டாடா ஏஸ்: இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் சிறிய வர்த்தக வாகனம் (எல்சிவி)

டாடா ஏஸ்: இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் சிறிய வர்த்தக வாகனம் (எல்சிவி)

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

2005-ம் ஆண்டு ஸ்மார்ட் மினி டிரக்கான டாடா ஏஸ் விற்பனையை துவக்கியதிலிருந்தே டாடா மோட்டார்ஸ் எஸ்சிவி துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காலப்போக்கில், விரைவான மற்றும் நம்பகமான வர்த்தக வாகனமாக இருப்பதால் இது வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான ஒன்றாகி விட்டது. டாடா ஏஸ் துவங்கிய பின்னர் முன்பு எப்போதும் இல்லாத வெற்றியுடன், டாடா மோட்டார்ஸ் சிறந்த வாகனங்கள் மற்றும் மினி டிரக்குகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாக கொண்டது. இவ்வாறு காலப்போக்கில் டாடா ஏஸ் குடும்ப வாகனங்கள் உருவாக்கப்பட்டன.

இந்தியாவின் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் பாதுகாப்பானது மட்டுமல்லாமல் நீடித்து உழைக்கக் கூடிய, நீண்ட கால அளவில் பொக்கிஷமாக இருக்கக் கூடிய பெரிய வகை வாகனங்களை வழங்க முயன்று வருகிறது. டாடா ஏஸ் குடும்ப வாகனங்களின் ஈடிணையற்ற தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனைக்குப் பிறகான சேவை மினி டிரக் பிரிவில் முக்கிய சந்தை பங்கைப் பெறுகிறது. மேலும், இது கிராமப்புறங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஒரு வரமாக ஆகியுள்ளது.

டாடா ஏஸின் முக்கிய பயன்பாடு அழியக் கூடிய பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், மினரல் வாட்டர், சிமென்ட், ஃபர்னிச்சர் போன்றவற்றை எடுத்துச் செல்லுதல் ஆகும். எந்தவொரு வர்த்தக வாகனத்திற்கும் மைலேஜ் முக்கியமானது. டாடா ஏஸ் இந்தத் தகுதியையும் பெற்றுள்ளது. டாடா ஏஸ் தனது எல்லா வகை வர்த்தக வாகனங்களிலும் பெரிய எரிபொருள் டேங்க்கை வழங்குகிறது. இது நீண்ட தூரப் பயணத்திற்கு ஏற்றதாக உள்ளது.

டாடா ஏஸ் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சிறிய வர்த்தக வாகனம் என்ற பெயரை பெற்றுள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இது 20 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்தியா முழுவதுமாக டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களைக் கொண்டுள்ளது.

ஜிப் எக்ஸ்எல், ஏஸ் எக்ஸ்எல், ஏஸ் மெகா எக்ஸ்எல் வாகனங்களைக் கொண்ட எக்ஸ்எல் வாகனங்கள் எளிதில் வாங்கும் விலை மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவு மூலமாக மினி டிரக் பிரிவில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. இது நாடு முழுவதும் சிறிய தொழில் முனைவோர் மற்றும் சுயதொழில் செய்பவர்களை உருவாக்கியுள்ளது. டாடா ஏஸ் தொடர்ந்து இந்தியாவில் வர்த்தக வாகனப் பிரிவில் கோலோச்சுகிறது. இதற்கு காரணம் பல்வேறு சூழல்களிலும் இதனுடைய சிறப்பான இயக்கமே ஆகும்.

தொடர்பான படைப்புகள்