Tata Ace Petrol – Trust of Ace with Profitability of Petrol

டாட்டா ஏஸ் பெட்ரோல் – பெட்ரோலின் இலாபத்துடன் ஏஸ் -இன் நம்பிக்கை

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

2005-ஆம் ஆண்டு டாட்டா ஏஸ் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து மூலை முடுக்கெல்லாம் டெலிவரி செய்வதற்கு விரும்பத்தக்க வாகனமாக அது இருந்து வருகிறது. ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும், ஒரு டாட்டா ஏஸ் விற்பனை செய்யப்படுகிறது, இந்தியாவின் இன்னுமொரு தொழில்முனைவோரின் உயர்ந்த இலட்சியங்கள் ஆற்றல் பெறுகிறது.

இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் உள்ள 23 லட்சத்திற்கு மேற்பட்ட தொழில் உரிமையாளர்கள், அவர்களின் செயல்பாடுகள் சீராகவும் திறன் மிகுந்ததாகவும் நடைபெற டாட்டா ஏஸ்-ஐ நம்புகின்றனர்.

அதே நம்பகத்தன்மை, நம்பிக்கை மற்றும் எளிமை ஆகியவற்றிற்குப் பெயர்பெற்ற டாட்டா ஏஸ், காலப்போக்கில் எங்கள் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கிணங்க மாற்றமடைந்துள்ளது. டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல் BS6-இன் அறிமுகம் இந்தியா முழுவதும் உள்ள ஏஸ்பிரனர்களுக்கான சமீபத்திய உற்சாகமூட்டும் செய்தியாக இருந்தது.

முதல் முறையாக, ஏஸ்-இன் நன்மை பெட்ரோலில், மேலும், இது இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான தொழில்முனைவோரை உருவாக்கவுள்ளது.

முதல் நாளிலிருந்தே வருமானத்தை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது

வடிவமைப்பிலிருந்து செயல்பாடு வரை, டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல், சாலையில் அதன் முதல் நாளிலிருந்தே நிலையான வருமானத்தை வழங்கக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நீடித்து இருக்கவும், நீண்ட கால இலாபத்தை உறுதி செய்யவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

லாஜிஸ்டிக்ஸ் துறையில் நீங்கள் கால் பதிக்க விரும்புகிறீர்கள் என்றால், பின்னர் டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல் உங்கள் வெற்றிக்கான பாதையாக இருக்கக்கூடும்.

ஒவ்வொரு பயணத்திலும் எரிபொருள் திறன்

டாட்டா ஏஸ் கோல்டு BS6 பெட்ரோல், ஒவ்வொரு பயணத்தையும் இலாபகரமாக்க உதவும் அற்புதமான மைலேஜை வழங்குகிறது. BS6 பெட்ரோல் எஞ்சின், டாட்டா 275 கசொலின் MPFI" BS-VI 4 ஸ்ட்ரோக் தண்ணீரால் குளிர்ச்சியூட்டப்பட்ட எஞ்சினால் ஆற்றலூட்டப்பட்டதாகும்.

கியர் ஷிஃப்ட் அட்வைசர் மற்றும் எகோ-ஸ்விட்ச் போன்ற எரிபொருள் நுண்ணறிவு அம்சங்கள், வாகனத்தின் எரிபொருள் நுகர்வு அதிகபட்சச் செயல்திறனுக்கு உகந்ததாக்கப்பட்டதை உறுதி செய்கிறது.

ஏஸ்-ஐ நாம் அறிவதற்கும் நேசிப்பதற்கும் காரணமான அதன் சிறந்த செயல்திறன் - 30 HP அதிக ஆற்றலுடன், நல்ல ஆக்ஸிலரேஷனுக்காக 55 Nm அதிகக் முறுக்குத்திறனுடன், நல்ல பிக்அப்பிற்காக 30% அதிக கிரேடெபிலிட்டி மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 70 கிமீ என்ற அதிகபட்ச வேகத்துடனும் உள்ளது.

நல்ல வருமானத்திற்கு அதிக சுமை!

லாஜிஸ்டிக்ஸில் ஒவ்வொரு கிலோவுக்கும் பணம் ஈட்ட முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல் அதிகச் இடவசதியையும், அதிக சுமை சுமக்கும் திறனையும் கொண்டுவருகிறது.

கூடுதல் வலுவூட்டல்களை வழங்கும் அதிகம் உழைக்கும் சேஸுக்கு நன்றி, டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோலால் 750 கிலோ வரை சுமக்க முடியும்.

