டாடா ஏஸ் எக்ஸ்எல்லின் பாரமேற்றும் திறன் என்ன, இது தொழில் உரிமையாளர்களுக்கு எவ்வாறு பயன் தருகிறது?

டாடா ஏஸ் எக்ஸ்எல்லின் பாரமேற்றும் திறன் என்ன, இது தொழில் உரிமையாளர்களுக்கு எவ்வாறு பயன் தருகிறது?

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

2005-ம் ஆண்டு டாடா ஏஸ் துவங்கியபோது அது விரைவிலேயே இந்தியாவின் நம்பர் 1 மினி டிரக்காக ஆனது. 2017-ம் ஆண்டு எல்லாருக்கும் பிடித்தமான "குட்டி யானை" இன்னும் பெரிதாக, உறுதியானதாக, டாடா ஏஸ் எக்ஸ்எல் ஆக வெளியிடப்பட்டது.

டாடா ஏஸ் எக்ஸ்எல் 2500 மிமீ (8.2 அடி) சரக்கு பாடி, உறுதியான பாடியுடன் தனது முந்தைய வாகனத்தை விட ஒரு படி மேம்பட்டதாகும். இது 11.6 KW (16HP) @ 3200r/m மெக்கானிக்கல் ஃப்யூயல் பம்ப் என்ஜின், உறுதியான லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் நன்றாக பார்ப்பதற்கு அகன்ற ஸ்க்ரீன், அகன்ற கதவு திறப்பு ஆங்கிள் மற்றும் 30 லி எரிபொருள் டேங்க் கொண்டது. டாஸ் எக்ஸ்எல் டிரக் 710 கிலோ பாரம் மற்றும் மெகா எக்ஸ்எல் 1000 கிலோ ஏற்றும் திறன் கொண்டது.

டாடா ஏஸ் எக்ஸ்எல் எவ்வாறு தொழிலுக்கு பயன் மிக்கதாக இருக்கிறது?

1. 2500 மிமீ (8.2 அடி) பாரமேற்றும் பாடியுடன் டாடா ஏஸ் எக்ஸ்எல் மினி டிரக் எல்லா சரக்கு வாகன பிரிவுகளிலும் பயன் மிக்கதாக ஆக்குகிறது. பயன்கள் ஏஸ் மற்றும் எக்ஸ்எல் வாகனத்திற்கு ஒரே மாதிரி இருந்தாலும், நீண்ட பாடி என்பது அதிக சரக்கு (900கிலோ) ஏற்றலாம் என்று பொருள்படும். இது அதிக லாபம் சம்பாதிக்க உதவுகிறது.

2. ஸ்டாக் மாடல் விண்ணப்பம்:

இது அடிப்படை மாடலாக இருப்பதால், டாடா ஏஸ் எக்ஸ்எல், பொதுவாக நகரத்திற்குள்ளாக கேஸ் சிலிண்டர்கள், பால் கேன்கள், மினரல் வாட்டர், பால், காய்கறி கூடைகள், எஃப்எம்சிஜி, பிளைவுட், ஃபர்னிச்சர், பைப்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல பயன்படுகிறது.

3. முழுவதும் கட்டப்பட்ட மாடல் பயன்பாடுகள்:

ஏ) கோல்டு செயின் டிரான்ஸ்போர்ட்:
டாடா ஏஸ் எக்ஸ்எல்லை ரெஃப்ரிஜெரேடட் கன்டெய்னருடன் கொண்டு வரலாம். இது இந்த வகுப்பில் சிறந்த என்ஜின் பொருத்தப்பட்டு மேம்பட்டதாக தொடர்ச்சியான குளிர்ச்சியூட்டுவதாக உள்ளது. இந்த வகை வாகனங்கள் குளிர்ச்சி தேவைப்படும் உறைய வைக்கப்பட்ட இறைச்சிகள், ஐஸ் க்ரீம்கள், மருந்துகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல பயன்படுகிறது.

பி) பாதுகாக்கப்பட்ட சரக்கு:
டாடா ஏஸ் எக்ஸ்எல் கன்டெய்னர் டிரக் வகையிலும் வருகிறது. நீடித்து உழைக்க மற்றும் பாதுகாப்பிற்காக உயர் தர மடிப்புகள் கொண்ட இன்சுலேடட் கன்டெய்னரை கொண்டது.

சி) தண்ணீர் மற்றும் திரவங்களை எடுத்துச் செல்லுதல்: 1 கிலோலிட்டர் திறனுடன் ஏஸ் எக்ஸ்எல் சிறிய தண்ணீர் மற்றும் பால் வழங்குதல் தொழிலுக்குச் சிறந்தது.

டி) குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்துதல் (நகராட்சி பயன்):
டாடா ஏஸ் எக்ஸ்எல் ஹைட்ராலிக் சிஸ்டம் உடன் சக்திவாய்ந்த என்ஜின் கொண்டதாக இருப்பதால் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்துதல் மற்றும் குப்பை நிர்வாகத்திற்கு சிறந்ததாக உள்ளது.

ஈ) மொபைல் வேன்:
உணவு டிரக் மாடல் ஸ்டீல் கன்டெய்னர்/ ரேக், நீடித்த ஆயுள் மற்றும் பாதுகாப்புக்கான மடிப்புள்ள பாடியுடன் கிடைக்கிறது. இதில் போதுமான மொபைல் கிச்சன் மற்றும் சேமிப்பு பகுதி உள்ளது. பெரும்பாலான உணவு டிரக்களின் தேவைக்கு இது போதுமானது.

டாடா ஏஸ் எக்ஸ்எல் ஓட்டுனர் மற்றும் சரக்கு ஆகிய இரண்டுக்கும் மேம்பட்ட பாதுகாப்பு வழங்குகிறது. பல்வேறு நிலைகளிலும் சிறந்த செயல்திறன் கொண்டதாக உள்ளது. பராமரிக்க எளிதானது, ஸ்டெயில், சௌகரியம் மற்றும் சிக்கனமானது. இதற்கு முந்தைய வாகனங்கள் ஏற்படுத்திய நம்பிக்கையால் ஆதரவு பெற்று, இந்த வகுப்பில் நீண்ட பாரமேற்றும் பகுதியுடன் இந்தப் பகுதியில் இது இயற்கையான வெற்றியாளர் ஆகிவிட்டது. உறுதியான வாகனம் மற்றும் சிறந்த மைலேஜ் தேவைப்படும் சரக்கு அடிப்படையிலான தொழிலுக்கு இது சிறந்த வாகனம் ஆகும். குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் சிறந்த பாரம் ஏற்றும் திறன் கொண்டது.

தொடர்பான படைப்புகள்