Loading...
press release
பத்திரிகை செய்திக் குறிப்பு பற்றிய விவரங்கள்

டாடா மோட்டார்ஸ், நேபாள் டாடா மோட்டார்ஸில் "டாடா ஏஸ்" மினி டிரக் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான டாடா ஜென்யூன் பார்ட்ஸ் அமைப்பை சிப்ராடியில் துவக்கியுள்ளது.

2007 ஏப்ரல் 23-ல் வெளியிடப்பட்டது

டாடா மோட்டார்ஸ் தனது பிரபல மினி டிரக்கான டாடா ஏஸை நேபாளில் துவக்கியுள்ளது. நேபாளம் டாடா மோட்டார்ஸ் இந்த வாகனத்தை துவக்கியதில் இலங்கைக்கு அடுத்தபடியான நாடாகும். டாடா ஏஸ் மலைப்பகுதியில் இயக்குவதற்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வாகனமாகும்.

2005-லிருந்து இந்தியா முழுவதுமிருந்தும் டாடா ஏஸ் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது வர்த்தக வாகனப் போக்குவரத்தின் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. துவக்கத்திலிருந்து, டாடா ஏஸ் இந்தியா மற்றும் இலங்கையில் 96,000 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.

டாடா ஏஸ் வாகனம் இரட்டை சிலிண்டர் 16பிஎச்பி ஐடிஐ 700சிசி டீசல் என்ஜின் கொண்ட ஆற்றல் மிக்கதாக உள்ளது. இது கிராமம் மற்றும் நகர்ப்புறம் என இரண்டு பகுதிகளுக்கும் பொருத்தமானது. இந்த 4 சக்கர வாகனம் பலவகை பாரங்களை ஏற்றிச் செல்லக் கூடியது. 4.3 குறுக்கு வட்டத்தில் திரும்பக் கூடிய இது குறுகலான சந்துகளிலும் செல்லக் கூடியது. டாடா ஏஸ் அதிக செயல்திறன், குறைந்த பராமரிப்புச் செலவு கொண்ட, பாதுகாப்பான மற்றும் நம்பகமான மினி டிரக் ஆக உள்ளது. இதனுடைய கார் போன்ற சிறப்பம்சங்கள் சௌகரியமான சவாரி மற்றும் ஓட்டுவதை உறுதி செய்கிறது.

டாடா ஏஸ் வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகிய இரட்டை டோன் கொண்ட சீட்கள், தெளிவான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பயன்பாட்டு டிரேகள், மேகஜின் பாக்கெட்கள், இரட்டை பிளேட், டிவின்-ஸ்பீட் வைப்பர்கள் மற்றும் கூட்டு ஸ்விட்ச்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய காரின் சிறப்பம்சங்களைக் கொண்ட ஸ்டீல் கேபின் உள்ளது. சௌகரியமாக அமைக்கப்பட்டுள்ள கியர் ஷிஃப்ட் மற்றும் பார்க்கிங் பிரேக் சவாரி மற்றும் ஓட்டுவதை எளிதாக்குகிறது. டாடா ஏஸ், முன்பக்க மோதல், கூரை நொறுங்குதல், பக்கவாட்டுப் பகுதியின் உறுதி என அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுகிறது. ஓட்டுனர், துணை ஓட்டுனரின் பாதுகாப்பை உறுதி செய்ய சீட் பெல்ட்கள் வழக்கமான அம்சமாகும். வேகமாக ஓட்டிச் செல்லும்போது திடீரென பிரேக் போட டிஸ்க் மற்றும் டிரம் பிரேக்-கள் உதவுகின்றன. பெரிய முன்பக்க கண்ணாடி மற்றும் ஜன்னல் கண்ணாடி அமைப்புகள் பார்வையை தெளிவாக்குகின்றன. இந்த அம்சங்கள் அனைத்தும் டீசல் சிக்கனம் மற்றும் சிறந்த மைலேஜ் உடன் கிடைக்கின்றன.

டாடா ஏஸிற்கு 36,000 கிமீ/ 12 மாத உத்தரவாதம் கொடுக்கப்படுகிறது. மேலும் நேபாளத்தில் 20 சர்வீஸ் ஸ்டேஷன்களின் மூலம் பரவலான உதிரி பாகங்கள் மற்றும் சேவை நெட்வொர்க் உடன் ஆதரவளிக்கப்படுகிறது. நேபாளத்தில் டாடா மோட்டார்ஸின் வினியோகஸ்தரான சிப்ராடி டிரேடிங் மூலமாக டாடா ஏஸ் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் நாற்பது ஆண்டுகளாக நேபாளத்தில் செயல்பட்டு வருகிறது. டிரக்-கள், பஸ்கள், பிக்-அப்கள், பயணிகள் கார்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக வாகனங்களும் நேபாளத்தில் கிடைக்கின்றன.

ஆதாரம் : - https://www.tatamotors.com/press/tata-motors-launches-mini-truck-tata-ace-in-nepal/