Loading...
press release
பத்திரிகை செய்திக் குறிப்பு பற்றிய விவரங்கள்

புதிய டாடா ஏஸ் கோல்டுஇந்தியாவில் துவக்க விலையாக ரூ. 3.75-ல் துவக்கப்பட்டுள்ளது : டாடாவின் புதிய "குட்டி யானை" பற்றிய விவரங்கள்.

2018 ஏப்ரல் 13-ல் வெளியிடப்பட்டது.

2005 மே மாத்தில் துவங்கியதிலிருந்து "குட்டி யானை" என்று பெயர்பெற்ற நான்கு சக்கர வாகனத்தில் டாடா ஏஸ் கோல்டு முதல் வகையாகும். நிறுவனம் துவக்கத்தின் முதல் ஆண்டிலிருந்து இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இந்திய வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், தனது ஒரு டன்னுக்கும் குறைவான மினி டிரக் டாடா ஏஸ் லேசான வர்த்தக வாகனங்களின் புதிய வடிவத்தை ரூ.3.75% லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) வெளியிட்டுள்ளது. டாடா ஏஸின் புதிய வடிவத்தில் அதிக சிறப்பம்சங்கள் உள்ளன. நிறுவனம் இன்று முதல் விற்பனையை துவக்கியுள்ளது. 2005 மே மாத்தில் துவங்கியதிலிருந்து "குட்டி யானை" என்று பெயர்பெற்ற நான்கு சக்கர வாகனத்தில் டாடா ஏஸ் கோல்டு முதல் வகையாகும். நிறுவனம் முதல் ஆண்டில் 30,000 வாகனங்களையும், அதன் பின் 20 லட்சத்திற்கும் மேலான வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

சந்தையில் 68 % விற்பனையின் மூலமாக மினி டிரக் பிரிவில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ள டாடா மோட்டார்ஸ், "அதிகரித்த சிறப்பம்சங்கள் கொண்ட, டாடா ஏஸ் கோல்டை கவர்ச்சிகரமான ரூ.3.75 லட்சத்தில் அறிமுகப்படுத்தியது இதனை எங்கள் வாடிக்கையாளர்கள் மேலும் விரும்புவதாக ஆக்கும்" என்று அந்த அறிக்கையில் டாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகன தொழில் பிரிவின் தலைவரான கிரிஷ் வாக் தெரிவித்துள்ளார்.

நிறுவனம் ஏஸ் கோல்டு வாடிக்கையாளர்களுக்கு மதிப்புக் கூட்டுதல் சேவைகளை வழங்குகிறது. இதில் நாள் முழுவதுமான பழுது பார்க்கும் திட்டம், இலவச காப்பீட்டின் விசுவாசத் திட்டம், லாயல்டி புள்ளிகளை மீட்டுப் பெறுதல், குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக பழுது நீக்கித்தருவதற்கான அர்ப்பணிப்பு முதலானவை அடங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில், புதிய தொழில்களைச் செய்தல், வேலை வாய்ப்பை உருவாக்குதல், தொழில் முனைவோர்களை தூண்டுதல் மூலமாக ஏஸ் வாகனங்கள் சரக்குப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன என்று டாடா மோட்டார்ஸ் சொல்கிறது. நாட்டில் நகர்ப்புறம் அல்லது கிராமப்புற சந்தைகளில் உள்ள மக்கள் இந்த வாகனத்தைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளாக 3 நிமிடங்களில் ஒரு டாடா ஏஸ் விற்பனை செய்யப்படுகிறது. நிறுவனம் தற்போது ஏஸின் பல்வேறு பயன்பாடுகளுடன் 7 வகைகளை வழங்குகிறது.

பிஎஸ்ஈ மற்றும் என்எஸ்ஈ-யிலிருந்து நேரடி பங்குச் சந்தை விலைகளைப் பெறுங்கள் மற்றும் புதிய என்ஏவி, பரஸ்பர நிதிகளின் போர்ட்ஃபோலியோ-க்கள், வருமான வரி கால்குலேட்டர் மூலமாக உஙகள் வரியை கணக்கிடுங்கள், சந்தையின் உச்ச நிறுவனங்கள், உச்ச கட்ட இழக்கும் நிறுவனங்கள் மற்றும் சிறந்த ஈக்விட்டி நிதிகளை தெரிந்துெகாள்ளுங்கள்.

ஆதாரம் : - https://www.financialexpress.com/auto/car-news/new-tata-ace-gold-launched-in-india-at-a-starting-price-of-rs-3-75-lakh-details-on-tatas-new-chhota-hathi/1130785/