Tata Ace Gold — The Best Vehicle for a First Time Customer

டாட்டா ஏஸ் கோல்டு – முதல் முறை வாடிக்கையாளருக்கான சிறந்த வாகனம்

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

"சிறந்தது" என்பதை ஒவ்வொருவரும் வெவ்வேறாக வரையறுக்கின்றனர். சிலருக்கு, சந்தையில் ஒரு தயாரிப்பு எவ்வளவு காலம் இருக்கிறது என்பதன் மூலம் மதிப்பிடுகின்றனர், மற்றவர்கள் விற்பனை மூலம் மதிப்பிடுகின்றனர், அதே வேளையில் சிலர் வாடிக்கையாளரின் திருப்தியை வரையறை குறியீடாகப் பார்க்கத் தேர்வு செய்கின்றனர்.

எது டாட்டா ஏஸ்-ஐ சிறந்ததாக்குகிறது என்றால், நீங்கள் அதை எப்படிப் பார்த்தாலும் அது பல மைல்கள் முன்னிலையில் உள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் இந்தச் சிறிய வணிக வாகனம் அல்லது மினி கார்கோ டிரக்கை 2005-ஆம் ஆண்டு முதலில் அறிமுகம் செய்தது. அதன் 16-ஆண்டு காலப் பயணத்தில், இந்த டிரக் இந்தியாவின் இறுதி கட்டப் போக்குவரத்து துறையைப் புரட்சிகரமாக்கியது. பல்வேறு துறைகள் மற்றும் பயன்பாடுகளில் தொழில்களுக்கான முதல் தேர்வாக மாறியுள்ள டாட்டா ஏஸ், பெரிய நகரங்கள் மட்டுமல்லாமல், சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற புவியியல்களின் போக்குவரத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.

இது போன்ற தேவைகளுடன் புதிய தொழிலைத் தொடங்க விரும்புபவர்களுக்காக, முதல் நாளில் இருந்து, வரும் அனைத்து ஆண்டுகளிலும் நிலையான மற்றும் நீடிக்கக்கூடிய இலாபத்தின் பாதையில் உங்கள் பயணத்தைத் தொடங்க டாட்டா ஏஸ் முதல் முறை பயன்படுத்துவதற்கு ஏற்ற சிறந்த வாகனம் ஆகும்.

மூன்று டாட்டா ஏஸ் கோல்டு வகைகளான - டீசல், பெட்ரோல் மற்றும் CNG ஒவ்வொன்றிலும் வடிவமைக்கப்பட்டுள்ள அம்சங்கள் மற்றும் தரவரைவுகளுக்கு நன்றிகள், இது எரிபொருள் திறன் கொண்ட BSVI தொழில்நுட்பத்தால் ஆற்றலூட்டப்படுகிறது, இது அதிக ஆற்றல் மற்றும் பிக்அப், உறுதியான சுமை சுமக்கும் திறன் மற்றும் சீராக வாகனம் ஓடுவது ஆகியவற்றிற்கான வாக்குறுதியை வழங்குகிறது. முதல் முறை வாடிக்கையாளராக நீங்கள் எவ்வாறு பலனடைவீர்கள் என்பதை நாம் நெருக்கமாகக் காண்போம்.

செயல்திறன்

டாட்டா ஏஸ் மாடல்களில் அதிகப் பிக்-அப் மற்றும் மைலேஜைத் தரும் நம்பகமான பவர் டிரேன்கள் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் வகை வாகனம், நிரூபிக்கப்பட்ட நம்பகமான 2 சிலிண்டர் 700 cc BSVI DI எஞ்சினுடன் வருகிறது, பெட்ரோல் வகை வாகனம், டாட்டா 275 கசோலின் BS-VI MPFI எஞ்சினுடன் வருகிறது, CNG வகை வாகனம், மல்டிபாயின்ட் கேஸ் இன்ஜெக்ஷன் 694cc BSVI CNG எஞ்சினுடன் வருகிறது. மூன்றும், சிறப்பான எரிபொருள் திறனுக்காக இணைக்கப்பட்ட கியர் ஷிஃப்ட் அட்வைசரைக் கொண்டுள்ளது, அதே வேளையில், டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல் கூடுதல் எகோ ஸ்விட்சைக் கொண்டுள்ளது, அது எரிபொருள் பயன்பாட்டை உகந்ததாக்க மேலும் உதவுகிறது. ஒவ்வொரு டாட்டா ஏஸ் BSVI மினி டிரக்கும் சிறப்பான வேகம் மற்றும் பிக்அப்பிற்காக அதிக ஆற்றலுடன், நல்ல சுமை ஏற்றப்பட்ட ஆக்ஸிலரேஷனுக்காக அதிக முறுக்குத்திறனுடன் மற்றும் கிரேடெபிலிட்டியுடன் வருகிறது. அதற்கும் மேல், இரட்டை வலுவூட்டப்பட்ட அதிகம் உழைக்கும் டிரக் போன்ற சேஸ் மற்றும் கரடுமுரடான முன்பக்க மற்றும் பின்பக்க லீஃப் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷனின் உதவியுடன், 750 கிலோ என்ற அதிகப் பேலோடையும் கொண்டுள்ளது.

