டாடா ஏஸ் ஸ்டீல் கன்டெய்னர் – கன்டெய்னர் தொழிற்துறையில் ஒரு புரட்சிகரமான தயாரிப்பு.

டாடா ஏஸ் ஸ்டீல் கன்டெய்னர் – கன்டெய்னர் தொழிற்துறையில் ஒரு புரட்சிகரமான தயாரிப்பு.

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

டாடா ஏஸ் ஸ்டீல் கன்டெய்னர் - டாடா உற்பத்தி செய்துள்ள ஒரு நீடித்து உழைக்கக் கூடிய நம்பகமான ஒரு தயாரிப்பு ஆகும். இது சிறந்த வழங்குதல்கள் மூலமாக பல்வேறு தொழில்களில் நற்பெயரை உருவாக்கியுள்ளது. இந்த கன்டெய்னர் நீடித்து உழைக்கும் மற்றும் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் தனது உறுதியான, வலிமையான பாடிக்காக பிரபலமாகியுள்ளது. தடங்கல் இல்லாத இயக்கத்தை உறுதி செய்யும் இதனுடைய ஒப்பற்ற சிறப்பம்சங்களின் மூலமாக இது சிறிய, நடுத்தர, பெரிய தொழில்களில் சரியான இடத்தைப் பிடிப்பதை உறுதி செய்துள்ளது.

டாடா ஏஸ் ஸ்டீல் கன்டெய்னர் உங்கள் தொழிலை சிறப்பாக்க எவ்வாறு உதவலாம்?

முதல் ஓஈஎம் கட்டப்பட்ட ஆராய் சான்றிட்ட கன்டெய்னர் வாகனம்:
ஆராய் சான்றளிக்கப்பட்ட முதல் வாகனமாக இருப்பதால் ஓஈஎம் உற்பத்தி டாடா ஸ்டீல் கன்டெய்னர் தடங்கல் இல்லாத பதிவுக்கு வழிவகுக்கிறது

முதல் நாள் முதலே தொழிலுக்கு தயார்:
இப்போது பயன்படுத்துவதற்கான பாடியை அமைக்க ஒரு பாடி பில்டர் தேவையில்லை. பயன்படுத்த தயாரான டிரக் முழுவதும் கட்டமைக்கப்பட்டதாக கிடைக்கிறது. எனவே நீங்கள் வாகனத்தை வாங்கியதுமே உங்கள் வேலையைத் துவங்கலாம்.

கூடுதல் முதலீடு தேவையில்லை:
மற்ற கன்டெய்னர்களைப் போல அல்லாமல், டாடா ஏஸ் ஸ்டீல் கன்டெய்னரின் விலை முழு பாடியுடன் சேர்ந்ததாக உள்ளது. நீங்கள் டிரக்கை வாங்கிய பிறகு கூடுதல் செலவுகளால் அதிக செலவாகுமே என்று நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

இந்த வகுப்பில் சிறந்த உத்தரவாதம்:
பல்வேறு துறைகளிலும் அதிக பயன்பாட்டில் இருப்பதால், இந்த டிரக் 1 ஆண்டு பாடிக்கான உத்தரவாதத்துடன் 2 ஆண்டு உத்தரவாதத்துடன் கிடைக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வாகனம்:
டாடா ஏஸ் ஸ்டீல் கன்டெய்னர்கள்தான் முதன்முதலாக வாடிக்கையாளர்களின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலும் உண்மையாகப் பயன்படுத்துவோர் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை ஆய்வு செய்த பின்னரே இந்த மினி டிரக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரத்திற்கான உத்தரவாதம்:
கன்டெய்னர்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுவதற்கு முன்பாக பல தரச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இது புகார்கள் மற்றும் விபத்துகள் குறைந்தபட்சமாக ஏற்படுவதை உறுதி செய்கிறது. அவை கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவதாலும் சோதனை செய்முறைகளை கடப்பதாலும் கன்டெய்னர்களின் தரம் மற்றும் செயல்திறன் குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை.

டாடா ஏஸ் கன்டெய்னர் தொலை தூர மற்றும் நகரத்திற்கு இடையே சரக்குகளை ஏற்றிச் செல்ல பொருத்தமானது. டிரக்கின் வடிவமைப்பு குறுகிய சந்துகளிலும் சிறந்த நிலைத்தன்மை மற்றும் எளிதாக கையாளுதலை எளிதாகச் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்பான படைப்புகள்