Loading...
press release
பத்திரிகை செய்திக் குறிப்பு பற்றிய விவரங்கள்

வெறும் 2,680 நாட்களில் டாடா ஏஸ் பத்து லட்சம் விற்பனை குறியீட்டை எட்டியது

2012 நவம்பர் 08

டாடா ஏஸ் பத்து லட்சத்தில் ஒரு கருத்தாக உள்ளது, தற்போது ஒரு லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.

2005 மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா ஏஸ், இந்தியாவின் முதல் மினி டிரக் ஆகும். அதன் துணை வாகனமான டாடா மேஜிக் 2007 ஜூனில் வெளியிடப்பட்டது. இவை இரண்டும் இணைந்து 2012-ல் வெறும் 2,680 நாட்களில் பத்து லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. 2012 அக்டோபர் இறுதியில் மொத்த விற்பனை 10,59,135 ஆகும். இதில் இந்தியாவில் 9,97,133 மற்றும் வெளிநாட்டில் 62,002 விற்பனை ஆகின.

இன்று இந்தியாவில் விற்பனையாகும் 4வது வர்த்தக வாகனம் டாடா ஏஸ் (2011-12 விற்பனை எண்ணிக்கை 8,92,349)/ டாடா மேஜிக் (2011-12 விற்பனை எண்ணிக்கை 2,14,483) ஆகும். இதற்கிடையில் 2010-ல் இது நாட்டின் முதல் சரக்கு வாகனத்தில் ஒரு லட்சம் விற்பனை ஆகும் வாகனம் என்ற இடத்தைப் பெறுகிறது. அதே ஆண்டில் இது 5 லட்சம் விற்பனையை எட்டியது. உண்மையில், டாடா ஏஸ்/ டாடா மேஜிக் குடும்ப வாகனம் ஒட்டுமொத்த நான்கு சக்கர வர்த்தக வாகனங்களில் ஒரு புதிய பிரிவை உருவாக்கியுள்ளது.

மிகவும் முக்கியமாக, டாடா ஏஸ் குடும்பம் இன்று முக்கிய வருமானத்திற்கான ஆதாரமாக உள்ளது. சரக்கு அல்லது பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவோரில் குறைந்தது 60% பேர் டாடா ஏஸ்/ டாடா மேஜிக் உரிமையாளர்கள் அதிகம் படிக்காத முதல்முறையாக பயன்படுத்துவோர் ஆவர்.

டாடா மேஜிக் வாகனத்தின் பெருமை காரணமாக டாடா மோட்டார்ஸ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கால் பதித்தது. தற்போது 1,346 ஷோரூம்களில் 210 கடைகளில் மட்டுமே இந்த இரண்டு வாகனங்களும் விற்பனை செய்யப்படுகிறது. நிறுவனம் இந்தியாவின் கிராம மற்றும் வளரும் நகர்ப்புறங்களில் அர்ப்பணிப்புடன் கூடிய விற்பனை மற்றும் சந்தை நெட்வொர்க்கை கொண்டுள்ளது. இதன் மூலமாகவே 50% டாடா ஏஸ்/ டாடா மேஜிக் விற்பனை ஆகிறது.

வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியும் அதிகரித்துள்ளது. டாடா ஏஸ் 2004-05-ம் ஆண்டு துவங்கப்பட்டது. புணேயில் ஒவ்வொரு ஆண்டும் 30,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பந்த்நகர் (உத்தர்காண்ட்) தொழிற்சாலையில் இன்று ஆண்டுக்கு 5,00,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

டாடா மோட்டார்ஸின் புகழ் வெளிநாடுகளிலும் பரவியுள்ளது. 2006-ம் ஆண்டிலிருந்து டாடா ஏஸ் மற்றும் டாடா மேஜிக் அங்கோலா, பங்களாதேஷ், பூடான், காங்கோ, ஜீபோட்டி, எத்தியோப்பியா, கானா, கென்யா, மொஸாம்பிக், நேபாள், நைஜீரியா, பிலிப்பைன்ஸ், செனீகல், தென்னாப்பிரிக்கா, இலங்கை, சூடான், தான்ஸானியா, வியட்னாம், ஜாம்பியா, ஜிம்பாப்வே போன்ற 24 நாடுகளில் கிடைக்கிறது.

