Loading...
press release
பத்திரிகை செய்திக் குறிப்பு பற்றிய விவரங்கள்

இலங்கையில் டாடா மோட்டார்ஸின் மினி டிரக்கான "டாடா ஏஸின்" விற்பனை துவக்கப்பட்டது

2006 மே 28-ல் வெளியிடப்பட்டது

இலங்கையில் டாடா மோட்டார்ஸ் உற்பத்தி செய்யும் 1 டன்னுக்கும் குறைவான பாரம் ஏற்றும் டாடா ஏஸின் விற்பனை துவக்கப்பட்டது. ஏஸ் விற்பனை துவங்கப்படும் முதல் நாடாக இலங்கை உள்ளது. ஏஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் முதல் வாகனமாக உள்ளது.

2005 மே மாதம் இந்தியாவில் துவக்கப்பட்டதிலிருந்து ஏஸ் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இது இந்திய வர்த்தக வாகன தொழிலில் ஒரு புதிய பிரிவை ஏற்படுத்தியது.

ஏஸ் வாகனம் இரட்டை சிலிண்டர் 16பிஎஸ் ஐடிஐ 700சிசி டீசல் என்ஜின் கொண்ட ஆற்றல் மிக்கதாக உள்ளது. இது கிராமம் மற்றும் நகர்ப்புறம் என இரண்டு பகுதிகளுக்கும் பொருத்தமானது. இது பலவகை பாரங்களை ஏற்றிச் செல்லக் கூடியது. 4.3 குறுக்கு வட்டத்தில் திரும்பக் கூடிய இது குறுகலான சந்துகளிலும் செல்லக் கூடியது.

ஏஸ் அதிக செயல்திறன், குறைந்த பராமரிப்புச் செலவு, பாதுகாப்பானது. மேலும் சௌகரியமான சவாரி மற்றும் ஓட்டுதலை உறுதி செய்யும் கார் போன்ற அம்சங்களைக் கொண்டது. அழகிய இரட்டை டோன் கொண்ட சீட்கள், தெளிவான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பயன்பாட்டு டிரேகள், மேகஜின் பாக்கெட்கள், இரட்டை பிளேட், டிவின்-ஸ்பீட் வைப்பர்கள் மற்றும் கூட்டு ஸ்விட்ச்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய காரின் சிறப்பம்சங்களைக் கொண்ட ஸ்டீல் கேபின் உள்ளது. சௌகரியமாக அமைக்கப்பட்டுள்ள கியர் ஷிஃப்ட் மற்றும் பார்க்கிங் பிரேக் சவாரி மற்றும் ஓட்டுவதை எளிதாக்குகிறது. டாடா ஏஸ், முன்பக்க மோதல், கூரை நொறுங்குதல், பக்கவாட்டுப் பகுதியின் உறுதி என அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுகிறது. ஓட்டுனர், துணை ஓட்டுனரின் பாதுகாப்பை உறுதி செய்ய சீட் பெல்ட்கள் வழக்கமான அம்சமாகும். வேகமாக ஓட்டிச் செல்லும்போது திடீரென பிரேக் போட டிஸ்க் மற்றும் டிரம் பிரேக்-கள் உதவுகின்றன. பெரிய முன்பக்க கண்ணாடி மற்றும் ஜன்னல் கண்ணாடி அமைப்புகள் பார்வையை தெளிவாக்குகின்றன.

ஆதாரம் : - https://ace.tatamotors.com/mini-truck/media-room/press-release.aspx