Single Cylinder

ஒற்றை சிலிண்டர் வாகனம் vs இரண்டு சிலிண்டர் வாகனம்

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

முன்னர் 2005-ஆம் ஆண்டு டாட்டா ஏஸ் அல்லது சின்ன யானை அறிமுகம் செய்யப்பட்ட போது இருந்ததை விட மினி-டிரக் பிரிவு முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. இப்போது இது வெவ்வேறு ஆற்றலூட்டப்பட்ட எஞ்சின்கள், வெவ்வேறு லோட் பாடி அளவுகள், அல்லது வெவ்வேறு கூட்டுப் பொருட்களுடன் வலுவான போட்டியை எதிர்கொள்கிறது. எனவே இன்று நாம் ஒற்றைச் சிலிண்டர் மற்றும் இரண்டு சிலிண்டர் எஞ்சினால் ஆற்றலுட்டப்படும் மினி டிரக்குகள் இடையிலான ஒப்பீட்டைப் பார்க்கவுள்ளோம்.

ஒற்றைச் சிலிண்டர் எஞ்சின் வாகனம் மற்றும் இரண்டு சிலிண்டர் எஞ்சின் வாகனத்திற்கு இடையிலான முக்கியமான வேறுபாடு என்ன, நீங்கள் எதைத் தேர்வு செய்ய வேண்டும்?

பொருளடக்க விவரம் ஒற்றை சிலிண்டர் எஞ்சின் இரண்டு சிலிண்டர் எஞ்சின்
எஞ்சின் ஆயுள் 3-4 வருடங்கள் 8-10 வருடங்கள்
பராமரிப்பு செலவுகள் அதிகம் குறைவு
சுமை ஏற்றும் திறன் குறைவு அதிகம்
மறுவிற்பனை மதிப்பு குறைவு அதிகம்
கிளட்ச் ஆயுள் குறைவு அதிகம்
வாகனம் ஓட்டுவதில் சௌகரியம் மோசம் நல்லது

மேலே உள்ள அட்டவணையில் நாம் பார்த்தது போல, ஒற்றைச் சிலிண்டர் எஞ்சின் கொண்ட வாகனத்தை விட இரண்டு சிலிண்டர் எஞ்சின் கொண்ட வாகனம் மிகவும் இலாபகரமான முதலீடு என்று நிரூபணம் ஆகிறது. ஒற்றைச் சிலிண்டர் வாகனங்களை ஓட்டும் ஒரு சில வாடிக்கையாளர்களிடம் பேசிய பின்னர், அத்தகைய ஒற்றைச் சிலிண்டர் எஞ்சின்களுக்கு 4-சக்கர வாகனத்தை இயக்கும் சக்தி அல்லது திறன் இல்லை என்பதையும், நீண்ட காலப் பயன்பாட்டில் பிக்-அப் சம்மந்தமான பல பிரச்சனைகள் எழும் என்பதையும் நாங்கள் புரிந்துகொண்டோம். உண்மையில், சந்தையை ஆய்வு செய்த பின்னர் ஒற்றைச் சிலிண்டர் வாகனங்களை வைத்திருக்கும் பல வாடிக்கையாளர்கள், இரண்டு சிலிண்டர் வாகனமான டாட்டா ஏஸ் கோல்டுக்கு மாறி இருப்பதை நாங்கள் கவனித்தோம்.

பல ஆண்டுகளாக ஒற்றைச் சிலிண்டர் எஞ்சின்கள் 3-சக்கர வாகனங்களின் பயன்படுத்தப்பட்டு வந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன, ஆனால் அது 4-சக்கர வாகனங்களுக்கு மாறும் போது அது வெற்றிகரமான ஒன்றாக இல்லை. குறைவான சுமையேற்றும் திறன், குறைவான பிக்அப், அதிகப் பராமரிப்பு மற்றும் குறைவான மறுவிற்பனை மதிப்பு காரணமாக, அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் இரண்டு சிலிண்டர் வாகனங்களுக்கு மாறுகின்றனர். டாட்டா ஏஸ் கோல்டு போன்ற வாகனங்களில் அதிகச் சரக்குகளை ஏற்றலாம், குறைவான பராமரிப்பு மற்றும் அதிக மறுவிற்பனை மதிப்பைக் கொண்டுள்ளது, எனவே, இரண்டு சிலிண்டர் எஞ்சின்கள் மினி-டிரக்குகள் பிரிவுக்கு மிகவும் ஏற்றது.

தொடர்பான படைப்புகள்