Tata Ace Gold — Launched with the BS6 Upgrade in India

டாட்டா ஏஸ் கோல்டு – இந்தியாவில் BS6 மேம்பாடுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

டாட்டா ஏஸ் டிரக்குகள் அதன் சிறப்பான செயல்திறன், குறைவான இயக்கக் கட்டணம் மற்றும் எளிதான பயன்பாடு காரணமாக அவை எப்போதும் வாடிக்கையாளரின் No.1 தேர்வாக அறியப்படுகிறது. மேம்படுத்துவதற்கான எங்களின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, எங்களுடைய தற்போதைய வாகனங்களை BS6 எஞ்சினுடன் மேம்படுத்தும் போது இந்த மூன்று பண்புகளை நாங்கள் தக்கவைத்துள்ளோம். எனவே, நாங்கள் டாட்டா ஏஸ் கோல்டு BS6 வரிசையை அறிமுகம் செய்துள்ளோம்.

நம்முடைய தற்போதைய சுற்றுச்சூழலில் மாசின் அளவைக் குறைப்பதற்காக, இந்திய அரசாங்கம் BS6 என அறியப்படும் புதிய உமிழ்வு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த உமிழ்வு விதிமுறைகளின்படி, ஹைட்ரோகார்பன் (HC), பார்டிகுலேட் மேட்டர் (PM) மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு (NOx) ஆகியவற்றின் குறைவான துகள்களை உமிழ்வதன் மூலம் வாகனங்கள் 25% சுத்தமானதாக இருக்க வேண்டும்.

புதிய டாட்டா ஏஸ் கோல்டு டிரக்குகளில், உமிழ்வு விதிமுறைகளுடன் இணங்க எஞ்சின் மட்டும் மேம்பாட்டைப் பெறவில்லை. 6 வாக்குறுதிகளை வழங்குவதற்காக ஒட்டுமொத்த டிரக்கும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது:

அதிகமைலேஜ்

டாட்டா ஏஸ் கோல்டு டிரக்குகள் சிறந்த மைலேஜை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள்-திறனை மேலும் மேம்படுத்துவதற்காக, இவை கியர் ஷிஃப்ட் அட்வைசருடன் வருகிறது. நெடுஞ்சாலைகளில் வாகனத்தை ஓட்டும் போதும் பயன்படுத்தக்கூடிய எகோ ஸ்விட்ச்சுடன் பெட்ரோல் வகை வாகனம் வருகிறது.

அதிகபிக்-அப்

30 HP வரையிலான சக்திவாய்ந்த செயல்திறனையும் 55 Nm வரையிலான முறுக்குத் திறனையும் வழங்குவதற்காக எஞ்சின் டியூன் செய்யப்பட்டுள்ளது. சில நொடிகளிலேயே 0-70 kmph என்ற வேகத்தை நீங்கள் அடையலாம். 30% கிரேடெபிலிட்டி மற்றும் 145R12 LT 8PR டயர்களுடன் அனைத்து வகையான நிலப்பரப்பையும் கையாள இந்த டிரக்குகள் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதிகபேலோட்கொள்திறன்

நீண்ட ஆயுளுக்காக அதிகம் உழைக்கும் வலுவூட்டப்பட்ட சேஸை ஏஸ் கோல்டு கொண்டுள்ளது. பெரிய லோட் பாடியை (7.2 x 4.9 அடி) ஒரு உறுதியான ஆக்ஸில் மற்றும் லீஃப் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் அமைப்பு தாங்குகிறது. அதிகப் பேலோட்கள் என்றால் டிரக்கால் ஒரே பயணத்தில் அதிகச் சரக்குகளைச் சுமந்து செல்ல முடியும், இது அதிக வருமானத்திற்கு வழிவகுக்கும். 160மிமீ என்ற அதிகக் கிரவுண்ட் கிளியரன்ஸுடன், நீங்கள் டாட்டா ஏஸ்-ஐ எந்தவொரு நிலப்பரப்பிலும் பயன்படுத்தலாம்.

அதிகசௌகரியம்மற்றும்வசதி

புதிய டிஜிட்டல் தொகுதி, ஒரே பார்வையில் அனைத்துத் தகவல்களையும் படிக்க ஓட்டுநர்களை அனுமதிக்கிறது. கேபின் அகலமாகவும் இடவசதியுடனும் உள்ளது, அதே நேரத்தில் அனைத்துப் பொருட்களும் குறைவான முயற்சியுடன் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிலேட்டர், பிரேக் மற்றும் கிளட்ச்சின் நிலையும் மேம்படுத்தப்பட்டுள்ளது, இது வாகனம் ஓட்டும் சௌகரியத்தையும் மேம்படுத்துகிறது.

குறைவானபராமரிப்புசெலவுகள்

டாட்டா ஏஸ் கோல்டு 2-வருட/ 72,000 கி.மீ உத்தரவாதத்துடன் வருகிறது. அனைத்துப் பாகங்கள் மற்றும் லூப்ரிகன்ட்களும் அதிக அட்டவணை காலங்களைக் கொண்டுள்ளது, இதன் விளைவாகப் பராமரிப்பு செலவுகள் குறைகிறது.

உள்ளூர் மெக்கானிக்குகளும் டாட்டா ஏஸ் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளனர், இது வாகனத்தைப் பராமரிப்பதை எளிதாக்குகிறது.

அதிகஇலாபம்

அதிக மைலேஜ், அதிக பேலோட் மற்றும் குறைவான பராமரிப்பு செலவுகளுடன், நீங்கள் அதிக இலாபத்தைப் பெறுகிறீர்கள்.

டாட்டா ஏஸ் கோல்டு டிரக்குகள் மூன்று வகைகளில் வருகின்றன - டீசல், CNG மற்றும் பெட்ரோல்

*ஒரு லிட்டருக்கு ரூ. 70 என்ற எரிபொருள் விலை, எதிர்பார்க்கப்படும் வருமானம் மற்றும் டிரக்கை அதிகபட்சச் செயல்திறனுடன் பயன்படுத்துவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொகை கணக்கிடப்பட்டுள்ளது.

**விலைகள் சற்று மாறுபடும் மற்றும் அவை மாற்றத்திற்குட்பட்டது. RTO, காப்பீடு மற்றும் பதிவு கட்டணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

தொடர்பான படைப்புகள்