டாடா ஏஸ் மெகா எக்ஸ்எல் – குட்டி யானை பெரிய பாரங்களை நோக்கி நகர்கிறது

டாடா ஏஸ் மெகா எக்ஸ்எல் – குட்டி யானை பெரிய பாரங்களை நோக்கி நகர்கிறது

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

டாடா ஏஸ் குடும்ப வாகனங்களின் உறுப்பினரான டாடா ஏஸ் மெகா எக்ஸ்எல் சிறிய வர்த்தக வாகனப் பிரிவில் ஆதிக்கம் செலுத்த டாடா மோட்டார்ஸ்க்கு பயன் தருவதாக உள்ளது. ஏஸ் மெகாவிலிருந்து சிறப்பம்சங்களைப் பெற்று எக்ஸ்எல் வடிவம் பாரமேற்றுதல், என்ஜின் மற்றும் பாடியின் நீளத்தில் தனித்துவத்துடன் திகழ்கிறது.

இந்தியாவில் புகழ்பெற்ற ஆட்டோமொபைல்

டாடா ஏஸின் வேறு வகைகளின் சுவடுகளைப் பின்பற்றி அசல் ஏஸை (குட்டி யானை) விட அதிக பலம் வாய்ந்ததாக டாடா ஏஸ் மெகா எக்ஸ்எல் சக்தியளிக்கப்பட்டுள்ளது. அற்புதமான சிறப்பம்சங்கள் மற்றும் கணிசமான பாரமேற்றும் திறனால் ஆதரவளிக்கப்பட்டு பாரங்களை எளிதாக ஏற்றிச் செல்வதற்கான ஏஸ் மெகா எக்ஸ்எல் சிறந்த டெம்போ வாய்ப்பாக உள்ளது.

இதன் சரக்கு பாக்ஸ் நீளம் 2,450 மிமீ ஆக இருப்பதால் அதிக பாரம் ஏற்றிச் செல்ல உதவுகிறது. 800சிசி 2 சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் டைரக்ட் இன்ஜெக்ஷன் காமன் ரெயில் டர்போசார்ஜ்ட் மோட்டார் கொண்ட இது 40.02 பிஎச்பி சக்தியை வெளியிட்டு 100 என்எம் டார்க்கை வெளியிடுகிறது. மெகா எக்ஸ்எல்லின் எரிபொருள் டேங்க்கின் கொள்ளளவு 30 லிட்டர் ஆகும். இது இதன் போட்டி வாகனங்களை விட சிறந்த வழியை அளித்து நீண்ட தூரம் பயணிக்க ஆதரவளிக்கிறது.

அதிக பாரம் ஏற்றிய பின்னரும் டாடா ஏஸ் எக்ஸ்எல் சிறப்பாக செயல்படுகிறது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, வீல்பேஸ் 2250 மிமீ ஆக இருப்பது. இது மத்திய ஈர்ப்பு மையத்தை மிகவும் உறுதியாக ஆக்குகிறது. அதிக எடையை ஏற்றிச் செல்லக் கூடியதாக இருப்பதோடு ஏஸ் மெகா எக்ஸ்எல் ஆன்ட்டி லாக் பிரேக் சிஸ்டம் (ஏபிஎஸ்), சீட் பெல்ட்கள், உடன் டியூப்லெஸ் டயர்கள் மற்றும் புதிய நேவிகேஷன் சிஸ்டமை பயன்படுத்தி பாதுகாப்பு விதிகளை பின்பற்றுகிறது.

பிஎஸ்-IV-க்கு இணக்கமான சிறிய வர்த்தக வாகனங்களின் எக்ஸ்எல் வகைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் டாடா மோட்டார்ஸ் பாதுகாப்பான, சிக்கனமான, நம்பகமான தொழில் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் தொலைதூர வழங்கும் தீர்வுகளை வழங்குவதை நோக்கமாக கொள்கிறது. டாடா மோட்டார்ஸ் எக்ஸ்எல் வகை வாகனங்கள் 2 ஆண்டுகள் அல்லது 72000 கிமீ, இதில் எது முன்னதாக நடைபெறுகிறதோ அதை உத்தரவாதமாக தருகிறது. சிறிய வர்த்தக வாகனத்தின் இந்த பவர் பேக்ட் எக்ஸ்எல் வகை இந்தியாவில் எல்லா டீலர்களிடமும் கிடைக்கிறது.

தொடர்பான படைப்புகள்