டாடா ஏஸின் அனைத்து மாடல்கள் – முக்கியச் சந்தைகளின் புதிய விலை

டாடா ஏஸின் அனைத்து மாடல்கள் – முக்கியச் சந்தைகளின் புதிய விலை

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

டாடா மோட்டார்ஸ் தனது ஏஸ் மினி டிரக்-க்ள மூலமாக தற்போதைய வர்த்தக வாகனச் சந்தையை உருவாக்க மற்றும் போக்குவரத்துச் சேவைகளை அதிகரிக்க விரும்புகிறது. எல்லா ஏஸ் மாடல்களுக்கும் பெரும் வரவேற்பு உள்ளது. அவை கிராமம்-நகரம் என இரு பகுதிகளிலும் வங்குவோருக்கு லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்து ஆட்டோமொபைல் துறையில் மிகவும் நன்றாக செயல்பட்டு வருகின்றன.

தற்போதைய சந்தையில் புதிய விலைகளுடன் டாடா ஏஸ் மாடல்கள் பற்றிய கண்ணோட்டம்

டாடா ஏஸ் கோல்டு:
டாடா மோட்டார்ஸ் டாடா ஏஸ் மூலமாக இந்தியாவில் சிறிய வர்த்தக வாகன தொழிற்துறையில் முன்னோடியாக உள்ளது. 20 லட்சத்திற்கும் மேலானோர் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற உதவியுள்ளது. "குட்டி யானை" என்று பிரபலமாக அழைக்கப்படும் டாடா ஏஸ் இந்தியாவில் மினி டிரக்-கள் அதிகரிக்க காரணமானது. இப்போது, டாடா ஏஸ் கோல்டு என்பதன் மூலமாக உயர் டெக் பிஎஸ் IV மற்றும் பிஎஸ் III வர்த்தக வாகனம் சிறப்பாக உள்ளது. அகலமான சாலை இல்லாத இடங்களிலும் எளிதாக ஓட்டிச் செல்லக் கூடியது. டாடா ஏஸ் கோல்டின் புதிய எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 3,88,885 ஆகும்.

டாடா ஏஸ் ஜிப் எக்ஸ்எல்:
2017 ஏப்ரல் மாத்தில் துவக்கப்பட்ட சிறிய ஏஸ் ஜிப் எக்ஸ்எல் மினி டிரக் பிரிவில் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட வாகனம் என்பதை நிரூபித்துள்ளது. இது ரூ.3,25,271 என்ற எக்ஸ் ஷோரூம் கிடைக்கிறது.

டாடா ஏஸ் ஜிப்:
இந்தச் சிறிய ஏஸ் ஜிப்பின் முக்கிய வேலை பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களை கையாளுவது ஆகும். தற்போது இதனுடைய எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 3,04,000.

டாடா ஏஸ் மெகா எக்ஸ்எல்:
மினி டிக் பிரிவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது ஏஸ் மெகா எக்ஸ்எல் ஆகும். இது ஏஸ் மெகா தளத்தில் அடிப்படையாகக் கொண்டு சரக்கு பெட்டி நீளம் 2520 மிமீ ஆக நீட்டிக்கப்பட்டிருப்பதால் இது மெகா எக்ஸ்எல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அதிக பாரம் ஏற்றும் திறன் கொண்டதாகும். எனவே இது பெரும்பாலும் ஃபர்னிச்சர் மற்றும் கனமான சரக்குகளை ஏற்றிச் செல்லப் பயன்படுகிறது. இதனுடைய அண்மை எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 5,21,121.

டாடா சூப்பர் ஏஸ் மின்ட்:
ரூ.5,66,691 விலை கொண்ட டாடா ஏப்பர் ஏஸ் மின்ட் லிட்டருக்கு 17.9 கிமீ மைலேஜ் கொடுத்து பல முக்கிய சந்தைகளில் வெற்றிகரமாக ஓடுகிறது. இதனுடைய அதிகபட்ச பாரம் ஏற்றும் திறன் 1000 கிலோ ஆக இருப்பது வாடிக்கையாளர்களை கவர்வதாக உள்ளது. இது பல்வேறு பயன்களுக்காக மிகவும் பொதுவாக வடிவமைக்கப்பட்ட டிரக் ஆகும்.

டாடா ஏஸின் அனைத்து மாடல்களும் பெரும் ஆர்ஓஐ வழங்கும் சிக்கனமான வாகனங்கள் ஆகும். இவை தங்களது போட்டி வாகனங்களை விட ஒப்பீட்டளவில் சிறப்பானவை ஆகும். நீண்டகால உத்தரவாதத்தோடு நியாயமான விலையில் கிடைக்கிறது. இது தொழில் தொடங்குவதற்கான கச்சிதமான வாகனமாகும்.

*இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட அனைத்து விலைகளும் 2019 ஜனவரி 1-ம் தேதியின்படியானவை.

*தயவுசெய்து கவனிக்கவும்:
இந்தக் கட்டுரையில் காட்டப்பட்டுள்ள படங்கள் மற்றும் நிறங்கள் வழக்கமான வாகனத்தின் பகுதியாக இல்லாமல் இருக்கலாம்.

தொடர்பான படைப்புகள்