டாடா ஏஸ் வேலை செய்வதற்காக உருவாக்கப்பட்டது

டாடா ஏஸ் வேலை செய்வதற்காக உருவாக்கப்பட்டது

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

2005-ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய டாடா ஏஸ் இந்தியாவில் விற்பனையாகும் நம்பர் 1 மினி டிரக் ஆகும். அது இன்னமும் நம்பர் 1 வாகனமாகவே இருந்து வருகிறது. 2017-ல் இது டாடா ஏஸ் எக்ஸ்எல், டாடா ஏஸ் மெகா எக்ஸ்எல், டாடா ஏஸ் ஜிப் எக்ஸ்எல், டாடா சூப்பர் ஏஸ் மின்ட் போன்ற பல வாகனங்களாக அவதாரம் எடுத்துள்ளது.

2005லிருந்து இன்று வரை எது மாறாமல் இருக்கிறது என்றால், டாடா ஏஸ் நகர மற்றும் வளரும் நகரப் பகுதிகளில் என எல்லாப் பகுதிகளிலும் எளிதில் இயக்கக் கூடியதாக இருப்பதுதான். இந்த நோக்கத்திற்காக இதில் கீழே கொடுத்துள்ள பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன:

1. கிரவுண்ட் கிளியரன்ஸ்:
சரக்கு ஏற்றிச் செல்லும்போது கூட வேகத்தடைகள் மற்றும் சமமற்ற தரையால் பாடியின் கீழ்ப்பகுதி சேதமடைந்து விடுமே என்று கவலைப்படாதிருக்கும் வகையில் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.

2. வீல் பேஸ்:
இதனுடைய வீல் பேஸ் 2,250 மிமீ ஆகும். பவர் ஸ்டீயரிங் கொண்ட இதனை நகரத்தின் குறுகிய சாலைகளில் இயக்குவது எளிதானது.

3. சக்தி வாய்ந்த என்ஜின்:
39 என்எம் டார்க் உடன் 11.6 கிவா (16 எச்பி) மெக்கானிக்கல் எஃப்ஐபி என்ஜினுடன் டாடா ஏஸ் வேகமான பிக்அப் மற்றும் சவாலான பகுதிகளிலும் இழுக்கக் கூடியதாக இருக்கிறது. (சக்தி வாய்ந்த பிக்அப்)

4. உறுதியான சேசிஸ், ரேடியல் டியூப் டயர்கள், சீட் பெல்ட்கள் போன்றவை ஓட்டுனர் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளன.

5. முன்பக்க மற்றும் பின்பக்க ஷாக் அப்சார்பர்கள்:
டாடா ஏஸ் கனமான பாரங்களை ஏற்றுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டு பகுதிகளிலும் உறுதியான லீஃப் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர்கள் மற்றும் ஹெவி டூட்டி ஆக்சில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் சேர்ந்து மிகவும் சௌகரியமான சவாரியைக் கொடுக்கிறது.

6. சரிவான சாலைகளில் ஆற்றலுடன் இழுக்கும் 20.5% கிரேடபிளிட்டியுடன் இந்த வகுப்பில் சிறந்ததாக உள்ளது.

7. 30 லி எரிபொருள் டேங்க் மற்றும் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் உடன் தொலை தூரப்பகுதிக்கும் நிம்மதியாகச் சென்று திரும்பலாம்.

8. சக்திவாய்ந்த பிரகாசமான ஹெட்லேம்ப்கள் இரவு நேரம் வாகனம் ஓட்டுவதை எளிதாக்குகிறது.

9. இந்த வகுப்பில் சிறந்ததாக 2 ஆண்டுகள்/ 72000 கிமீகள் உத்தரவாதம் மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவுடன் இந்திய ரோடுகளுக்கு பொருத்தமான உறுதியான வாகனமாக உள்ளது.

10. 4 முன்பக்கம் மற்றும் 1 ரிவர்ஸ் கியருடன் ஸ்மூத் ஆன மாற்றம் மற்றும் எளிய இயக்கம் கொண்டதாக இருப்பதால் ஓட்டுனர் களைப்படைவதில்லை.

மொத்தத்தில், மேற்கண்ட அனைத்து சிறப்பம்சங்கள், நாடு முழுவதும் டாடா மோட்டார்ஸின் 1600+ சர்வீஸ் நெட்வொர்க் உடன் டாடா ஏஸ் தங்கள் சரக்கு சார்ந்த தொழிலுக்காக உறுதியான வாகனம் தேவைப்படும் யாருக்கும் சிறந்த வாய்ப்பாகும். இது இந்த வகுப்பில் 2 ஆண்டுகள்/ 72000 கிமீ உத்தரவாதத்துடன் கவர்ச்சிகரமான ஆன்ரோடு விலையுடன் மற்ற வாகனங்களுக்கு மத்தியில் டாடா ஏஸ் எளிய வெற்றியாளராக உள்ளது.

தொடர்பான படைப்புகள்