டாடா ஏஸ் மெகா எக்ஸ்எல் – பணத்திற்கு தக்க மதிப்புக் கொண்டதா?

டாடா ஏஸ் மெகா எக்ஸ்எல் – பணத்திற்கு தக்க மதிப்புக் கொண்டதா?

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

புதிய மெகா ஏஸ் போக்குவரத்து தொழிற்துறையில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்யுமா?
புதிய மெகா ஏஸ் வகை போக்குவரத்து துறையின் தேவையை பூர்த்தி செய்யுமா?

டாடா ஏஸ் குடும்ப வாகனங்களில் புதிய சேர்க்கை ஏஸ் மெகா எக்ஸ்எல் ஆகும். உறுதியான இந்த வாகனம் போக்குவரத்து தொழிலுக்கு மிகவும் நம்பகமான தீர்வாகும். 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஏஸ் மெகாவுடன் ஒப்பிடுகையில் மெகா எக்ஸ்எல் அளவில் 15% நீளமானது மற்றும் 1 டன் பாரம் ஏற்றும் திறன் கொண்டது. உறுதியான 2.1 டன் ஜிவிடபிள்யூ பாடியுடன், 14 அங்குல ரேடியல் டியூப் டயர்கள் மற்றும் பவர் ஸ்டீயரிங் உடன் ஏஸ் மெகா எக்ஸ்எல் நகர மற்றும் கிராமப் பகுதிகளில் சிறந்த வர்த்தக போக்குவரத்துக்கான வாகனமாக மிளிர்கிறது. இது விலைக்கான மதிப்பைத் தருகிறது மற்றும் அதிகபட்ச வருவாயை உருவாக்கித் தருகிறது.

சிறிய வர்த்தக வாகனப் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் டாடா ஏஸ் மெகா எக்ஸ்எல் வகைகளின் பயன்களும் பயன்பாடுகளும்:

டாடா ஏஸ் மெகா எக்ஸ்எல் - இது பணத்திற்கான மதிப்புக் கொண்டது

அனைத்து வகை சரக்குப் போக்குவரத்துகளுக்கும் பயன்படுத்தலம்:
எக்ஸ்எல் டிரக் ஆக இருப்பதால், 2520 மிமீ நீளமுள்ள நீண்ட சரக்கு பாடியை கொண்டுள்ளது. இது கனமான சாக்குப்பைகள், எஃப்எம்சிஜி தயாரிப்புகள், பைப்கள், தொழிற்துறை பொருட்கள் உட்பட அனைத்து வகை சரக்குகளையும் எடுத்துச் செல்ல உதவுகிறது.

தூரத்தை கடக்கிறது:
4 ஸ்ட்ரோக் டர்போசார்ஜ்ட் மோட்டார் என்ஜின் மெகா எக்ஸ்எல் டிரக் சரியான நேரத்தில் சரக்கை வழங்கி லாபத்தை அதிகரிக்கிறது.

உயர் செயல்திறன் சிறப்பம்சங்களின் சேர்க்கை:
நன்கு வடிவமைக்கப்பட்ட கேபின், நீண்ட பாரமேற்றும் டெக், இந்த வகுப்பில் சிறந்த எரிபொருள் சிக்கனம், சக்தி மற்றும் வேகம் ஏஸ் மெகா எக்ஸ்எல்லை சிறந்த போக்குவரத்துக்கான நம்பகமான வாகனமாக்குகிறது.

நீண்டகாலத்திற்கான உத்தரவாதம்:
டாடா மோட்டார்ஸ் எக்ஸ்எல் வகை வாகனங்கள் மன நிம்மதி தரும் 2 ஆண்டுகள்/ 72000 கிமீ உத்தரவாதத்துடன் வருகின்றன.

மினி டிரக் பிரிவில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸின் ஏஸ் மினி மற்றும் எக்ஸ்எல் வகை வாகனங்கள் குறைந்த விலை மற்றும் பராமரிப்புச் செலவுகளுடன் இன்றைய சந்தையில் மிகவும் பன்முகத் திறன் கொண்டவையாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

தொடர்பான படைப்புகள்