Tata Ace Petrol – Low Cost, Simple Technology, top selling CV petrol model

டாட்டா ஏஸ் பெட்ரோல் – குறைந்த செலவு, எளிமையான தொழில்நுட்பம், அதிகமாக விற்பனையாகும் CV பெட்ரோல் மாடல்

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

நகரங்கள், சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் முழுவதும் வெற்றிகரமான இறுதிக்கட்ட போக்குவரத்து தொழில்களில் சிறிய வணிக வாகனங்கள் ஒரு முக்கியப் பங்காற்றுகின்றன. டாட்டா ஏஸ், சின்ன யானை, 2005-ஆம் ஆண்டு அது அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து சிறிய வணிக வாகனப் பிரிவில் இந்தியாவில் முன்னணியில் உள்ளது. இருப்பினும், வாடிக்கையாளரின் நலன்களுக்காக டாட்டா மோட்டார்ஸின் மிகவும் பிரபலமான டிரக்கின் புதிய வகைகளை அறிமுகம் செய்வதிலிருந்து டாட்டா மோட்டார்ஸைத் தடுக்கவில்லை. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாட்டா ஏஸ் கோல்டு BS6 பெட்ரோல் வகை வாகனம் அந்த உண்மையை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

முதல் முறை வாடிக்கையாளர் நிம்மதியாக முதலீடு செய்வதற்காக இந்த மாடல் மிகவும் மலிவான விலையில் வருகிறது, மேலும் எளிமையான தொழில்நுட்பம் காரணமாகப் பராமரிப்பு செலவுகளைக் குறைவாக வைக்கிறது மற்றும் பல ஆண்டுகளுக்கு நிலையான வருமானத்தைத் தருகிறது. சிறிய வணிக வாகனப் பிரிவில் இது அதிகம் விற்பனையாகும் பெட்ரோல் மாடல் என்பதற்கான காரணம் இதுவாகும்.

நம்பகமான, நீடித்து உழைக்கும் தொழில்நுட்பம் மற்றும் நவீன காலத்தின் சவாரி மற்றும் வாகனம் ஓட்டும் சௌகரியத்தால் ஆதரிக்கப்படும் டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல், இந்தியச் சாலையில் ஒரு தொழில் வெற்றிகரமாக இருப்பதற்குத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது. அது அவ்வாறு இருப்பதற்குக் காரணமான குறிப்பிடத்தக்க அம்சங்கள் மற்றும் நன்மைகள் குறித்து நெருக்கமாகப் பார்ப்போம்.

நம்பகமானஎஞ்சின்மற்றும்வாகனத்தின்வடிவமைப்பு

டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல், சீராகவும் செயல்திறனுடனும் ஓடும் 275 கசோலின் MPFI BS-VI, 4-ஸ்டிரோக் தண்ணீரால் குளிர்விக்கப்படும் எஞ்சினுடன் வருகிறது, அது 22 kW அதிகபட்ச அவுட்புட்டை 4000 RPM-இல் மற்றும் 55 NM அதிகபட்ச முறுக்குத்திறனை 2500-3000 RPM-இல் வழங்குகிறது. ஒற்றைத் தட்டு உலர் உராய்வு டயாஃப்ரம் வகை கிளட்ச் ஒப்பீட்டளவில் நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது. டெலெஸ்கோபிக் ஷாக் அப்ஸார்பருடன் பாரபோலிக் லீஃப் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் முன்பக்கத்திலும், அரை-நீள்வட்ட லீஃப் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் பின்பக்கத்திலும் உள்ளது, எனவே மினி டிரக்கால் சுலபமாக எந்தவொரு சுமையையும் எந்தவொரு நிலப்பரப்பிலும் சுமந்து செல்ல முடியும். கியர் ஷிஃப்ட் அட்வைசர் மற்றும் எகோ ஸ்விட்ச் சரியான கியர் ஷிஃப்டை உடனடியாகக் குறிப்பிடும் மற்றும் ஒவ்வொரு பயணத்திலும் எரிபொருள் நுகர்வை உகந்ததாக்கி சேமிப்புகளை அதிகரிக்கிறது. கார்கோ பாடி நீலம் 7.2 அடி மற்றும் ஒட்டுமொத்த வாகனத்தின் நீளம் மற்றும் அகலம் பரபரப்பான இந்தியச் சாலைகளில் சுலபமாகத் திசையை மாற்றுவதற்காகக் குறைவான திருப்ப வட்ட ஆரத்திற்காக உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 145 மிமீ செக்ஷன் அகலத்துடன் உள்ள ரேடியல் டியூப் டயர்கள் சுமைகளைக் கையாளும் மினி டிரக்குகளுக்கு ஏற்றதாகும், இதன் விளைவாக அதிக டயர் ஆயுளும், செயல்பாடுகளின் செலவு குறைப்பும் கிடைக்கும்.

அதிகபேலோட்,குறைவானபராமரிப்புசெலவுகள்மற்றும்உறுதிப்படுத்தப்பட்டசேவைவாக்குறுதிகள்

டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோலின் வலிமை மிக்க, அதிகம் உழைக்கும் சேஸ் மற்றும் நீடித்து உழைக்கும் டிரக் போன்ற ஆக்ஸில்கள், 750 கிலோ என்று இருக்கும் அதன் சுமை சுமக்கும் திறனுக்கு வலுவூட்டுகிறது. ஒவ்வொரு சவாரியிலும், அதிகச் சரக்குகளை இதனால் இடமாற்ற முடியும், மேலும், நீங்கள் எரிபொருள் செலவுகள் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. இது மிகவும் சிக்கனமான தேர்வாக இருப்பதற்கான காரணம், அதன் ஒட்டுமொத்த ஆயுள், 1600+ டாட்டா மோட்டார்ஸ் டீலர்களிடம் சுலபமாகக் கிடைக்கக்கூடிய உதிரி பாகங்கள் மற்றும் ஏதாவது பிரச்சனை எழுந்தால் தேர்ந்தெடுப்பதற்காக டாட்டாவால் அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையங்கள் ஆகியனவாகும். டாட்டா ஏஸ் கோல்டு 2-வருட/ 72,000 கி.மீ உத்தரவாதத்துடன் வருகிறது, எது முதலில் வருகிறதோ. டாட்டா அலெர்ட் மற்றும் டாட்டா ஜிப்பி போன்று, துறையின் முன்னணி சேவை வாக்குறுதிகளால் ஆற்றலூட்டப்பட்டு, வாகனம் ஓடும் நேரத்தை மேம்படுத்திப் பராமரிப்பு செலவுகள் குறைக்கப்படுகிறது, அதே வேளையில், சார்ந்திருக்கக்கூடிய மற்றும் இலாபம் தரக்கூடிய வருமானத்தை மாதாமாதம் பெறுவதை உறுதி செய்கிறது.

டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல், 6-இன் சக்தியைக் கொண்டுள்ள இது, தொழில்கள், போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகள் மற்றும் பயன்பாடுகளில் உள்ள தொழில்முனைவோருக்கான சிறிய வணிக வாகனத்தின் தேர்வாகும், அதில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட தயாரிப்பின் இறுதி கட்ட டெலிவரி அல்லது நுகர்வோர் மற்றும் தொழில்துறை சரக்குகளின் போக்குவரத்து உட்பட அனைத்தும் இதில் அடங்கும். டாட்டா மோட்டார்ஸ் டீலர்ஷிப்களிடம் மிகவும் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது, டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல் என்பது குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தைத் தரும் ஒரு சொத்து ஆகும்.

தொடர்பான படைப்புகள்