“டாடா ஏஸ் வகைகள் – உணவு வாகன தொழலில் மினி டிரக்குகள் சிறப்பாக பயன்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

“டாடா ஏஸ் வகைகள் – உணவு வாகன தொழலில் மினி டிரக்குகள் சிறப்பாக பயன்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

புதிய தலைமுறை உணவு நிபுணர்கள் மற்றும் உணவு ஆர்வலர்கள் நகரங்களின் சந்திப்புகளில் மொபைல் கடைகளை அமைப்பதன் மூலமாக உணவு வாகன தொழில் வளர்ந்து வருகிறது. உணவகங்களை அமைப்பதுடன் ஒப்பிடுகையில் உணவு வாகனத்தை அமைப்பது மிகவும் குறைந்த விலையில் சாத்தியமாகிறது.

குறிப்பிட்ட இடத்தில் தொழில் நன்றாக நடைபெறவில்லை என்றால் தொழிலை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் இது எளிதானது.

ஒவ்வொரு நாளும் போதுமான பணம் சம்பாதிக்க போதுமான அளவு பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்பதால் டிரக்கின் அளவும் முக்கியமாகிறது. உணவகமாக மாற்ற ஒரு வாகனத்தை வாங்கும்போது புத்திசாலித்தனமான வாய்ப்பை தேர்வு செய்யுங்கள். பல நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை உணவு வாகனமாக வழங்குவதற்கு மத்தியில், டாடா ஏஸ் - கஃபேடரியா மினி டிரக்குகள் ஸ்நாக்ஸ் சென்டர் அல்லது கஃபேடரியா போன்ற தொழிலை அமைக்க சௌகரியமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனுடைய உயிர்ப்புள்ள நிறம் மற்றும் உறுதியான மெட்டல் பாடியுடன் இதனை முக்கியமான இடங்களில் மற்றும் குறைந்த உணவகங்களைக் கொண்ட பெருந்தொழில் மையங்களில் உணவகமாக அமைத்திடலாம்.

வாடிக்கையாளர்களின் தேவைகளை மையமாகக் கொண்டு, டாடா ஏஸ் கஃபேடரியாவை 30 நாட்களுக்குள்ளாக கச்சிதமான உணவு வாகனமாக வடிவமைத்துக் கொடுக்கலாம். அதன் பிறகு உங்களிடம் மக்களை கவர்ந்திழுக்கும் அதனுடைய நிறம் மட்டுமல்லாமல் ஒரு நம்பகமான வாகனமும் உங்களிடம் இருக்கும். நீங்கள் தரமான உணவை வழங்குவதோடு கிடைக்கும் இடத்தில் சமையலறையையும் பராமரிக்கலாம். உணவு வாகனத்தில் பெரும்பாலும் தயார் செய்து விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் பர்கர்கள், ரோல்ஸ், பாஸ்தா-கள், ஐஸ் க்ரீம்கள் மற்றும் சாண்ட்விச்கள் ஆகும்.

டாடா ஏஸ் - கஃபேடரியாவின் விசேஷ வடிவமைப்பு தெருவோர உணவு வேன், மொபைல் ஸ்நாக் சென்டர், மொபைல் கேட்டரிங் வாகனம் மற்றும் கிச்சன் ஆன் வீல்ஸ் என்ற பல சிறப்பம்சங்களுடன் வருகிறது. அவை விசேஷமாக வடிவமைக்கப்பட்ட உட்புற அமைப்பு, அலுமினியம் பிளேட்கள், ஸ்டீல் ஷீட்கள், சமையல் அல்லது சேமிப்பு வகை, எல்ஈடி லைட்களுடன் கூடிய விண்டோ பேனல்கள் போன்றவற்றின் மூலமாகவும் அழகு சேர்க்கலாம். கேஷ் பாக்ஸுடன் இண்டக்க்ஷன் மைக்ரோவேவ், ரெஃப்ரிஜெரேட்டர், மைக்ரோ ஒவன் மற்றும் டீப் ஃப்ரீஸர் போன்ற முக்கியமான கிச்சன் உபகரணங்களையும் பொருத்தலாம்.

டாடா ஏஸ் - கஃபேடரியா மினி டிரக்ஸ் உணவுத் தொழிற்துறையில் மிகவும் அனுபவம் பெற்ற தொழில் நிபுணர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உணவு வாகனத்தை வடிவமைக்க மதிப்பு வாய்ந்த கருத்துக்களை தெரிவித்தார்கள். இதன் மூலம் இது வெறும் கவர்ச்சி மிக்கதாக மட்டுமல்லாமல் சமையல் நிபுணர்களுக்குத் தேவையான இடவசதி கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மினி டிரக்கை வடிவமைக்கும் விதம் மற்றும் வகைக்கு ஏற்ப விலையும் வேறுபடும். டாடா ஏஸ், டாடா சூப்பர் ஏஸ், டாடா ஜிப் ஆகியவை பொதுவாக உணவு வாகனமாக மாற்றத் தேர்வு செய்யப்படும் வாகனங்கள் ஆகும்.

தொடர்பான படைப்புகள்