டாடா ஏஸ் மாடல்களும் விலைகளும்

டாடா ஏஸ் மாடல்களும் விலைகளும்

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

டாடா மோட்டார்ஸ் புகழ்பெற்ற ஏஸ் குடும்ப வாகனங்கள் மற்றும் பல பன்முக வாகனங்கள் மூலமாக மினி டிரக் பிரிவில் கோலோச்சி வருகிறது. இந்த மினி சரக்கு வாகனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வரமாக அமைந்துள்ளது மற்றும் வெற்றியை உருவாக்கியுள்ளது. டாடா ஏஸின் பல வாகனங்கள் மற்றும் அவற்றின் மாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. டாடா ஏஸ்:
டாடா ஏஸில் துவங்கி, எல்லாப் பகுதிகளிலும் ஓடக் கூடிய வர்த்தக ரீதியாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மிகவும் விலைச் சிக்கனமானது மற்றும் இந்தியச் சந்தையில் குறைந்த பராமரிப்பு கொண்ட மினி டிரக்காக உள்ளது.

2. டாடா ஏஸ் ஜிப்:
ஒற்றை சிலிண்டர், வாட்டர் கூல்ட் என்ஜின் சக்தி வழங்கும் ஏஸ் ஜிப் 2 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கிடைக்கிறது. இது 1685 மிமீ பாடி நீளமும் 600 கிலோ பாரமும் ஏற்றக் கூடியது.

3. டாடா ஏஸ் ஜிப் எக்ஸ்எல்:
2017-ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நவீன வர்த்தக வாகனமான ஏஸ் ஜிப் எக்ஸ்எல்லை துவங்கியது. 600 சிசி என்ஜினால் பவர் வழங்கப்படும் ஜிப் எக்ஸ்எல் பல கவர்ச்சிகரமான நிறங்களில் 2 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கிடைக்கிறது. போட்டி டிரக்குகளுடன் ஒப்பிடுகையில் ஜிப் எக்ஸ்எல்லின் விலை மிகவும் சிக்கனமானது.

4. டாடா ஏஸ் எக்ஸ்எல்:
டாடா ஏஸ் எக்ஸ்எல்லை சரியாக விவரிக்கும் "குட்டி யானை பெரிதாகும்" என்ற முழக்கத்துடன் இது 2017-ல் வெளியிடப்பட்டது. இது நீட்டிக்கப்பட்ட பாரம் ஏற்றும் திறனுடன் 702 சிசி என்ஜின் மற்றும் 16 எச்பி ஆற்றலுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மலைப்பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் பாதுகாப்பாக இயக்கப்படும் சக்தி கொண்டது. இது 2 ஆண்டுகள் / 72000 கிமீ உத்தரவாதத்துடன் கிடைக்கிறது.

5. டாடா ஏஸ் மெகா:
டாடா ஏஸ் மெகா தங்களது வர்த்தக வாகனப் பிரிவில் டாடா மோட்டார்ஸ் புதிய வகையான டாடா ஏஸ் மெகா பெருமையுடன் துவங்கியது. 40 எச்பி சக்தி கொண்ட இந்த 4வது தலைமுறை டிகோர் டீசல் என்ஜின் காரணமாக இந்த மினி டிரக் சக்தி வாய்ந்த பிக்அப்பை தருகிறது.

6. டாடா ஏஸ் மெகா எக்ஸ்எல்:
ஏஸ் எக்ஸ்எல், ஏஸ் மெகாவை விட ஏஸ் மெகா எக்ஸ்எல் சற்று விலை அதிகமானதாகும். அதற்கு நீட்டிக்கப்பட்ட 2520 மிமீ நீளமுள்ள சரக்கு பாடி, 798சிசி மற்றும் 100 கிலோ பாரமேற்றும் திறனுடன் இருப்பதே காரணமாகும்.

7. டாடா சூப்பர் ஏஸ் மின்ட்:
சூப்பர் ஏஸ் மின்ட் நடப்பில் உள்ள வர்த்தகச் சந்தையில் சரக்கு பாடி 2630 மிமீ நீளத்துடன் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.

தொடர்பான படைப்புகள்