Loading...
Tata Ace Gold Press Release
பத்திரிகை செய்திக் குறிப்பு பற்றிய விவரங்கள்

டாடா ஏஸ் சரக்கு வாகன விற்பனையில் 1 லட்சம் விற்பனையை எட்டியது

2010 ஏப்ரல் 13-ல் வெளியிடப்பட்டது

டாடா ஏஸ் சரக்கு வாகன விற்பனையில் இந்தியாவின் முதல் 1 லட்சம் விற்பனையை எட்டியது.

2009-10-ல் டாடா ஏஸ் 1,10,032 வாகனங்களை விற்பனை அடையாளத்தை எட்டியுள்ளது. இவ்வாறு இது இந்தியாவில் சரக்கு வாகன விற்பனையில் மைல்கல்லை எட்டிய ஒரே பிராண்ட் ஆகியுள்ளது.

டாடா ஏஸ் 2005 மே மாதம் துவக்கப்பட்ட 1 டன்னிற்கும் குறைவான முதல் மினி டிரக்காக துவக்கப்பட்டது. 2005-06-ல் சுமார் 30,000 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதன் விற்பனை 2006-07-ல் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்தது. மேலும் 2008-09-ல் விற்பனை 89,000-க்கும் அதிகமானது. 2008-09-ல் வர்த்தக வாகன தொழிற்துறையின் பொருளாதார மந்தத்தின்போது கூட டாடா ஏஸ் 81,000 வாகனங்கள் விற்பனை ஆகியது.

பிராண்ட் நீட்டிப்புகளுடன், டாடா ஏஸ் போர்ட்ஃபோலியோவில் தற்போது ஏஸ், ஏஸ் எச்டி, ஏஸ் ஈஎக்ஸ் (ஸ்டாப்-ஸ்டார்ட் டெக்னாலஜியுடன்), சூப்பர் ஏஸ் (1 டன்) இடம்பெறுகின்றன.

2007 ஜூனில், டாடா மோட்டார்ஸ் டாடா மேஜிக்கை துவக்கியது. இது டாடா தளத்தில் சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பொது போக்குவரத்து நான்கு சக்கர வாகனமாக உருவாக்கப்பட்டது. டாடா மேஜிக் 2009-10-ல் கிராமப்புற மற்றும் வளரும் நகர்ப்புறங்களில் 49,000 வாகனங்கள் விற்பனை ஆகின. இது முந்தைய ஆண்டை விட 71% அதிக வளர்ச்சி ஆகும்.

2009-10-ல் டாடா ஏஸ் மற்றும் டாடா மேஜிக் ஆகிய இரண்டும் ஒன்றாக 1,50,000 வாகனங்கள் விற்பனை ஆகின.

ஆதாரம் : - https://www.team-bhp.com/forum/commercial-vehicles/79534-tata-ace-sales-cross-1-00-000-2009-10-a.html