டாடா ஏஸ் – இந்தியாவில் சிறந்த வர்த்தக மினி டிரக்காக உள்ளது

டாடா ஏஸ் – இந்தியாவில் சிறந்த வர்த்தக மினி டிரக்காக உள்ளது

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

டாடா மோட்டார்ஸின் சிறந்த வாகனமான டாடா ஏஸ் அது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே மினி டிரக் சத்தமில்லாமல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கடந்த காலங்களில், இது நாட்டின் சிறந்த செயல்திறன்கொண்ட வர்த்தக மினி டிரக்காக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது சிறிய தொழில் முனைவோரின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது மட்டுமல்லாமல், புதிய சந்தைப் பிரிவு மொத்தமாக தனியான சரக்கு வழங்கும் வாகனமாக இருந்து வருகிறது. 2005-ம் ஆண்டிலிருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான டாடா ஏஸ் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும் டாடா மோட்டார்ஸ்-க்கு தனது ஏஸ் குடும்ப வாகனங்களை அதிகரிக்கும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எளிதில் வாங்கக் கூடிய விலை, நீடித்தும் உழைக்கும் தன்மை, நம்பகத்தன்மை, பன்முகத்தன்மை, எரிபொருள் ஆற்றல், குறைந்த பராமரிப்புச் செலவுகள் டாடா ஏஸை நாட்டின் நகர மற்றும் கிராமப்புறங்களில் பிரபலமாக்கியுள்ளன. டாடா ஜிப், டாடா ஏஸ் மெகா, டாடா ஏஸ் சூப்பர் மின்ட் போன்ற இதன் வகை வாகனங்கள் சிறந்த திறன் மற்றும் வாடிக்கையாளரின் தேவையின்படி சிறந்த பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை வழங்குகிறது. இப்போது புதிய மாடல்களான எக்ஸ்எல் வகை வாகனங்கள் பிக்அப் மற்றும் மினி டிரக் பிரிவில் உள்ள இடைவெளியை குறைக்கின்றன.

டாடா ஏஸ் எந்த பகுதியிலும் இயங்கக் கூடிய வர்த்தக மினி டிரக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எந்தவொரு தூரத்திற்கும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான சிறந்த வாகனமாக உள்ளது. "குட்டி யானை" என்றழைக்கப்படும் டாடா ஏஸ் ஒரு சரக்கு வாகனமாக இருப்பதோடு பல்வேறு பயன்களுக்கும் பயன்படுத்தத் தக்க உறுதி மற்றும் வலிமை கொண்டதாக உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நெட்வொர்க்கில் 1600 ஷோரூம்களில் ஏஸ் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன மற்றும் ஒரு ஆண்டில் உற்பத்தி திறன் 5,00,000 வாகனங்களாக உள்ளன.

டாடா ஏஸ் ஒரு புத்திசாலித்தனமான வர்த்தக வாகனமாக உள்ளது. இது 16bhp @3200rpm சக்திவாய்ந்த என்ஜின் மற்றும் 39என்எம் உச்ச டார்க் உடன் 702 (சிஎம்3) என்ஜின் திறன், குறுகிய சந்துகள் மற்றும் கடினமான சாலைகளில் 4.3 மீ எளிய திரும்பும் சுற்றளவு கொண்டது. சாலையில் கேட்கள் மற்றும் மேம்பாலங்கள் பகுதியில் அதிகபட்ச கிரேடபிளிட்டியாக 21% வழங்குகிறது.

பயன்படுத்துபவருக்கு இணக்கமாக இருக்கும் இதன் தன்மை, எளிதாக பயன்படுத்தும் சிறப்பம்சங்கள், வளைந்து கொடுக்கும் பயணம் ஆகியவை டாடா ஏஸை இந்தியாவில் முன்னணி மற்றும் சிறந்த செயல்திறன் கொண்ட வாகனமாக ஆக்குகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தப்படும் பல பயன் கொண்ட வர்த்தக வாகனங்களுடன் டாடா ஏஸ் மினி டிரக் பகுதியில் ஆளுமை செய்வதாக உள்ளது.
டாடா மோட்டார்ஸ் தற்போது டாடா ஏஸின் எலக்ட்ரிக் வடிவத்தை அறிமுகப்படுத்த அத்தனை முயற்சிகளையும் செய்து வருகிறது. இது நாட்டில் இதுவரை வெளி வந்திராத வாகனமாக இருக்கும்.

இந்தியாவில் மினி டிரக்

டாடா மோட்டார்ஸ் இணையதளம்: ஏஸ் வாகனங்களின் எக்ஸ்எல் வகைகளை பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள, உங்கள் போக்குவரத்து தேவைக்கு சிறப்பாக பொருந்தும் புத்திசாலித்தனமான வாகனத்தை தேர்வு செய்ய எங்கள் இணையதளத்திற்கு (https://www.tatamotors.com/ and https://ace.tatamotors.com) வருகை தரவும்.

தொடர்பான படைப்புகள்