Loading...
press release
பத்திரிகை செய்திக் குறிப்பு பற்றிய விவரங்கள்

இந்தியாவின் நம். 1 மினி டிரக்கான டாடா ஏஸ் விற்பனையாகும் ஐந்து வர்த்தக வாகனங்களில் ஒன்று என்ற பத்தாண்டு நம்பிக்கையைப் பூர்த்தி செய்கிறது.

2015 ஜூலை 27-லிருந்து

டாடா மோட்டார்ஸ் இன்று சிறிய வர்த்தக வாகனமான(எஸ்சிவி) டாடா ஏஸின் பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. 2005-ம் ஆண்டு துவக்கப்பட்ட இது இப்போது மிகவும் வெற்றிகரமான வர்த்தக வாகனமாக உள்ளது.

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் மினி டிரக் கருத்தை முன்னெடுத்துச் செல்வதில் சந்தையில் முற்றிலும் புதிய பிரிவை உருவாக்குவதற்கான வாடிக்கையாளரின் மறைமுகத் தேவையை அடையாளம் கண்டு துவக்கிய டாடா ஏஸ் ஒரு பொறியியல் அற்புதமாகும். அப்போதிருந்து இது இந்திய தொழில் முனைவோர் மற்றும் சிறு தொழில் செய்வோருக்கு பிடித்தமானதாக இருந்து வருகிறது. சந்தையில் 80%-க்கும் அதிகமான பங்கு கொண்டதாக இருந்து வருகிறது. இந்த புதுமை வாகனத்தின் வெற்றியை குறித்து பேசும்போது கடந்த பத்தாண்டுகளில் டாடா ஏஸ் குடும்ப வாகனங்கள் உலகில் 15 லட்சம் விற்பனை குறியீட்டை எட்டியுள்ளது. இன்று இந்தியாவில் விற்பனையாகும் ஐந்து வர்த்தக வாகனங்களில் ஒன்று டாடா ஏஸ் வாகன குடும்பத்தைச் சேர்ந்ததாக உள்ளது.

விழாவின்போது பேசிய டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனங்கள் தொழில் பிரிவின் மூத்த துணைத் தலைவரான திரு ஆர். ராமகிருஷ்ணன், "ஏஸ் வெற்றிகரமான பத்தாண்டுகளை நிறைவு செய்தது உண்மையிலேயே குறிப்பிடத் தக்க மைல்கல் ஆகும். சந்தை மற்றும் வாடிக்கையாளரை ஆழமாகப் புரிந்து கொண்டதன் பலனாக உருவான ஏஸ் ஒரு புரட்சிகரமான தயாரிப்பு ஆகும். இது வெற்றியின் நீண்ட பயணம் என்பதை புரிந்துகொள்ளும் அதேவேளையில், ஏஸ் குடும்ப வாகனங்கள் தொலைதூரப் பயணத்திற்கான விருப்பத் தேர்வாக இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறோம். இது துவக்கத்திலிருந்து உலகம் முழுவதுமாக 15 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தொழில் முனைவோரையும் வேலை வாய்ப்பை உருவாக்கவும் காரணமாக உள்ளது. இந்த பிராண்ட் மீது நம்பிக்கை வைத்து தங்கள் தொழிலை அதிகரித்துள்ள 10 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்கள் இந்த பயணத்தை விசேஷமாக்கியுள்ளனர். இந்த பிராண்டை நம்பும் எங்கள் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் எங்கள் நன்றிகைளத் தெரிவிக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

ஏஸ் குடும்ப வாகனங்கள் பலரின் வாழ்க்கையை உயர்த்த உதவியுள்ளது. இது இந்தியாவில் பல தொழில் முனைவோர் மற்றும் சிறு தொழில் வளர்ச்சிக்கும் உதவியுள்ளது. இந்த வாகனக் குடும்பம் தொடர்ச்சியாக சந்தையில் உள்ள இடைவெளியை நிரப்பி வருகிறது. இந்த தளம் தற்போது வரை என்ஜின் வகை, என்ஜின் ஆற்றல், பாடி வரையறைகளை அடிப்படையாகக் சுமார் 12 வழங்குதல்களை உற்பத்தி செய்துள்ளது. இன்று இந்த வாகனக் குடும்பத்தில் ஏஸ் எச்டி, ஏஸ் எக்ஸ், ஏஸ் சிஎன்ஜி, ஏஸ் ஹைடெக், ஏஸ் டிகோர் என்ஏ, ஏஸ் டிகோர் டர்போ, ஏஸ் ஜிப் மற்றும் இந்தக் குடும்பத்தின் புதிய சேர்க்கையான சூப்பர் ஏஸ் மின்ட் ஆகியவை இடம் பெறுகின்றன. தொலைதூர பயணிகள் போக்குவரத்துப் பிரிவில் மேஜிக் எச்டி, மேஜிக் சிஎன்ஜி, மேஜிக் ஐஆர்ஐஎஸ் மற்றும் மேஜிக் ஐஆர்ஐஎஸ் சிஎன்ஜி கொண்டு வரப்பட்டுள்ளன.

