Tata Ace crosses 16 Years and 23+ lakh sales in 2021

2021-ஆம் ஆண்டு டாட்டா ஏஸ் 16 வருடங்களையும் 23+ லட்சம் விற்பனைகளையும் தாண்டுகிறது

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

இந்தியாவில் இறுதி கட்ட டெலிவரியில் தன்னிகரற்ற அரசன் - டாட்டா ஏஸ், செல்லமாக 'சின்ன யானை' என்று அழைக்கப்படுகிறது, இது 2021-ஆம் ஆண்டில் 16 வருடங்களை நிறைவு செய்கிறது!

23 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், டாட்டா ஏஸ் இறுதி கட்ட டெலிவரியில் அதன் தைரியத்தை நிரூபித்துள்ளது, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி திறன் விடுவித்து, இந்தியாவில் லட்சக்கணக்கானவர்களைத் தொழில் முனைவோராக உயர்த்துகிறது.

2005-ஆம் ஆண்டு அது அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, இந்தியாவில் மினி டிரக் பிரிவில் No.1 தேர்வாக வாடிக்கையாளர்களால் டாட்டா ஏஸ் விரும்பப்படுகிறது.

அனைத்து வகையான நிலப்பரப்புகள் மற்றும் காலநிலைகளில் அதன் மேம்பட்ட ஆயுள் மற்றும் திறனுக்கு நன்றி, இந்தியாவின் பன்முக நிலப்பரப்பின் எல்லா மூலை முடுக்கிலும் டாட்டா ஏஸ்-ஐ நீங்கள் பார்ப்பீர்கள். அதன் பயன்பாடு பரவியுள்ளது - இன்று டாட்டா ஏஸ் மின்வணிகத்திலிருந்து குளிர்பதனச் சங்கிலிகள், உணவு டிரக்குகள் மற்றும் கழிவு மேலாண்மை வரையிலும் அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது

இவை அனைத்தும் எங்கு தொடங்கியது:

இவை அனைத்தும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கியது. வாடிக்கையாளர்களின் தேவைகளை மையமாகக் கொண்டு தயாரிப்புகளை வடிவமைக்கும் வரலாற்றை டாட்டா மோட்டார்ஸ் கொண்டுள்ளது. எனவே, இந்திய முழுவதும் டிரக் ஓட்டுநர்களைப் பேட்டி எடுத்து, சந்தை மற்றும் அவர்களின் தேவைகள் எவ்வாறு மாறியுள்ளன என்பதைப் புரிந்துகொள்ளக் கலப்பு செயற்பணி குழுவை டாட்டா மோட்டார்ஸ் அனுப்பியது.

கிரிஷ் வாக் என்று அழைக்கப்படும் ஒரு 29 வயது பொறியாளர் சப் 4-டன் சந்தையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டார். இந்தப் பகுதி பெரும்பாலும் மூன்று சக்கர வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் 4 சக்கர வாகனங்களே இல்லை, அது குறித்து யாரும் கற்பனை கூடச் செய்து பார்க்கவில்லை.

இருப்பினும், இளம் பொறியாளர் திரு.வாக் அவர்கள், கோயம்புத்தூரில் உள்ள சிறிய போக்குவரத்து தொழில் செய்பவர்களிடம் மிகவும் வெளிப்படையான உரையாடல்களை மேற்கொண்டார். ஓட்டுநர்கள் அவர்களின் மூன்று சக்கர வாகனத்திற்கு மிகவும் நிலையான மற்றும் பாதுகாப்பான மாற்று வேண்டும் என விரும்புகின்றனர், ஆனால் அதற்கான ஒரே மாற்று ஒரு இலகுரக வணிக வாகனமாகும், அது அவருடைய வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

இந்த உரையாடலானது புரட்சிகரமான ஒன்றின் தொடக்கமாகும். திரு.வாக் இந்தியா முழுவதும் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் மேலும் பல உரையாடல்களை மேற்கொண்டார். ஒட்டுமொத்தத் துறையின் ஒரு பெரிய எதிர்கால நிகழ்வுக் கணிப்பை டாட்டா மோட்டார்ஸ் செயல்படுத்தியுள்ளது. இந்தியப் போக்குவரத்தில் ஹப் மற்றும் ஸ்போக் மாடலின் தோன்றலை இது உறுதி செய்தது. மூத்த தலைவர்களிடம் இது முன்வைக்கப்பட்டது.

