டாடா ஏஸ் எக்ஸ்எல் – இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் மினி டிரக்

டாடா ஏஸ் எக்ஸ்எல் – இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் மினி டிரக்

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

இந்தியாவில் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. டாடா ஏஸின் அடுத்த கட்ட வாகனங்களை கொண்டு வருவதில் டாடா மோட்டார்ஸ் சிறிய வர்த்தக வாகனமான எக்ஸ்எல் வகையை அறிமுகம் செய்தது. இந்த வாகனங்கள் இந்தியா முழுவதும் உள்ள டீலர்களிடம் கிடைக்கிறது. எக்ஸ்எல் வகையில் ஏஸ் எக்ஸ்எல், ஏஸ் மெகா எக்ஸ்எல் மற்றும் ஏஸ் ஜிப் எக்ஸ்எல் அடங்கும்.

டாடா ஏஸ்எக்ஸ்எல் 710 பாரமேற்றும் திறன் கொண்ட சற்று பெரிய மற்றும் நீண்ட வர்த்தக வாகனமாகும். இது நம்பகமான தொழில் போக்கு வரத்துத் தீர்வுகளை வழங்குகிறது. மேலும் படிப்படியாக இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் வாகனமாக ஆனது. பெரிய சரக்குகளை கையாளும் போக்குவரத்து தொழில் முனைவோர் ஏஸ் எக்ஸ்எல்லின் வேகம், பாரம் ஏற்றும் திறன் மற்றும் மேம்பட்ட செயல்திறன் காரணமாக இதையே விரும்புகிறார்கள்.

8.2 அடி பாரமேற்கும் பாடி கொண்ட ஏஸ் எக்ஸ்எல், 2 சிலிண்டர்கள், வாட்டர் கூல்டு என்ஜின், பவர் ஸ்டீயரிங், நீண்ட வீல் பேஸ் 2250 மிமீ கொண்டது. இது எக்ஸ் ஷோரூம் விலையாக ரூ. 4.23 லட்சம் விலையில் இரண்டு ஆண்டு உத்தரவாதத்துடன் பிரகாசமான ஆர்டிக் ஒயிட், சில்லி மெடாலிக் நிறங்களில் கிடைக்கிறது.

"குட்டி யானை பெரிதாகி விட்டது" என்ற முழக்கமே ஏஸ் எக்ஸ்எல்லின் சக்தியை விவரிக்கிறது. இது 702 சிசி மற்றும் 16 எச்பி ஆற்றல் கொண்டது. இது உள்ளூர் சந்தைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மிகவும் பொருத்தமானது. விலைச் சிக்கனம் கொண்ட ஏஸ் எக்ஸ்எல் புதிய தொழில் முனைவோருக்கு கடன் வசதியும் கொடுக்கிறது.

டாடா ஏஸ் எக்ஸ்எல் தொடர்ச்சியாக வெற்றிகரமான வாகனமாக இருந்து இந்திய சாலைகளில் எல்லாப் பகுதிகளிலும் எளிதாக பாரங்களை ஏற்றிச் செல்வதற்கு அதிக பாரமேற்றிச் செல்லும் வாகனத்தை வாடிக்கையாளர்கள் விரும்புவதும் ஒரு காரணமாகும்.

டாடா ஏஸ் எக்ஸ்எல், மற்ற எக்ஸ்எல் வாகனங்களுடன் விலை மதிப்புக் கொண்டது மற்றும் ஒரு போக்குவரத்து தொழில் முனைவோருக்கு அதிக வருவாயை உருவாக்கித் தருகிறது. இந்த எக்ஸ்எல் வாகனங்கள் தொடர்ச்சியாக மிகவும் பன்முகத்தன்மை கொண்ட வாகனங்களை எளிதில் வாங்கத்தக்க விலையில் மற்றும் மிகவும் குறைந்த செலவில் வழங்குகிறது.

எக்ஸ்எல் மற்றும் ஏஸ் வாகன வகைகள் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள டாடா மோட்டார்ஸ் இணையதளத்திற்கு வருகை தந்து உங்கள் போக்குவரத்து தேவைகளுக்கு பொருத்தமான மாடலை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யுங்கள்.

தொடர்பான படைப்புகள்