உங்கள் தொழிலுக்காக நீங்கள் எந்த மாடல் டாடா ஏஸை வாங்க வேண்டும்

உங்கள் தொழிலுக்காக நீங்கள் எந்த மாடல் டாடா ஏஸை வாங்க வேண்டும்

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் மிகவும் நம்பகமான மினி டிரக் பிராண்டான டாடா ஏஸின் விற்பனையில் பத்தாண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. விற்பனையாகும் ஐந்து வர்த்தக வாகனங்களில் ஒன்று டாடா ஏஸ் குடும்பத்தைச் சேர்ந்ததாக உள்ளது. டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் மினி டிரக்குளை அறிமுகப்படுத்தியதன் மூலம் சந்தையில் முற்றிலும் புதிய பிரிவை உருவாக்கியுள்ளது. டாடா ஏஸின் வெற்றி ஏஸ் குடும்ப வாகனங்களான ஏஸ் கோல்டு, ஏஸ் எச்டி, ஏஸ் சிஎன்ஜி, ஏஸ் எக்ஸ், ஏஸ் ஜிப், ஏஸ் ஜிப் எக்ஸ்எல், சூப்பர் ஏஸ் மின்ட், ஏஸ் மெகா, ஏஸ் மெகா எக்ஸ்எல் மற்றும் சூப்பர் ஏஸ் மின்ட் ஆகியவற்றை உருவாக்கி விரிவுபடுத்தப்பட்டது.

ஒவ்வொன்றும் வெவ்வேறு பாரம் ஏற்றக் கூடியதும் என்ஜின் திறன் கொண்டதும் ஆகும். உங்கள் சரக்கிற்கு பொருந்தும் சரியான ஏஸ் வகையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீண்ட மற்றும் குறுகிய தூரங்களில் எளிதாக சரக்குகளை வழங்கலாம். பாதுகாப்பு, சௌகரியம், எல்லா காலநிலைப் பாதுகாப்பு மற்றும் வாகனத்தின் செயல்திறனைப் பொறுத்து உறுதியாக இருக்கலாம்.

டாடா ஏஸ், பெரும்பாலும் "குட்டி யானை" என்று அழைக்கப்படுகிறது. இதனை ஒரு சரக்கு டிரக்காக பயன்படுத்துவதோடு பல்வேறு பயன்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மினி டிரக்குகளை கிராமப்புற (மொபைல்) கடைகளாக, ஹோர்டிங் வேன்கள், வாட்டர் டேங்கர்கள், இன்னும் பல புதுமையான பயன்பாடுகளுக்காகவும் மாற்றிக் கொள்ளலாம்.

டாடா ஏஸ் குறுகிய தூரத்திற்கு சரக்குளை ஏற்றிச் செல்ல சிறந்த வாகனமாகும். அதேவேளையில் டாடா சூப்பர் ஏஸ் 1 டன் மினி டிரக் நகரத்திற்கு உள்ளேயான பயன்பாடுகள் மற்றும் வழங்குதல்களுக்கு பொருத்தமானது. 600 கிலோ திறன் கொண்ட டாடா ஏஸ் ஜிப் கிராமப்புறத்திலிருந்து வாங்குவோரிடம் பெயர் பெற்றதாகும். அதிக பாரம் மற்றும் நீட்டிக்கப்பட்ட பாக்ஸ் இடத்திற்காக நீங்கள் டர்போ சார்ஜ் மற்றும் 1000 கிலோ திறன் கொண்ட டாடா ஏஸ் மெகா அல்லது டாடா ஏஸ் மெகா எக்ஸ்எல் வாகனத்தை தேர்வு செய்யலாம்.

உங்கள் தொழில் வகை மற்றும் தேவைகளுக்கு பொருந்தும் வகையிலான வாகனத்தைத் வாங்க உங்களுக்கு அருகேயுள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்களை தொடர்புகொள்ளவும். இது பல்வேறு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பன்முகத்தன்மை கொண்ட வர்த்தக வாகனம் ஆகும். கடந்த காலங்களில், டாடா ஏஸ் வாகனங்கள் கிராம மற்றும் நகர்புறங்களில் பல தொழில் முனைவோரை தங்கள் தொழிலை முன்னேற்ற உதவியுள்ளது.

வெவ்வேறு வகை ஏஸ் வகைகளின் கண்ணோட்டம் மற்றும் முதல்தர மதிப்பைப் பெற டாடா மோட்டார்ஸ் இணையதளத்திற்கு வருகை தரவும்.

தொடர்பான படைப்புகள்