இந்தப் புதிய யோசனை குறித்து அனைவரும் உற்சாகமாக இருந்தனர். தேவை கண்டறியப்பட்டது. தயாரிப்பை உருவாக்குவது அடுத்த படிநிலை ஆகும்.

முன்னர்க் கேட்டிராத இந்த மினி-டிரக்கை உருவாக்குவது புதுமையான முயற்சியின் ஒரு நிகழ்வு ஆய்வாகும். ஒற்றைச் சிலிண்டர் அல்லது 4 சிலிண்டர் எஞ்சின்கள் மட்டுமே சந்தையில் இருந்தது. டாட்டா ஏஸ் கற்பனை செய்துள்ளவற்றின் கீழ்த் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக உலகம் முழுவதும் எந்தவொரு எஞ்சினும் இல்லை.

மூன்று சக்கர வாகனத்தின் எரிபொருள் திறனுடன் மற்றும் போட்டி வாகனங்களுடன் ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 1/3 செலவில், அதிக அளவு செயல்திறன் கொண்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2 சிலிண்டர் எஞ்சினை உருவாக்க 2002-ஆம் ஆண்டின் பாதி வரை நேரம் எடுத்துக்கொண்டது. இந்த எஞ்சின் டாட்டா ஏஸ்-இன் ஈடு இணையற்ற USP-ஆக மாறியது.

தயாரிப்பு மாடல்கள் மற்றும் செயல்முறைகளில் டாட்டா ஏஸ்-இன் தயாரிப்பு ஒரு மிகப்பெரிய புதுமையான முயற்சிக்கு வழிவகுத்தது. மினி டிரக்கிற்கு ரத்தன் டாட்டாவால் ஏஸ் என்று பெயரிடப்பட்டது.

இறுதியில் 2005-ஆம் ஆண்டு டாட்டா ஏஸ் அறிமுகம் செய்யப்பட்ட போது, சந்தையே ஆச்சரியத்தில் மூழ்கியது.

ஸ்டைலான தோற்றம், சிறந்த பிக்அப், மைலேஜ் மற்றும் சுலபமான பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தும் வாடிக்கையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது, ஏனெனில் அது எவ்வாறு தினமும் அவர்களின் இலாபத்தில் சேர்கிறது என்பதை அவர்களால் பார்க்க முடிந்தது.

டாட்டா ஏஸ், முன்னர் ஆராயப்படாத சந்தையின் நட்சத்திரமாக விரைவாக மாறியது. அப்போதிருந்து ஒவ்வொரு ஆண்டும், டாட்டா ஏஸ்-இன் சந்தை பங்கு அதிகரித்தது. விருதுகள் மற்றும் பாராட்டுகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. ஏஸ் தளத்தில் பல வகைகள் மற்றும் மேம்பாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. 2012-ஆம் ஆண்டு, டாட்டா ஏஸ் 10 லட்சம் விற்பனைகளைக் கடந்தது.

பின்வருவன, டாட்டா ஏஸ் பயணத்தின் முக்கிய மைல்கற்கள் ஆகும்:

2005

டாட்டா ஏஸ் - இந்தியாவின் முதல் மினி-டிரக் அறிமுகம் செய்யப்பட்டது

2006

டாட்டா ஏஸ் HT-இன் அறிமுகம்
டாட்டா ஏஸ் 2006-ஆம் ஆண்டின் 'BBC-டாப் கியர்' டிசைன் விருதை வென்றது

2007

டாட்டா ஏஸ் 1 லட்சம் விற்பனைகளைக் கடந்தது
பயணிகள் போக்குவரத்திற்காக டாட்டா மேஜிக் அறிமுகம் செய்யப்பட்டது