தொழிற்துறையில் ஏஸ் மிகவும் பன்முகத் தன்மை கொண்ட சிறிய வர்த்தக வாகனம் ஆகும். பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கான வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை வழங்குகிறது. ஏஸின் வாங்கத் தக்க விலை, ஆயுள் முழுவதுமான குறைந்த பராமரிப்புச் செலவு சுயதொழில் செய்வோரை அதிகரித்தது. மேலும் நகரம்/ வளரும் நகரம்/ கிராமப்புறம் என்று சிறு தொழில் வளர உதவியது.

டாடா ஏஸ் குடும்ப வாகனங்களின் புகழ் பரவப் பரவ டாடா மோட்டார்ஸ் நாடு முழுவதும் கால் பரப்பத் தொடங்கியது. தற்போது சுமார் 1,600 ஷோரூம்களில் ஏஸ் வகைகள் விற்பனை ஆகின்றன. உற்பத்தி திறனும் வேகமாக வளர்ந்து வருகிறது. டாடா ஏஸ் 2004-05-ம் ஆண்டு துவங்கப்பட்டது. புணேயில் ஒவ்வொரு ஆண்டும் 30,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பந்த்நகர் (உத்தர்காண்ட்) தொழிற்சாலையில் இன்று ஆண்டுக்கு 5,00,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிகரிக்கும் தேவையை கருத்தில்கொண்டு 2012-ம் ஆண்டு, டாடா மோட்டார்ஸ் தர்வாடில் உள்ள தனது புதிய தொழிற்சாலையில் டாடா ஏஸ் ஜிப் வாகனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது.

நாடு இன்று "இந்தியாவில் உற்பத்தியை" கொண்டாடி வருகையில், 2006-ல் தனது முதல் ஏற்றுமதியை துவங்கியதிலிருந்து இன்று வெற்றிகரமாக உலக எல்லைகளை கடந்து விற்பனை செய்கிறது என்பதில் டாடா மோட்டார்ஸ் பெருமைப்படுகிறது. இன்று, டாடா மோட்டார்ஸ் தெற்கு ஆசிய, ஆப்பிரிக்கா மற்றும் ஏசியன் பகுதிகளில் 28 நாடுகளில் கால் பதித்து 1,00,000 விற்பனையை எட்டியுள்ளது.

ஏஸ் குடும்ப வாகனம், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய டிசைநெக்ஸட், பெர்ஃபார்மன்ஸ்நெக்ஸ்ட், ஃப்யூயல்நெக்ஸ்ட் என்ற மூன்று முக்கிய அடிப்படையைக் கொண்டு தொடர்ந்து வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.

மிகப்பெரிய மற்றும் அதிகரிக்கும் நெட்வொர்க் உடன், புதிய வாகனங்களை வெளியிடுவது, குறிப்பிட்ட சந்தை தலையீடுகள் மூலமாக டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து முக்கிய நிறுவனமாக இருந்து வருகிறது. சிறிய வர்த்தக வாகன தொழிற்துறையில் வளர்ந்து வருகிறது.

டாடா மோட்டார்ஸ் பற்றி

டாடா மோட்டார்ஸ் லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய வாகன நிறுவனமாகும். இது 2014-15 ஆண்டுகளில் மொத்தமாக ரூ. 2,62,796 கோடிகள் (யுஎஸ்டி 42.04) வருவாய் ஈட்டித் தந்துள்ளது. துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களின் மூலமாக டாடா மோட்டார்ஸ் யுகே, தென் கொரியா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தோனிஷியா நாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது. இந்த தொழில் இரண்டு முக்கிய பிரிட்டிஷ் பிராண்ட்களை உள்ளடக்கிய ஜாகுவார் லேண்ட் ரோவர். இது இந்தியாவில் ஃபியட் நிறுவனத்துடன் தொழிற்துறை முனைவை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் 80 லட்சம் டாடா வாகனங்கள் இயங்குவதோடு டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் வர்த்தக வாகனத்தில் முன்னணி நிறுவனமாகவும் பயணிகள் வாகனத்தில் உச்ச நிறுவனமாகவும் உள்ளது. டாடா கார்கள், பேருந்துகள் மற்றும் லாரிகள் ஐரோப்பா, ஆப்பரிக்கா, மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிஐஎஸ் மற்றும் ரஷ்யாவில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆதாரம் : - https://www.autopartsasia.in/tata-motors-celebrates-tenth-anniversary-of-ace/