What are the new features of Tata Ace Gold BS6 Diesel?

டாட்டா ஏஸ் கோல்டு BS6 டீசலின் புதிய அம்சங்கள் என்ன?

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

டாட்டா ஏஸ் அல்லது சின்ன யானை 16 வருடங்களாக வாடிக்கையாளரின் No.1 தேர்வாக இருந்து வருகிறது, மேலும் 2005-ஆம் ஆண்டு அது அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து SCV துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டாட்டா ஏஸ், இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகும் இலகுரக வணிக வாகனத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது, மேலும், 23 லட்சத்திற்கும் மேல் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக, டாட்டா ஏஸ் குடும்பமானது மினி-டிரக் வகையில் அதிகச் சந்தை பங்கைக் கொண்டுள்ளது. மேலும், இது கிராமப்புறத் துறைக்கு ஒரு வரமாக அமைந்துள்ளது, குறிப்பாக இளைஞர்களுக்கு இது பல வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது.

மேலும், BS6-இல், டாட்டா மோட்டார்ஸானது டாட்டா ஏஸ்-ஐ ஏஸ் கோல்டுடன் மேலும் மேம்படுத்தியுள்ளது, இது டீசல், பெட்ரோல், அத்துடன் CNG-இலும் கிடைக்கிறது, மற்றும் அவை அனைத்தும் '6 வாக்குறுதிகளுடன்' வருகின்றன.

அதிக மைலேஜ்

டாட்டா ஏஸ் கோல்டு BS6 டீசல் வகை அதிக மைலேஜைத் தருகிறது. இது அதிக மைலேஜை அடைய உதவும் கியர் ஷிஃப்ட் அட்வைசருடன் வருகிறது.

அதிக பிக்அப்

20 HP 2 சிலிண்டர் 700 CC NA DI எஞ்சின் மற்றும் 45 NM முறுக்குத்திறனால் ஆற்றல் பெறும் டாட்டா ஏஸ் கோல்டு BS6 டீசல் உண்மையிலேயே அனைத்துக் கால நிலைக்கும் ஏற்ற மினி டிரக்காகும்.

அதிக பேலோட்

அதே கரடுமுரடான மற்றும் உறுதியான கூட்டுப்பொருட்களுடன், லோட் பாடி அளவான 7.2 அடி x 4.9 அடி உடன், டாட்டா ஏஸ் கோல்டு BS6 டீசல் இப்போது 750 கிலோ என்ற அதிகப் பேலோடுடன் வருகிறது. சேஸ் வலுவூட்டப்பட்டு, சஸ்பென்ஷன் உறுதியாக்கப்பட்டுள்ளது, இதன் விளைவாகச் சிறப்பான சுமை சுமக்கும் திறனைப் பெறுகிறது.

அதிக சௌகரியம் மற்றும் வசதி

டாட்டா ஏஸ் BS6 டிரக்குகள் வசதியாக வாகனம் ஓட்டுவதற்காகப் புதிய கெபிள் வகை கியர் ஷிஃப்டிங், மேம்படுத்தப்பட்ட பிரேக் அமைப்பு (பிரேக் பூஸ்டருடன்) மற்றும் சிறப்பாகப் பொருத்தப்பட்ட ABC பெடலுடன் வருகிறது. டாட்டா ஏஸ் கோல்டு BS6 டீசல் முற்றிலும் புதிய டிஜிட்டல் தொகுதி, புதிய பாட்டில் & டாக்குமெண்ட் ஹோல்டர் மற்றும் USB சார்ஜர் அம்சத்துடன் வருகிறது.

குறைவான பராமரிப்பு

டாட்டா ஏஸ் கோல்டு BS6 டீசல் நீண்ட சேவை இடைவெளிகள் மற்றும் 2 வருடங்கள்/72000 கி.மீ உத்திரவாதத்துடன் கூடிய ஒரு எளிமையான எஞ்சினுடன் வருகிறது.

அதிக இலாபம்

அதிகப் மைலேஜ், அதிக பேலோட் மற்றும் குறைவான பராமரிப்பு செலவுகளின் விளைவாக அதிக இலாபம்.

டாட்டா ஏஸ்-இன் DNA மற்றும் பல புதிய அம்சங்களுடன், டாட்டா ஏஸ் கோல்டு BS6 டீசல் அதிகமான வாடிக்கையாளர் வெற்றி கதைகளை உருவாக்கும் அதன் பயணத்தைத் தொடரும்.

தொடர்பான படைப்புகள்