நீங்கள் எந்த மாடலை வாங்க வேண்டும், ஏஸ் எக்ஸ்எல்/ மெகா எக்ஸ்எல்/ ஜிப் எக்ஸ்எல் அல்லது ஏஸ் கோல்டை வாங்க வேண்டுமா?

நீங்கள் எந்த மாடலை வாங்க வேண்டும், ஏஸ் எக்ஸ்எல்/ மெகா எக்ஸ்எல்/ ஜிப் எக்ஸ்எல் அல்லது ஏஸ் கோல்டை வாங்க வேண்டுமா?

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

2017 ஏப்ரலில் டாடா மோட்டார்ஸ் தனது ஏஸை குடும்ப வாகனங்களை ஏஸ் எக்ஸ்எல், ஏஸ் மெகா எக்ஸ்எல் மற்றும் ஏஸ் ஜிப் எக்ஸ்எல் ஆகிய மூன்று வாகனங்களைச் சேர்த்து விரிவுபடுத்தியது. 2018 மார்ச்சில் வெளியிட்ட ஏஸ் கோல்டு போட்டி மிகுந்த சந்தையில் நம்பகமான தொழில் தீர்வுகளை வழங்கியது. நீங்கள் ஒரு எக்ஸ்எல் வகை அல்லது ஏஸ் கோல்டை வாங்குவதில் ஆர்வம் கொண்டால், நாங்கள் அந்த வகைகள் பற்றி கூறத் தயாராக இருக்கிறோம். எக்ஸ்எல் வாய்ப்புகள் நீண்ட பாடி அளவு வகைகளுடன் வெவ்வேறு பாரம் ஏற்றும் திறன் மற்றும் என்ஜின் திறனுடன் கிடைக்கின்றன. ஏஸ் எக்ஸ்எல் வகைகளின் சில சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. ஏஸ் எக்ஸ்எல்:
மேம்பட்ட ஏஸ் வகைகளை உருவாக்கும் முயற்சியில், டாடா மோட்டார்ஸ் எக்ஸ்எல் வாகனங்களில் 15% நீளமான பாரமேற்றும் பாடிகள் கொண்ட வாகனங்களை உருவாக்கியது. ஏஸ் எக்ஸ்எல் 11.6kw@3200r/min (16HP), 702cc என்ஜினால் சக்தி அளிக்கப்படுகிறது. இது 2 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் 710 கிலோ பாரமேற்றும் திறன் கொண்டது. இது 8.2 அடி பாரமேற்றும் திறனுடன் கிடைக்கிறது. இது உள்ளூர் சந்தைகள் மற்றும் கிராமப் பகுதிகளுக்குப் பொருத்தமானதாகும். சிக்கனமான விலை கொண்ட ஏஸ் எக்ஸ்எல் புதிய தொழில் முனைவோருக்கு எளிய கடன் வசதிகளுடன் கிடைக்கிறது.

2. ஏஸ் மெகா எக்ஸ்எல்:
இந்த மெகா எக்ஸ்எல் ஏஸ் எக்ஸ்எல்லை விட மேம்பட்டதாகும். இது "வாழ்க்கையில் வெற்றி இன்னும் அதிகமாக" என்ற முழக்கத்தைப் போன்றது. இது அதிக பாரம் ஏற்றும் திறன் கொண்டு அதிக லாபம் ஈட்ட வழிவகுக்கிறது. இது 1000 கிலோ பாரம் ஏற்றத் தக்கது மற்றும் 800 சிசி என்ஜினால் சக்தி வழங்கப்படுகிறது. இது 8.2 அடி பாரமேற்றும் திறனுடன் கிடைக்கிறது. அதிக பாரம் ஏற்றும் திறன் கொண்ட இது அதிக எடையுள்ள உலோகங்கள், ஃபர்னிச்சர்கள், பைப்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல சிறந்தவை.

3. ஏஸ் ஜிப் எக்ஸ்எல்:
டாடா ஏஸ் ஜிப் எக்ஸ்எல், மற்ற ஏஸ் எக்ஸ்எல் வாகனங்களை விட சிறியது. இது 600 கிலோ பாரம் ஏற்றத் தக்கது மற்றும் 611 சிசி என்ஜினால் சக்தி வழங்கப்படுகிறது. 10 லி எரிபொருள் டேங்க் மற்றும் லிட்டருக்கு 33.8 கிமீ மைலேஜ் கொடுக்கக் கூடியது. இது இதனை எளிய மினி டிரக் ஆக மற்றும் நகரச் சாலைகள் மற்றும் அதிக போக்குவரத்தில் ஊடுறுவிச் செல்லக் கூடியதாக உள்ளது. இது 6.3 அடி பாரமேற்றும் பாடியுடன் வருகிறது.

4. ஏஸ் கோல்டு:
டாடா ஏஸ் கோல்டு டாடா ஏஸ் முகப்புடன் வருகிறது. டாடா ஏஸ் 11.6kw@3200r/min (16HP), 702cc என்ஜினால் சக்தி அளிக்கப்படுகிறது. இது 2 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் 710 கிலோ பாரமேற்றும் திறன் கொண்டது. இது 7.2 அடி நீள பாடி கொண்டது.

ஏஸ் வாகனங்கள் அனைத்தும் வாங்குவோருக்கு சிறந்த அனுபவங்களைக் கொடுக்கின்றன. எனினும் உங்களுக்கான ஏஸ் வாகனத்தை புத்திசாலித்தனமாக தேர்வு செய்வது உங்கள் முதலீட்டில் சிறந்த வருவாயைப் பெற உதவும்.

தொடர்பான படைப்புகள்