“டாடா ஏஸ் ஸ்டீல் கன்டெய்னர் – புதிய தொழில்முனைவோர் விரும்புவது”

“டாடா ஏஸ் ஸ்டீல் கன்டெய்னர் – புதிய தொழில்முனைவோர் விரும்புவது”

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

ஒவ்வொரு தொழிற்துறையிலும் சிறந்த நோக்கங்களுக்காக சேவை வழங்கும் பல வகை வாகனங்களை உருவாக்கிக் கொடுத்திருப்பதன் மூலம் டாடா மோட்டார்ஸ் தொழில் தேவைகளை நன்கு புரிந்து கொள்கிறது. ஒவ்வொரு தேவைகளுக்கும் அவர்களிடம் வாகனம் இருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. அவர்கள் புதிதாக டாடா ஏஸ் ஸ்டீல் கன்டெய்னரை உருவாக்கிக் கொடுத்துள்ளனர். இது தொழில் வளர்ச்சிக்கு உதவும் அவர்களின் தயாரிப்பு வரிசையில் மற்றொரு தயாரிப்பாக இடம் பிடித்துள்ளது. இந்த கன்டெய்னர் பாதுகாப்பு சிறப்பம்சங்கள், உறுதியான, மடிப்புகள் உள்ள பாடி போன்ற சிறப்பம்சங்களுடன் கிடைக்கிறது. இதன் அனுகூலமான வடிவமைப்பு இதனை இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்கள் உருவாக்கும் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாக ஆக்குகிறது.

ஓஈம் உற்பத்தி டாடா ஏஸ் ஸ்டீல் கன்டெய்னரிலிருந்து ஆராய் சான்றிட்ட வாகன கன்டெய்னராக இருப்பதால் இது தடங்கல் இல்லாத பதிவை உறுதி செய்கிறது. பாடியை உள்ளூரில் வடிவமைக்கத் தேவையில்லாத காரணத்தால் நேரத்தை வீணாக்காமல் இதனை முதல் நாளிலிருந்தே தொழிலுக்குப் பயன்படுத்தலாம். டாடா ஏஸ் ஸ்டீல் கன்டெய்னர் முழுமைக்கும் நிதியுதவி கிடைக்கும் என்பதால் செலுத்த வேண்டிய டவுன் பேமென்ட்டும் குறைவாகவே உள்ளது.

டாடா ஏஸ் ஸ்டீல் கன்டெய்னரை எது அவ்வளவு ஒப்பற்றதாக ஆக்குகிறது?

ஏரோடயனமிக் விண்ட் டிஃப்ளெக்டர்:
ஏரோடயனமிக் விண்ட் டிஃப்ளெக்டர் பொருத்தமான வடிவமைப்பு அனுகூலமாக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. டிரக்கிற்கு ஒரு ரசனையான தோற்றத்தைக் கொடுப்பதோடு இது எஃப்ஆர்பி விண்ட் டிஃப்ளெக்டர் மூலமாக அதிக பாரத்தை ஏற்றவும் உதவுகிறது.

மடிப்புகள் உள்ள கன்டெய்னரின் கூரை:
மேம்பட்ட மடிப்புகள் உள்ள கன்டெய்னரின் கூரை எந்தவிதமான கசிவையும் தடுத்து டிரக்கிற்கு வித்தியாசமான மற்றும் ஒப்பற்ற தோற்றத்தை கொடுக்கிறது. இவ்வாறு சேதமில்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

சிஈடி கோடட் / கல்வனைஸ்ட் பேனல் கன்டெய்னர் பாடி:
கல்வனைஸ்ட் பாடி அரிப்பு எதிர்ப்பை கொடுப்பதோடு வடிவமைப்பு மற்றும் ரசனையில் மட்டுமல்லாமல் டிரக்கின் தோற்றத்தை சிறப்பாக ஆக்குகிறது.

260 கோணத்தில் திறக்கும் கதவுகள்:
டிரக்கின் கதவுகள் 260 கோணத்தில் திறக்கக் கூடியவை. இவ்வாறு அதிக பாரம் ஏற்ற மற்றும் இறக்க போதுமான இடவசதி உள்ளது. இது பெரிய பொருட்களை அதிக சிரமமில்லாமல் ஏற்றுவதை எளிதாக்குகிறது.

கசிவு ஏற்படாத வடிவமைப்பு:
டிரக்கின் கசிவு ஏற்படாத வடிவமைப்பு சரக்கிற்கு, குறிப்பாக கனமழை பெய்யும்போது சேதம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. மேலும் இது தண்ணீர் உட்புகாதவாறு சரக்கிற்கு முழுமையான பாதுகாப்புத் தருகிறது.

டாப் மார்க்கர் லேம்ப்:
இரவு நேரத்தில் போதுமான பார்வை கிடைப்பதற்காக சிஎம்விஆர்-க்கு இணக்கமான டாப் மார்க்கர் லேம்ப் அளிக்கப்படுகிறது.

தற்போதைய தொழில் தேவைகளை கருத்தில்கொண்டு டாடா ஏஸ் ஸ்டீல் கன்டெய்னர்கள் சிந்தித்து வடிவமைக்கப்பட்டுள்ளன.

தொடர்பான படைப்புகள்