டாடா ஏஸ் தளம் இது வரை 10 முக்கிய வகை வாகனங்களை வெளியிட்டுள்ளது. டாடா ஏஸின் கீழாக ஏஸ் எச்டி, ஏஸ் ஈஎக்ஸ் (ஸ்டாப்-ஸ்டார்ட் டெக்னாலஜியுடன்), ஏஸ் சிஎன்ஜி, சூப்பர் ஏஸ் (1 டன்), ஏஸ் ஜிப் வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பொருட்களை வீட்டுக்கு வீடு எடுத்துச் செல்லும் 600கிலோ எடுத்துச் செல்லும் ஏஸ் ஜிப் 2012-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. டாடா மேஜிக்கின் கீழாக, மேஜிக் எச்டி, மேஜிக் சிஎன்ஜி, மேஜிக் ஐரிஸ் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. மேஜிக் ஐரிஸ் 3-4 இருக்கை கொண்ட பயணிகள் வாகனமாக 2012-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இது சிறிய ஆட்டோ வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளுக்கு சிறந்த சௌகரியத்தை கொடுத்தது. இந்த தளம் 2011 ஜனவரியில் டாடா வென்சுரை துவக்கவும் வழிவகுத்தது.

அத்துடன், இதில் பல பயன்பாடுகள் உள்ளன. அவற்றில் டேங்கர்கள், டம்பர் பிளேஸர்கள், சரக்கு வாகனங்கள், மொபைல் ரீடெய்ல் வாகனங்கள், வாகன உணவகம், ஹைலிஃப்ட் செர்ரி பிக்கர்ஸ், மொபைல் ஹோர்டிங்ஸ், உயர் பாதுகாப்பு ரொக்கப் பணம் எடுத்துச் செல்லும் வாகனங்கள், டாக்ஸி மற்றும் பள்ளி பயன்பாடுகள் அடங்கும். இன்னும் பின்பற்ற நிறைய உள்ளன.

டாடா ஏஸ்/ டாடா மேஜிக் வாகனச் சந்தை இன்று சரக்குப் பிரிவில் 78% மற்றும் பயணிகள் பிரிவில் 79% ஆகும். இதன் சக வாகனங்களான ஜிப் மற்றும் ஐரிஸ் தொலைதூரப் பகுதிகளுக்கும் செல்லக் கூடியவை. டாடா மோட்டார்ஸ் இன்னும் 36 மாதங்களில் அடுத்த பத்து லட்சம் வாகனங்களை விற்க உள்ளது.

ஆண்டின் மைல்கற்கள்
2005 இந்தியாவின் முதல் மினி டிரக் ஆன டாடா ஏஸ் துவக்கப்பட்டது. புணேயில் உற்பத்தி துவங்கியது.
2006 டாடா ஏஸ் எச்டி துவக்கம்
இலங்கையில் டாடா ஏஸ்
2006-ம் ஆண்டில் பிபிசியின் டாப் கியர் விருதை டாடா ஏஸ் பெற்றது
2007 1,00,000 டாடா ஏஸ்கள் வெளியிடப்பட்டன
நேபாளில் டாடா ஏஸ் துவக்கப்பட்டது
பயணிகள் போக்குவரத்துக்கான டாடா மேஜிக் துவக்கப்பட்டது
2008 பந்த்நகரில் (உத்தர்காண்ட்) அர்ப்பணிக்கப்பட்ட தொழிற்சாலை துவக்கப்பட்டது.
டாடா ஏஸ் சிஎன்ஜி துவக்கப்பட்டது
2009 டாடா சூப்பர் ஏஸ் மற்றும் டாடா ஈஎக்ஸ் அறிமுகம்
2010 சரக்கு சிவிகளில் டாடா ஏஸ் இந்தியாவின் முதல் ஆண்டுக்கு 1 லட்சம் பிராண்ட் ஆக உள்ளது
டாடா ஏஸ் குடும்ப வாகனங்களின் விற்பனை 5,00,000 குறியீட்டை கடந்துள்ளது
2011 டாடா மேஜிக் ஐரிஸ், மினி-பேஸஞ்சர் மற்றும் 600 கிலோ மைக்ரோ டிரக்கான டாடா ஏஸ் ஜிப் துவக்கம்.
2012 தர்வாட் தொழிற்சாலை டாடா மேஜிக் ஐரிஸ் மற்றும் டாடா ஏஸ் ஜிப் உற்பத்தி துவக்கம்
துவக்கத்திலிருந்து வெறும் 7 ஆண்டுகளில் டாடா ஏஸ் குடும்பம் 10 லட்சம் விற்பனையை கொண்டாடியது

ஆதாரம் : - https://www.tatamotors.com/press/tata-ace-races-through-the-one-million-mark-in-just-2680-days/