது. 1 டன் பாரம் ஏற்றுவதோடு சிறந்த தோற்றம், உறுதியான கேபின் கொண்டது. இது இந்த வகுப்பில் சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த உரிமையாளர் செலவைக் கொடுக்கிறது. இது சிறிய வர்த்தக வாகனப் (எஸ்சிவி) பிரிவில் ஒரு புதுமையான சரக்குப் போக்குவரத்து தீர்வாகும்.

டாடா ஏஸ் மெகா, இது அதிக சவாரிகள், அதிக பாரம் ஏற்றும் திறன், குறைந்த சுற்று நேரம், நகரங்களுக்கு இடையேயான மற்றும் நகரத்திற்கு உள்ளேயான தேவைகளைபூர்த்தி செய்தல், எந்த நிலப்பரப்பிலும் எளிதாக எடுத்துச் செல்லுதல் போன்றவற்றின் மூலமாக சரக்குப் போக்கு வரத்து இயக்குனர்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் சிறிய பிக்-அப் வேலைகளைச் சிறப்பாக செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது இந்தப் பிரிவில் ஒரு இயக்குனர் தனது தொழிலை அதிகரிக்க உதவுவதாக இருக்கும்.

ரூ. 4.31 லட்சம் தாணே எக்ஸ் ஷோரூம் விலையில் துவக்கப்பட்ட டாடா மெகா கவர்ச்சிகரமான அஸுர் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இந்த ஆற்றல் நிறைந்த சிறிய பிக்-அப் துவக்கத்தில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீஹார், ஒரிஸா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய ஏழு மாநிலங்களில் விற்பனை செய்யப்படும். அதன் பிறகு படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படும்.

டாடா மோட்டார்ஸ் லிட், வர்த்தக வாகனத் தொழில் பிரிவின் நிர்வாக இயக்குனரான திரு ரவி பிஷாரோடி,, "டாடா மோட்டார்ஸ் தனது பல்வேறு போர்ட்ஃபோலியோ மூலமாக இந்திய சிறிய வர்த்தக வாகனச் சந்தையில் வளர்ந்து வரும் முன்னோடி நிறுவனமாக உள்ளது. இந்தப் பிரிவில் சந்தையின் முன்னணி நிறுவனமாக உள்ளதன் பயனால் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை மிகவும் நன்றாக அறிவோம். ஏஸ் மெகா ஆழமான அறிவு மற்றும் வாடிக்கையாளரை புரிதலின் மூலமாக உருவாக்கப்பட்ட ஒரு வாகனமாகும். ஏஸ் மெகாவை அறிமுகப்படுத்துவதன் மூலம் இது லட்சக்கணக்கான தொழில் முனைவோர் மற்றும் நாடு முழுவதும் உள்ள சுமை ஏற்றுவோரின் முக்கிய தொழில் பங்குதாரராக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். டாடா ஏஸ் வாகனக் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைப் போலவே, இது தொழில்முனைவோரின் அடிப்படை தொழில் இயக்கங்களை உறுதியாக பூர்த்தி செய்யும் மற்றும் உச்ச வரிசையில் முன்னேற்றத்தை அதிகரிக்கும்" என்று கூறினார்.

டாடா மோட்டார்ஸ் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தனது வர்த்தக வாகனங்களை வடிவமைப்பு, செயல்திறன், எரிபொருள் என்ற மூன்று அளவுகோல்களை வைத்து உருவாக்கி வருகிறது. டாடா ஏஸ் மெகா இந்த முக்கிய அளவுகோல்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இவை மேம்பட்ட செயல்திறன், அதிக வேகம் மற்றும் பாரம் ஏற்றுதல் காரணமாக அதிகரித்த லாபம், உரிமையாளருக்கு குறைந்த செலவு, மேம்பட்ட ஸ்டெயில் மற்றும் வசதியைத் தருகிறது.