கரடுமுரடான முன்பக்க மற்றும் பின்பக்க லீஃப் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன், அனைத்து வகையான மேடு பள்ளங்கள் மற்றும் நிலப்பரப்புகளில் சீராகச் சுமந்து செல்ல உதவுகிறது, எனவே அதிக அளவிலான டெலிவரிகளை மிகவும் வெற்றிகரமாகச் செய்யலாம்.

மேம்படுத்தப்பட்ட சௌகரியம் மற்றும் வசதி

ஒரு சௌகரியமான சவாரி என்றால் சோர்வு ஆபத்து மற்றும் உற்பத்தித்திறன் இழப்பு இல்லாமல் நீண்ட தூரப் பயணம் என்பதாகும்.

ஏஸ் கோல்டு பெட்ரோல் கேபின், அதன் சௌகரியமான இருக்கைகள் மற்றும் ஸ்டீயரிங்குடன் ஓட்டுநரின் சௌகரியத்தையும், ஒட்டுமொத்த வாகனம் ஓட்டும் தரத்தையும் மேம்படுத்துகிறது.

ஒரு பெரிய கையுறை பெட்டி, தனித்தனியாகப் பாட்டில் மற்றும் டாக்குமெண்ட் ஹோல்டர், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் சேமித்து வைக்கப் போதுமான இடவசதியை வழங்குகிறது. அதே வேளையில் USB சார்ஜர் போகின்ற வழியில் உங்களின் இணைப்பு நிலையை உறுதி செய்கிறது.

ஒரே பார்வையில் அனைத்து தகவல்களையும் தந்து, கவனச் சிதறல் இல்லாத வாகனம் ஓட்டும் அனுபவத்தை ஊக்குவிக்கும் டிஜிட்டல் தொகுதி.

குறைவான பராமரிப்பு, எளிமையான தொழில்நுட்பம்

டாட்டா ஏஸ் BS6 எஞ்சின் எளிமையான மற்றும் சிக்கலற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது பராமரிக்க எளிதானது மற்றும் மலிவானது. டாட்டாவின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் உள்ள பயிற்சி பெற்ற தொழில் வல்லுநர்களை நாங்கள் பரிந்துரைக்கும் போதிலும், நாடு முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் மெக்கானிக்குகளுக்காக எப்போதும் விஷயங்களை எளிமையாக வைக்கப்படுவதையும், சிக்கல் மற்றும் செலவுகள் தவிர்க்கப்படுவதையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

சாலையின் நிலை எதுவாக இருந்தாலும் எஞ்சினின் நீடிப்பு திறன் அதை வரும் ஆண்டுகளில் சீராக ஓட வைக்கிறது. சுலபமாகக் கிடைக்கும் உதிரி பாகங்கள் மற்றும் டாட்டா மோட்டார்ஸின் 1400+ அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையங்களின் வலுவான நெட்வொர்க்.

இது அதிக ஆயுளை வழங்குகிறது, இதை வாங்கும் போது இது 2 வருடம் அல்லது 72,000 கிமீ உத்தரவாதத்தால் ஆதரிக்கப்படுகிறது.

ஏஸ் உடன் உங்கள் தொழிலைத் தொடங்க இது சரியான நேரமா?

ஆம். இறுதி கட்ட டெலிவரி என்பது இந்தியாவின் லாஜிஸ்டிக்குகளில் ஒரு பெரிய பங்கு வகிக்கிறது, மேலும் வளர்ந்து வரும் மின்வணிகத்தால் அதன் முக்கியத்துவம் இன்னும் அதிகரிக்கிறது. டாட்டா ஏஸ்-இன் பன்முகத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை, வரும் ஆண்டுகளில் உங்கள் வெற்றிக்கான காரணமாக இருக்கும் என்பது உறுதி.

இன்றே ஏஸ் உடன் உங்களுடைய தொழில்முனைவோர் பயணத்தைத் தொடங்க நீங்கள் தயாரா? ஏன் காத்திருக்கிறீர்கள்?

எங்கள் ஆன்லைன் CV விற்பனை தளத்தில் உங்களின் புதிய ஏஸ் கோல்டு பெட்ரோல் BS6-ஐ சொந்தமாக்கிக்கொள்வது இப்போது மிகவும் எளிமையானதாகும். உங்கள் ஏஸ்-ஐ தேர்ந்தெடுத்து, ஒரே க்ளிக்கில் அதை முன்பதிவு செய்யுங்கள்.

தொடர்பான படைப்புகள்