What is the Difference Between the Tata Ace BS4 and BS6 Mini Trucks

டாட்டா ஏஸ் BS4 மற்றும் BS6 மினி டிரக்குகள் இடையிலான வேறுபாடு என்ன?

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

1 ஏப்ரல் 2020-இல் இருந்து, வாகனங்களுக்கு இந்திய அரசாங்கம் புதிய உமிழ்வு விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. BS6 என்று அறியப்படும் இந்த விதிமுறைகள், காற்று மாசு அளவைக் குறைப்பதற்காகவும், நிலையான ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்திற்கான யூரோ 6 போன்ற சர்வதேசத் தரநிலைகளைப் பின்பற்றுவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகளைப் பின்பற்ற, எங்கள் ஏஸ் கோல்டு டிரக்குகளின் BS6 வரிசையை நாங்கள் உருவாக்கியுள்ளோ. எஞ்சின் தவிர, இன்னும் பல மேம்பாடுகளையும் நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம், இதன் மூலம் எங்கள் மினி டிரக்குகள் வாடிக்கையாளர்களின் No.1 தேர்வாக இருக்கும் பாரம்பரியத்தைத் தொடர்கிறது.

டாட்டா ஏஸ் கோல்டு BS6 டீசல், பெட்ரோல் மற்றும் CNG வகைகளில் கிடைக்கிறது.

புதிய ஏஸ் டிரக்குகள் 6 வாக்குறுதிகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது (BS4-இன் அம்சங்களுடன் சேர்த்து) அதாவது, அதிக மைலேஜ், அதிகப் பிக்-அப், அதிக பேலோட் கொள் திறன், அதிகச் சௌகரியம் மற்றும் வசதி, குறைந்த பராமரிப்பு செலவுகள் மற்றும் அதிக இலாபம். டாட்டா ஏஸ் BS4 மற்றும் BS6 மினி டிரக்குகள் இடையிலான முக்கியமான வேறுபாடுகள் இதோ:

உமிழ்வுவிதிமுறைகள்

BS4 எஞ்சினுடன் ஒப்பிடும் போது BS6 எஞ்சினால் நைட்ரஜன் ஆக்ஸைடு (NOx) உமிழ்வுகளை 76%, ஹைட்ரோகார்பன் (HC) உமிழ்வுகளை 32% மற்றும் பார்டிகுலேட் மேட்டர் (PM) உமிழ்வுகளை 82% குறைக்க முடியும். தற்போதைய உமிழ்வு அளவீடுகள்** முறையே 0.06, 0.17 மற்றும் 0.0045 ஆகும்.

பிக்அப்

டாட்டா ஏஸ் கோல்டின் BS6 வகை வாகனங்கள் அதிக ஆற்றல் மற்றும் பிக் அப் உடன் வருகிறது. ஏஸ் கோல்டு டீசல் 20hp ஆற்றல் மற்றும் 45Nm முறுக்குத்திறனுடன் வருகிறது; பெட்ரோல் 30hp ஆற்றல் மற்றும் 55 Nm முறுக்குத்திறனுடன் வருகிறது மற்றும் CNG 26hp ஆற்றல் மற்றும் 50Nm முறுக்குத்திறனுடன் வருகிறது.

மைலேஜ்

ஏஸ் வகைகளின் BS6 வரிசை அதன் BS4 வகையுடன் ஒப்பிடும் போது அதே அளவு சுமை மற்றும் பயணத்திற்குச் சிறப்பான மைலேஜைத் தருகிறது.

பேலோட்

டாட்டா ஏஸ் BS6 ஒரு வலுவூட்டப்பட்ட ஃப்ரேம் சேஸ் மற்றும் உறுதியாக்கப்பட்ட சஸ்பென்ஷனுடன் வருகிறது, இவை சுமை சுமக்கும் திறனை மேம்படுத்தியுள்ளது. இது GVW-ஐ 1,550 கிலோவில் இருந்து 1,675 கிலோவிற்கு (டீசல் வகை வாகனங்களுக்கு) மற்றும் 1,615 கிலோவிற்கு (பெட்ரோல் வகை வாகனம்) அதிகரித்துள்ளது. இரண்டு BS6 வகைகளும் அதிகப் பேலோட் கொள்திறனான 750 கிலோவுடன் வருகிறது. CNG வகை வாகனத்தின் பேலோட் 1630 கிலோ GVW உடன் 640 கிலோ

பராமரிப்பு

BS6 டிரக்கின் எஞ்சின் ஆயில் மற்றும் எஞ்சின் ஆயில் ஃபில்டர், இரண்டும் 10,000 கிமீ-க்கு அல்லது 8 மாதங்களுக்குப் பின்பு (எது முன்னர் வருகிறதோ) மாற்றப்பட வேண்டும், இது BS4 டிரக்குகளின் 4 மாதங்கள் என்பதை விட இரண்டு மடங்காகும். BS6 டிரக்கிற்கு ஒவ்வொரு 40,000 கிமீ-க்குப் பின்பும் BS4 டிரக்கிற்கு ஒவ்வொரு 10,000 கிமீ-க்குப் பின்பும் எரிபொருள் வடிகட்டி உறுப்பு மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு 10,000 கிமீ-க்கும் DEF திரவம் மாற்றப்பட வேண்டும் (டீசல் வகை வாகனத்திற்கு). இது BS4 எஞ்சினில் இல்லை. BS6 வகை வாகனத்தில் மட்டுமே பெட்ரோல் வகை கிடைக்கிறது.

வசதி

டாட்டா ஏஸ் BS6 டிரக்குகள் வசதியாக வாகனம் ஓட்டுவதற்காகப் புதிய கெபிள் வகை கியர் ஷிஃப்டிங், மேம்படுத்தப்பட்ட பிரேக் அமைப்பு (LCRV மற்றும் பிரேக் பூஸ்டருடன் புதிய காலிப்பர்கள் மற்றும் டிரம் பிரேக்குகள்) மற்றும் சிறப்பாகப் பொருத்தப்பட்ட ABC பெடலுடன் வருகிறது.

இந்த அனைத்து மேம்பாடுகளுடன், BS6-க்கு மாறுவது சரியான தேர்வு என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.

*டாட்டா ஏஸ் மினி டிரக்குகள் 2005-ஆம் ஆண்டிலிருந்து 8/ 10 வாடிக்கையாளர்களின் தர மதிப்புடன் No.1 தேர்வாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது டிரக்குகளின் மீதுள்ள அதிக அளவிலான நம்பிக்கை ஆகும்.

**ஒரு கிலோமீட்டருக்கு இவ்வளவு கிராம்கள் என்ற அளவில் உமிழ்வுகள் அளவிடப்படுகின்றன.

தொடர்பான படைப்புகள்