டாடா ஏஸ் மெகா இந்த வகுப்பில் சிறந்த ஆற்றல், வேகம், எரிபொருள் சிக்கனத்தைத் தருகிறது. இது நவீன 4வது தலைமுறை 2 சிலிண்டர் 800 சிசி டிகோர் என்ஜினுடன் கிடைக்கிறது. இது 40 எச்பி ஆற்றலைத் தருகிறது. லேசான எடை கொண்ட அலுமினியம் என்ஜின், புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்ட 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழவழப்பான ஓட்டுதல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்கிறது. பெரிய பிரேக்-கள் இந்த வகுப்பில் சிறந்த பிரேக் ஆற்றலை உறுதி செய்து வாகனத்திற்கு நீண்ட ஆயுளை தருகிறது. உறுதியான மற்றும் பலமான முன்பக்க மற்றும் பின்பக்க ஸ்பிரிங் சஸ்பென்ஷன் மற்றும் ஆக்சில்கள் டாடா ஏஸ் மெகாவை பல்வேறு பாரத்திற்கும் சாலைகளுக்கும் ஏற்ற வாகனமாக ஆக்குகிறது. இந்த வகுப்பில் சிறந்த வேகமான மணிக்கு 90 கிமீ வேகம் சவாரிக்கான நேரத்தைக் குறைத்து அதிக சவாரிகளை உறுதி செய்கிறது. பொருளாதாரத்தைப் பொறுத்த வரை தொழிலில் எரிபொருள் விலை பெரிய செலவாக உள்ள காரணத்தால், டாடா ஏஸ் மெகா வாடிக்கையாளர்களுக்கு லிட்டருக்கு 18.5 கிமீ** என சிறந்த எரிபொருள் சிக்கனத்தைத் தருகிறது.

ரசனையுடன் வடிவமைக்கப்பட்ட உட்புறத்துடன் டாடா ஏஸ் மெகா வசதியான கேபினுடன் கிடைக்கிறது. வசதியாக அமைக்கப்பட்டுள்ள ஓட்டுனர் இடம், பூட்டுடன் கூடிய கையுறை பெட்டி, இசைக் கருவிக்கான இடம், மொபைல் சார்ஜிங் வசதி, டிஜிட்டல் கிளாக், முழு ஃபேப்ரிக் சீட்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. முன்பக்கம், பின்பக்கம் என உறுதியான ஆக்சில்களுடன் லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன், டிரக் போன்ற கட்டமைப்பு போன்ற சிறப்பம்சங்கள் டாடா ஏஸ் மெகாவை பல்வேறு பயன்பாடுகளுக்குமான பொருத்தமான வாகனமாக ஆக்குகிறது. வெளிப்புறத்தில், ஸ்டெயிலான பாடி, கலர் செய்யப்பட்ட பம்பர், புதிய பாதுகாப்பு வீல் ஆர்ச் ஐபுரோக்கள், புதிய ஸ்போர்டி பாடி கிராபிக்ஸ், இருபுறமும் அகன்ற கோணத்தில் ஓஆர்விஎம் வாகனத்தின் தோற்றத்தை மேலும் அழகுபடுத்துகின்றன.

வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச மதிப்பை கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள டாடா ஏஸ் மெகா புதிய உறுதிசெய்யப்பட்ட பாடி மூலமாக 1 டன் பாராத்தை ஏற்றக் கூடியது. இந்த வாகனம் சந்தைக்கான பாரம் ஏற்ற பொருத்தமான அளவிலான கார்கோ டெக் கொண்டது. 14 அங்குல டயர்கள், 175 மிமீ உயர் கிரவுண்ட் கிளியரன்ஸ் எந்தவிதமான நிலப்பரப்பிலும் வாகனத்திற்கு நிலைத்தன்மையை கொடுக்கிறது.

வாகனத்தின் சேவை மற்றும் பராமரிப்பு வாடிக்கையாளர்களின் நிம்மதிக்கு உத்தரவாதம் அளிக்கிறது. 1800-க்கும் அதிகமான சேவை மையங்களுடன் சராசரியாக 50 கிமீ ஒரு ஒர்க்-ஷாப் மூலமாக டாடா மோட்டார்ஸ் நாட்டில் பரவலான சேவை நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது. இந்த வாகனம் 2 ஆண்டுகள்/ 72000 கிலோமீட்டர்கள் (எது முன்னதாக நடைபெறுகிறதோ அது) வரையான உத்தரவாதத்துடன் வருகிறது.