2008

பன்ட்நகரில் பிரத்தியேகத் தொழிலகம் அமைக்கப்பட்டது
டாட்டா ஏஸ் CNG டாட்டா ஏஸ் CNG மினி டிரக்குகள் அறிமுகம் செய்யப்பட்டது

2009

டாட்டா சூப்பர் ஏஸ் மற்றும் டாட்டா ஏஸ் EX அறிமுகம் செய்யப்பட்டது
5 ஆண்டுகளில் 5 லட்சம் விற்பனைகள்

2010

டாட்டா ஏஸ்-ஒரு வருடத்திற்கு 1 லட்சம் என்ற இந்தியாவின் முதல் CV பிராண்ட்
மொத்த விற்பனை 5 லட்சத்தைக் கடந்தது
டாட்டா ஏஸ் ஜிப் மினி டிரக்குகள்

2011

டாட்டா மேஜிக் ஐரிஸ் மற்றும் டாட்டா ஏஸ் ஜிப் அறிமுகம் செய்யப்பட்டது

2012

மொத்த ஏஸ் குடும்பமும் 10 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்ததைக் கொண்டாடுகிறது

டாட்டா சூப்பர் ஏஸ் மின்ட் மினி டிரக்குகள்

2014

புதிய சூப்பர் ஏஸ் மின்ட் -இன் அறிமுகம்

2015

ஏஸ் மெகா ஸ்மால் பிக்அப் மற்றும் டாட்டா ஏஸ் மெகா பிக்அப்பின் அறிமுகம்

2016

ஏஸ் ஜிப் CNG மற்றும் டாட்டா ஏஸ் XL மினி டிரக்குகளின் அறிமுகம்

2017

XL வரிசையின் அறிமுகம் டாட்டா ஏஸ் குடும்பம் 20 லட்சம் விற்பனைகளைக் கடந்துவிட்டது ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் ஒரு டாட்டா ஏஸ் விற்பனையாகிறது

2018

ஏஸ் கோல்டின் அறிமுகம்

2020

ஏஸ் கோல்டு பெட்ரோலின் அறிமுகம்

இன்று:

இன்று, டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல் BS6 சமீபத்திய சேர்ப்பு ஆகும். இது தான் இப்போதைய தேவை ஆகும், மேலும், இது இந்தியா முழுவதும் உள்ள போக்குவரத்து தொழில் செய்பவர்களால் முழு மனதுடன் வரவேற்கப்பட்டது, இதன் அதிக மைலேஜ், ஆற்றல் மற்றும் பிக்அப் அதிகப் பேலோட் மற்றும் குறைவான பராமரிப்பை அவர்கள் உறுதி செய்கின்றனர் - இவை அனைத்தும் இந்தப் பிரிவில் உள்ள மற்ற வாகனத்துடன் ஒப்பிடுகையில் அதிக வருமானத்தைத் தொடர்ந்து வழங்குகிறது.

லாஜிஸ்டிக் தொழிலைத் தொடங்க நீங்கள் விரும்புகிறீர்களா? டாட்டா ஏஸ் உங்களுக்கான அறுதி துவக்கத் தளமாக இருக்கும்.

இது இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. ஓட்டுநர்கள் உரிமையாளர்களாகவும், ஒரு டிரக்கின் உரிமையாளர் மிகப்பெரிய போக்குவரத்து தொழில் செய்பவர்களாகவும் மாறியுள்ளனர். ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் ஒரு டாட்டா ஏஸ் விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் அடுத்த ஏஸ்பிரனராக இருப்பீர்களா?

இன்றே எங்கள் ஆன்லைன் CV விற்பனை தளத்திற்கு வருகை தந்து உங்கள் ஏஸ் கோல்டைத் தேர்ந்தெடுத்து ஒரே க்ளிக்கில் முன்பதிவு செய்யவும்! உங்கள் பக்கத்தில் ஏஸ்-ஐ வைத்துக்கொண்டு இன்றே உங்கள் தொழிலைத் தொடங்குங்கள்!

தொடர்பான படைப்புகள்