டாடா மோட்டார்ஸ், தனது மிகவும் பிரபலமான சிறு வாகனமான டாடா ஏஸின் வெற்றியை கொண்டாடும் வகையில் புதிய மூன்றின் திருவிழா பிரச்சாரத்தை துவங்குவதை அறிவித்துள்ளது. இன்று வரை நிறுவனம் 20 லட்சத்திற்கும் மேலான டாடா ஏஸ் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை ஏஸ் பிரிவைச் சேர்ந்த சிறு வர்த்தக வாகனம், ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. இந்தச் சாதனையை கொண்டாடுவதன் மூலம், நிறுவனம் எஸ்சிவி வாங்குவோருக்கு மூன்று கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது.
தற்பாதைய திருவிழாக் காலத்தின்போது வாங்கப்படும் ஒவ்வொரு டாடா மோட்டார்ஸ் எஸ்சிவி வாகனத்தின் மீதும், வாங்குபவர் ஒரு இலவச தங்க நாணயம், ரூ.10 லட்சத்திற்கான தனிநபர் காப்பீட்டைப் பெறுவார். மேலும் வாகனம் வாங்கப்பட்ட பகுதியைப் பொறுத்து கவர்ச்சிகரமான மாதாந்திர நுகர்வோர் திட்டத்தைப் பெறுவார்.
இந்த சலுகை நவம்பர் 30 வரை புதிதாக துவங்கப்படும் டாடா ஏஸ் கோல்டு உட்பட வாங்கப்படும் எஸ்சிவி வகை வர்த்தக வாகனங்களுக்குச் செல்லுபடியாகும்.
பிரச்சாரம் பற்றிப் பேசிய, டாடா மோட்டார்ஸின் தலைமை விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் அதிகாரியான திரு ஆர்.டி. வாசன், "2005-ல் இதை தொடங்கியதிலிருந்து, இந்தியாவில் எஸ்சிவி பிரிவில் டாடா ஏஸ் முன்னணியில் இருந்ததோடு ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர் சரக்கு எடுத்துச் செல்லுவதில் தங்கள் தொழில் கனவுகளை நிறைவேற்ற உதவியது" என்று பேசினார்.
"ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் விற்பனையாகும் வாகனம் என்ற பிரம்மிக்கத் தக்க அளவுகோலை எட்டியதை கொண்டாடும் வகையில் புதிய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான சலுகைகளை அறிமுகப்படுத்தி நாங்கள் இந்த விழாவை கொண்டாடுகிறோம். ஏற்கனவே இந்த பிரச்சாரத்தால் ஷோரூம்களில் வாகனம் வாங்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த இரண்டு மாதங்களில் வாங்கப்படும் ஒவ்வொரு எஸ்சிவி மீதாகவும் டாடா மோட்டார்ஸ் வழங்கும் கவர்ச்சிகரமான ஊக்கத் தொகை மற்றும் திருவிழா காலத்தின் துவக்கதில் எல்லா டாடா எஸ்சிவி விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றும் அவர் சொன்னார்.
டாடா மோட்டார்ஸ், இந்த திருவிழா காலத்தில் வாங்கக் கூடியவர்களை கவர, அச்சு, ரேடியோ மற்றும் டிஜிட்டல் ஊடகம் மூலமான சந்தைப்படுத்தும் பிரச்சாரத்தை துவக்கியுள்ளது. இது தொடர்ந்து இந்தப் பிரிவில் சிறந்த தயாரிப்பை வழங்கும் வாக்குறுதியை தக்க வைத்து வருகிறது.
சிறு வர்த்தக வாகனங்களின் ஏஸ் வகை மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் பல்வேறு சூழல்களிலும் பராமரிக்க சௌகரியமாக மற்றும் எளிதாக அனுகூலமான செயல்திறனை வழங்குகிறது. இந்த வாகனங்கள் சுத்தமான இந்தியாவுக்கான கனவுத் திட்டமான ஸ்வச்ச பாரத்தை நிலைநிறுத்தும் வகையில் பல்வேறு தொழில் தேவைகள், கேட்டரிங் முதல் ஈ-காமர்ஸ் வழங்குதல்களை செய்வதற்கு ஏற்ப வடிவமைக்கத் தக்கவை.