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் மினி டிரக் கருத்தை முன்னெடுத்துச் செல்வதில் சந்தையில் முற்றிலும் புதிய பிரிவை உருவாக்குவதற்கான வாடிக்கையாளரின் மறைமுகத் தேவையை அடையாளம் கண்டதும் 2005-ல் துவக்கிய டாடா ஏஸ் ஒரு பொறியியல் அற்புதமாகும். அப்போதிருந்து இது இந்திய தொழில் முனைவோர் மற்றும் சிறு தொழில் செய்வோருக்கு பிடித்தமானதாக இருந்து வருகிறது. சந்தையில் 80%-க்கும் அதிகமான பங்கு கொண்டதாக இருந்து வருகிறது.

இந்த புதுமை வாகனத்தின் வெற்றியை குறித்து பேசும்போது கடந்த பத்தாண்டுகளில் டாடா ஏஸ் குடும்ப வாகனங்கள் உலகில் 15 லட்சம் விற்பனை குறியீட்டை எட்டியுள்ளது. இன்று இந்தியாவில் விற்பனையாகும் ஐந்து வர்த்தக வாகனங்களில் ஒன்று டாடா ஏஸ் வாகன குடும்பத்தைச் சேர்ந்ததாக உள்ளது. இந்த வாகனக் குடும்பம் தொடர்ச்சியாக சந்தையில் உள்ள இடைவெளியை நிரப்பி வருகிறது. இந்த தளம் தற்போது வரை என்ஜின் வகை, என்ஜின் ஆற்றல், பாடி வரையறைகளை அடிப்படையாகக் சுமார் 12 வழங்குதல்களை உற்பத்தி செய்துள்ளது. இதனுடைய வெற்றிகரமான 10வது ஆண்டில் புதுமையான போக்குவரத்து தீர்வான டாடா ஏஸ் மெகாவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏஸ் குடும்ப வாகனங்கள் பலரின் வாழ்க்கையை உயர்த்த உதவியுள்ளது. இது இந்தியாவில் பல தொழில் முனைவோர் மற்றும் சிறு தொழில் வளர்ச்சிக்கும் உதவியுள்ளது. மிகப்பெரிய மற்றும் இன்னும் வளர்ந்து வரும் நெட்வொர்க் உடன் புதிய துவக்கங்கள் மற்றும் குறிப்பிட்ட சந்தை தலையீடுகளுடன் டாடா மோட்டார்ஸ் எஸ்சிவி மற்றும் தொலை தூரப் போக்குவரத்து பிரிவில் மிகப்பெரிய நடவடிக்கைகளுடன் தொடர்ந்து முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது.

டாடா மோட்டார்ஸ் பற்றி

டாடா மோட்டார்ஸ் லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய வாகன நிறுவனமாகும். இது 2014-15 ஆண்டுகளில் மொத்தமாக ரூ. 2,62,796 கோடிகள் (யுஎஸ்டி 42.04) வருவாய் ஈட்டித் தந்துள்ளது. துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களின் மூலமாக டாடா மோட்டார்ஸ் யுகே, தென் கொரியா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தோனிஷியா நாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது. இந்த தொழில் இரண்டு முக்கிய பிரிட்டிஷ் பிராண்ட்களை உள்ளடக்கிய ஜாகுவார் லேண்ட் ரோவர். இது இந்தியாவில் ஃபியட் நிறுவனத்துடன் தொழிற்துறை முனைவை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் 80 லட்சம் டாடா வாகனங்கள் இயங்குவதோடு டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் வர்த்தக வாகனத்தில் முன்னணி நிறுவனமாகவும் பயணிகள் வாகனத்தில் உச்ச நிறுவனமாகவும் உள்ளது. டாடா கார்கள், பேருந்துகள் மற்றும் லாரிகள் ஐரோப்பா, ஆப்பரிக்கா, மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிஐஎஸ் மற்றும் ரஷ்யாவில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆதாரம் : - https://www.tatamotors.com/press/tata-motors-launches-the-ace-mega-an-all-new-smart-small-pick-up-truck-2/

tata-ace-mega