இந்திய நகர்ப்புறத்திற்கு டாடா ஏஸ் மற்றும் டாடா ஜிப் – சிறந்த மினி டிரக்குகள்

இந்திய நகர்ப்புறத்திற்கு டாடா ஏஸ் மற்றும் டாடா ஜிப் – சிறந்த மினி டிரக்குகள்

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

டாடா மோட்டார்ஸ் டாடா ஏஸ் மற்றும் டாடா ஜிப் எக்ஸ்எல் மினி டிரக்குகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் சிறிய வர்த்தக வாகன வாகனங்கள் (எல்சிவி) தொழிற்துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. இவை இந்த வகுப்பில் புதிய தொழில்நுட்பங்களை மட்டுமல்லாமல் விட்டுக்கொடுக்காத சேவை தரத்தையும் கொண்டுள்ளன. தொழில்முனைவோராக மாற வேண்டும் என்று விரும்புவோருக்கு இவை சிறந்த துவக்கத்தைக் கொடுக்கின்றன. கடந்த காலங்களில் டாடா ஏஸ் மற்றும் டாடா ஜிப் எக்ஸ்எல் மினி டிரக் பிரிவில் விரும்பத் தகுந்த வாகனங்களாக மாறியுள்ளன.

இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு என்ற முறையில், முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தக மினி டிரக்குகளால் வேலை வாய்ப்புகளை உருவாக்கி நாட்டிற்கு பெரிதும் உதவியுள்ளது.

டாடா ஏஸின் மினி டிரக்குகள் இந்தியாவின் கிராம மற்றும் நகரப் பகுதிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. டாடா ஏஸ் வெற்றிகரமான 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இதன் வாகனங்களின் தேவை பெருகிவருகிறது. இதனுடைய அதிக சக்திவாய்ந்த என்ஜின் மற்றும் அதிக டார்க் சரிவான சாலைகளிலும் அதிக பாரங்களையும் இழுக்கும் வகையில் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நான்கு மேனுவல் கியர்கள் மற்றும் 710 கிலோ பாரம் ஏற்றும் திறனுடன் கிடைக்கிறது.

டாடா ஏஸ் ஜிப் எக்ஸ்எல் நவீன தொழில்நுட்பம், மேம்பட்ட, புத்திசாலித்தனமான மற்றும் பாதுகாப்பான மினி டிரக் 600 கிலோ பாரம் ஏற்றும் திறன் மற்றும் நம்ப முடியாத 3500 மிமீ திரும்பும் திறனுடன் கிடைக்கிறது. இது மைக்ரோ டிரக் பிரிவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இது பாதுகாப்பான மற்றும் சிக்கனமான போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதற்கான வாக்குறுதியுடன் வாங்குவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

நகரத்திற்கு உள்ளேயான சிறந்த மினி டிரக், சமமற்ற இந்திய கிராமப்புற சாலைகளிலும் நகரத்தின் நெரிசல் மிக்க சாலைகளிலும் எளிதாக ஓடுகிறது. இதனுடைய ஆற்றல் மற்றும் டார்க் இதனை ஒப்பற்ற வாகனமாக்குகிறது. இது ஏஸ் ஜிப் எக்ஸ்எல்லை நெடுஞ்சாலைகள் மற்றும் மலைச்சாலைகளிலும் சிறிய அல்லது பெரிய பாரங்களை ஏற்றிச் செல்லச் செய்கிறது.

72000 கிமீகள் அல்லது 24 மாதங்கள் உத்தரவாதம் உங்கள் தொழிலுக்கான உறுதியான முதலீடாக ஆக்குகிறது. இந்த அரை டன் டிரக் அதிக விற்பனைக்கு தேவையான நீடித்த உழைப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்கிறது.

டாடா ஏஸ் மற்றும் டாடா ஜிப் எக்ஸ்எல் ஆகியவை அதிக செயல்திறன் கொண்ட பிக்அப் டிரக்குகள் ஆகும். இவை பராமரிக்க எளிதானவை, சிக்கனமானவை, நகரங்களுக்கென விசேஷமாக வடிவமைக்கப்பட்டவை. சிறிய மற்றும் உறுதியான இந்த மினி டிரக்குகள் நகரங்களின் அடர்த்தியான போக்குவரத்து நடுவே, குறுகலான சந்துகளில் எளிதில் சென்று சரக்குகளை எளிதாக, சௌகரியமாக வழங்கக் கூடியவை. இந்த காரணங்களுக்காக, டாடா ஏஸ் மற்றும் டாடா ஜிப் எக்ஸ்எல் இந்திய நகர்ப்புறங்களுக்கான சிறந்த மினி டிரக்காக கருதப்படுகிறது.

தொடர்பான படைப்புகள்