புதிய டாட்டா ஏஸ் BS6 மினி டிரக்குகள் மாசைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்திய அரசாங்கத்தின் புதிய உமிழ்வு விதிமுறைகளைப் பின்பற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. எங்கள் வாடிக்கையாளருடனான எங்கள் பொறுப்பைப் பூர்த்தி செய்யவும், BS6 இணக்கத்தை மிஞ்சிய தரமான தயாரிப்புகளை வழங்கவும், நாங்கள் எங்கள் வாகனத்தை முழுமையாக மேம்படுத்திப் புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளோம், அத்துடன் எங்கள் டிரக்குகளில் ஏற்கனவே உள்ள அம்சங்களை மேம்படுத்தியுள்ளோம்.
டாட்டா ஏஸ் டிரக்குகள் மூன்று வகைகளில் வருகின்றன - டீசல், CNG மற்றும் புதிய பெட்ரோல் வகையும். என்ன எதிர்பார்க்கலாம் என்பது இதோ:
எஞ்சின்
புதிய BS6 டிரக்குகளின் மூன்று வகைகளிலும் மிகவும் சக்திவாய்ந்த எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2-சிலிண்டர், இயற்கையாகவே காற்றை உள்ளிழுக்கும் 700cc DI எஞ்சினுடன் டீசல் வகை வாகனம் வருகிறது, அது 14.7 kW அவுட்புட்டை 3600 RPM-இல் மற்றும் 45 NM முறுக்குத்திறனை 1800-2000 RPM-இல் வழங்குகிறது. டாட்டா 275 கசோலின் MPFI" BS-VI, 4-ஸ்டிரோக் தண்ணீரால் குளிர்விக்கப்படும் எஞ்சினுடன் பெட்ரோல் வகை வாகனம் வருகிறது, அது 22 kW அவுட்புட்டை 4000 RPM-இல் மற்றும் 55 NM முறுக்குத்திறனை 2500-3000 RPM-இல் வழங்குகிறது. தண்ணீரால் குளிர்விக்கப்படும், மல்டிபாயின்ட் கேஸ் இன்ஜெக்ஷன் 694cc CNG எஞ்சினுடன் CNG வகை வாகனம் வருகிறது, அது 19.4 kW அவுட்புட்டை 4000 RPM-இல் மற்றும் 50 NM முறுக்குத்திறனை 2500 RPM-இல் வழங்குகிறது.
கிளட்ச்மற்றும்டிரான்ஸ்மிஷன்
மூன்று வகை வாகனங்களும் ஒற்றைத் தட்டு உலர் உராய்வு டயாஃப்ரம் வகை கிளட்ச் மற்றும் ஒரு மெக்கானிக்கல், 23.1 - 28.9:1 மாறி-விகிதத்துடன் 380 மிமீ விட்டம் கொண்ட ஸ்டீயரிங்கைப் பயன்படுத்துகிறது. டீசல் மற்றும் பெட்ரோல் வகை வாகனங்கள் GBS 65-4/6.31 கியர்பாக்ஸைப் பயன்படுத்துகிறது, அதே வேளையில் CNG வகை வாகனம் GBS 65-5/5.6, ரிவர்ஸ் கியருக்காக ஸ்லைடிங் மெஷ் மற்றும் மற்ற அனைத்து முன்பக்கக் கியர்களுக்கும் சிங்க்ரோமெஷ்ஷுடன் 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸைக் கொண்டுள்ளது.
பிரேக்குகள்
முன்பக்கச் சக்கரங்கள் C51 காலிப்பர் டிஸ்க் பிரேக்குகளுடன் வருகிறது, அதே வேளையில் பின்பக்கச் சக்கரங்கள் 200 மிமீ x 30 மிமீ (விட்டம்) டிரம் பிரேக்குகளுடன் வருகிறது. இந்தப் பிரேக்குகள் பயன்படுத்த எளிதானது மற்றும் அனைத்து நிலப்பரப்புகளிலும் சிறப்பான கட்டுப்பாட்டை வழங்குகிறது.
சஸ்பென்ஷன்
மேடு பள்ளமான சாலைகளிலும் சிறப்பான சௌகரியத்திற்காகச் சஸ்பென்ஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று வகை வாகனங்களும் பாரபோலிக் லீஃப் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷனை முன்பக்கத்தில் பயன்படுத்தும் அதே வேளையில், டீசல் மற்றும் பெட்ரோல் வகை வாகனங்கள் அரை-நீள்வட்ட லீஃப் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷனைப் பின்பக்கத்திலும் பயன்படுத்துகிறது. CNG வகை வாகனம் ஒரு பாரபோலிக் லீஃப் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷனைப் பின்பக்கத்திலும் பயன்படுத்துகிறது. இது கூடுதல் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் ஹைட்ராலிக், டபுள்-ஆக்டிங் டெலெஸ்கோபிக் ஷாக் அப்ஸார்பருடனும் வருகிறது. 160மிமீ என்ற அதிகக் கிரவுண்ட் கிளியரன்ஸுடன், எந்தவொரு நிலப்பரப்பிலும் டாட்டா ஏஸ் -ஆல் சுலபமாகப் பயணிக்க முடியும்.
சக்கரங்கள்மற்றும்டயர்கள்
புதிய டாட்டா ஏஸ் BS6 டிரக்குகள் பலவகையான நிலப்பரப்புகளைக் கையாளக்கூடிய 12-அங்குலம் (விட்டம்) கொண்ட 145 R 12 LT 8 PR டயர்களுடன் வருகிறது.
செயல்திறன்
6 வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, ஒரு மணி நேரத்திற்கு 70 கிமீ என்ற அதிகபட்ச வேகத்துடன் சிறந்த செயல்திறன் மற்றும் சிறந்த மைலேஜை வழங்குவதற்காக டாட்டா ஏஸ் BS6 டிரக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 30% வரையிலான கிரேடெபிலிட்டியை எதிர்பார்க்கலாம், அது செங்குத்தான மலைத்தொடர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏஸ் BS6 டிரக்குகள் டீசலுக்கு 30 லிட்டர்கள், பெட்ரோலுக்கு 26 லிட்டர்கள் மற்றும் CNG வகைக்கு 70 லிட்டர்கள்/ 12 கிலோ என்ற எரிபொருள் கொள் அளவைக் கொண்டுள்ளன.
இந்த அம்சங்களுடன் சேர்த்து, அதிக ஆயுள், குறைவான பராமரிப்பு மற்றும் அதன் விளைவாக அதிக இலாபத்துடன் புதிய டாட்டா ஏஸ் BS6 டிரக்குகள் வருகின்றன.