இது எந்தவொரு மற்றும் அனைத்து நிலப்பரப்பிலும் பல வகையான சரக்குகளைச் சுமந்து செல்லும் போக்குவரத்தை எளிதாக்குகிறது, இதன் மூலம் புதிய தொழில்முனைவு முயற்சிகள் அல்லது சுயதொழிலுக்கு அதிக வாய்ப்பை வழங்குகிறது.

பராமரிப்பு

டாட்டா ஏஸ் டிரக்குகள் குறைவான பராமரிப்பு தேவைப்படும் வாகனங்களாகும், மேலும் முதல் முறை வாங்குபவர்களுக்கு முழுமையான மன அமைதியை வழங்குகிறது, அதிக ஒட்டுமொத்த ஆயுள் மற்றும் சிறந்த மறுவிற்பனை மதிப்பைக் கொண்ட ஏஸ்-ஐ நீண்ட கால முதலீடாக உறுதிப்படுத்துகிறது.

உதிரி பாகங்கள் எளிதாக அணுகக்கூடியது, மேலும், நாடு முழுவதும் உள்ள 1600+ டாட்டா மோட்டார்ஸ் டீலர்கள் மற்றும் டாட்டாவால் அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையங்களில் சேவை கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. நீங்கள் 2-வருடங்கள் வரையிலும் அல்லது வாகனம் 72,000 கிமீ எட்டும் வரையிலும் உத்தரவாதம் பெறுகிறீர்கள். டாட்டா ஏஸ்-இன் உட்புறங்கள் ஓட்டுநருக்கு அதிக வசதியை வழங்கி, பாதுகாப்பான சவாரியை உறுதி செய்கிறது. பணிச்சூழலியல் சார்ந்த கேபின் வடிவமைப்பு இடவசதியுடன் சௌகரியமாக உள்ளது, இது மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் கருவி தொகுதி, பெரிய கையுறை பெட்டி, பாட்டில் மற்றும் டாக்குமெண்ட் ஹோல்டர் அத்துடன் USB சார்ஜரையும் கொண்டுள்ளது. USB சார்ஜர் வாடிக்கையாளர்களுக்கு அதிகப் பயன்பாடுகளை வழங்குகிறது, அவர்கள் பயணத்தின்போதே அவர்களின் மொபைலைச் சார்ஜ் செய்துகொண்டு தங்கள் தொழிலுடன் 24x7 தொடர்புடன் இருக்கலாம்.

இலாபம்தரும்தன்மை

புதிய வாடிக்கையாளர்களுக்கான சிறிய வணிக வாகனங்களின் பட்டியலில் டாட்டா ஏஸ் முதலிடத்தில் இருப்பதற்கான மற்றுமொரு காரணம், இது எளிமையான, சிக்கலற்ற, குறைந்த செலவுடைய வாகனச் செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்கிறது, இதன் மூலம் வாடிக்கையாளருக்கு அதிக இலாபம் கிடைக்கிறது. இதற்குத் தற்போதுள்ள எண்ணற்ற மகிழ்ச்சியான டாட்டா ஏஸ் உரிமையாளர்கள் சான்றளிப்பர்.

உங்களுடைய புதிய போக்குவரத்து தொழில் அல்லது நிறுவனம் எதுவாக இருந்தாலும், உங்கள் வெற்றிக்கான சிறந்த வாய்ப்பை டாட்டா ஏஸ் வழங்குகிறது.

தொடர்பான படைப்புகள்