Loading...
press release
பத்திரிகை செய்திக் குறிப்பு பற்றிய விவரங்கள்

டாடா ஏஸ் இந்தியாவில் புதிய மினி டிரக் பிரிவை உருவாக்க உள்ளது

2005 மே 06-ல் வெளியிடப்பட்டது

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், இன்று பெங்களூரில் ஒரு கண்கவர் விழாவில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் பன்முகத் திறன் கொண்ட, டீசலால் இயக்கப்படும் மினி டிரக்கான டாடா ஏஸின் விற்பனையை துவக்கியது.

பிஎஸ் II-க்கான (கொச்சி மற்றும் பெங்களூர் எக்ஸ் ஷோரூம் முறையே) விலையாக ரூ.2.25 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மினி டிரக் ஆற்றல்மிக்க 16பிஎச்பி 700சிசி ஐடிஐ டீசல் என்ஜினால் இயக்கப்படுகிறது. இது கிராமம் மற்றும் நகர்ப்புறம் என இரண்டு பகுதிகளுக்கும் பொருத்தமானது. ஏஸ் அதிக செயல்திறன், குறைந்த பராமரிப்புச் செலவு, பாதுகாப்பானது. மேலும் சௌகரியமான சவாரி மற்றும் ஓட்டுதலை உறுதி செய்யும் கார் போன்ற அம்சங்களைக் கொண்டது. ஏஸின் துவக்கத்துடன், டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகன தொழிற்துறையில் ஒரு புதிய பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாடா மோட்டார்ஸின் தலைவரான ரத்தன் என் டாடா, "நாங்கள் எப்போதுமே தேவைக்கேற்ப தயாரிப்புகளை உருவாக்கி வெளியிட விரும்புகிறோம். சரக்குகளையும் மக்களையும் எடுத்துச் செல்ல ஒரு பாதுகாப்பான, நம்பகமான, பன்முகத்தன்மை கொண்ட 4 சக்கர ஒரு இலகுரக வர்த்தக வாகனத்திற்கான அதிகரிக்கும் தேவை இருக்கிறது என்பதை நாங்கள் கண்டுணர்ந்தோம். நாங்கள் இந்தியாவில் பேரூர்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும் ஒரு நகரத்திற்குள்ளேயான போக்குவரத்து வாகனத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். டாடா ஏஸ் அதன் உரிமையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.

டாடா ஏஸின் விற்பனை படிப்படியான முறையில் துவக்கப்படும். துவக்கத்தில், இந்த மினி டிரக் நாடு முழுவதும், மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் உள்ள வினியோகஸ்தர்களின் மூலமாக விற்பனை செய்யப்படும்.

டாடா ஏஸ்-க்கு 36,000 கிமீ/ 12 மாத உத்தரவாதம் கொடுக்கப் படுகிறது. ஏஸ் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை உறுதி செய்ய நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள விற்பனை/ உதிரி பாகங்கள்/ சிறு நகரங்களில் கூட அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் சேவையைப் பெறலாம்.