புத்திசாலித்தனமான வர்த்தக வாகனங்களின் பாரம் ஏற்றும் திறன் 600 கிலோ

புத்திசாலித்தனமான வர்த்தக வாகனங்களின் பாரம் ஏற்றும் திறன் 600 கிலோ

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

பன்முக மற்றும் உயர் செயல்திறன் சிறப்பம்சங்கள் கொண்ட டாடா ஏஸ் ஜிப் புத்திசாலித்தனமான சிறிய டிரக்கான இது டாடா ஏஸ், டாடா ஏஸ் மெகா, டாடா சூப்பர் ஏஸின் வரிசையில் இணைந்துள்ளது. போட்டி பராமரிப்புச் செலவுடன் எளிதில் வாங்கத்தக்க சரக்கு வாகனமாக இருந்து குறுகிய தூரத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்ல பொருத்தமானதாக உள்ளது. டாடா ஏஸ் ஜிப் எக்எஸ்எல் நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று வழங்கும் சுய வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. சரக்குகளை ஆற்றலுடன் எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளதால் இது "குட்டி யானை" என்ற பெயருக்கு ஏற்ற வகையில் உள்ளது.

பிரகாசமான நிறங்களில் கிடைக்கும் டாடா ஏஸ் ஜிப் எக்ஸ்எல் சந்தேகமில்லாமல் பல பயன்களுடன் கண்ணைக் கவருவதாக உள்ளது. குட்டி யானை உங்கள் தொழிலை எவ்வாறு வளர்க்கலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்:

1. சாலைகளில் வளைந்துகொடுப்பது:
3.5 மீட்டர் வட்டத்தில் திரும்பக் கூடியது என்பதால் குறுகிய சந்துகள் மற்றும் அதிக போக்குவரத்து உள்ள சாலைகளில் எளிதாக ஓட்டிச் செல்லக் கூடியது. எனவே இது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சிறந்த தேர்வாக உள்ளது.

2.வாட்டர் கூல்ட் என்ஜின்:
600 கிலோ பிரிவில் ஒற்றை சிலிண்டர் வாட்டர் கூல்ட் என்ஜின் கொண்ட ஒரே வாகனம் இதுதான். இது நீண்ட தூரம் பயணிக்க சௌகரியமானது.

3. பல பயனுக்கான டிரக்:
டெலிவரி வேன் மற்றும் சரக்கு ஏற்றும் வாகனத்திற்கு அப்பால் ஏஸ் ஜிப்பை வாட்டர் டேங்கர், டம்பர், டிஸ்பிளே வேன், ஷாப் ஆன் வீல்ஸ் ஸ்நாக் சென்டர் ஆகவும் பயன்படுத்தலாம்.

4. மேம்பட்ட ஏதாவது த்ரீ வீலர்:
மற்ற த்ரீ வீலர்களுடன் ஒப்பிடுகையில் ஏஸ் ஜிப் எக்ஸ்எல் 600 கிலோ பாரம் ஏற்றும் திறனுடன் 72000 கிமீகள் உத்தரவாதம் கொண்ட நீடித்த உழைப்பு மற்றும் செயல்திறனைக் கொண்டது.

5. நெட்வொர்க் சர்வீஸ் சென்டர்கள்:
தோராயமாக 40 கிமீகளுக்கு ஒரு சர்வீஸ் சென்டர் என்ற கணக்கில் பரவலான நெட்வொர்க் கொண்டது. நீங்கள் வழியில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கிக் கொள்ளலாம்.

மொத்தத்தில், இது போக்குவரத்துத் தொழில் செய்வோர் தங்கள் தொழிலை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட புத்திசாலித்தனமான சரக்கு டிரக். உண்மையில் இது பல்வேறு தொழில்களுக்குமாக வடிவமைக்கப்படும் பன்முகத்தன்மை கொண்ட வாகனம்.

தொடர்பான படைப்புகள்