“எல்லா டாடா ஏஸ் வாகனங்களின் பாரம் ஏற்றும் திறனின் ஒப்பீடு”

“எல்லா டாடா ஏஸ் வாகனங்களின் பாரம் ஏற்றும் திறனின் ஒப்பீடு”

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

புரட்சிகரமான டாடா ஏஸ் மினி டிரக்கில் துவங்கி, சக்தி வாய்ந்த என்ஜின்கள், சிறந்த பாரம் ஏற்றும் திறன், இன்னும் பல சிறந்த தொழில் நுட்ப சிறப்பம்சங்களுடன் நாங்கள் உயர் செயல்திறன் கொண்ட வர்த்தக வாகனங்களின் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இவையனைத்தும் டாடா ஏஸ் குடும்ப வாகனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்த உதவியுள்ளன.

எங்களது மினி டிரக் வகைகளை சிறப்பாக புரிந்துகொள்ள, இதோ டாடா ஏஸ் வாகனங்களின் பாரமேற்றும் திறன் ஒப்பீடு செய்யப்படுகிறது:

1. டாடா ஏஸ் எச்டி:
இது வழக்கமான ஏஸ் எச்டி, 702 சிசி என்ஜின் திறனுடன் 11.3 KW@3200r/min (16HP) சக்தி வாய்ந்தது. இதனுடைய பாரம் ஏற்றும் திறன் 710 கிலோ ஆகும். இது ஏஸ் ஜிப் மற்றும் ஏஸ் ஜிப் எக்ஸ்எல்லை விட அதிகமாகும். டாடா ஏஸ் எச்டி கிராமப்புறங்களில் குறுகிய தூரத்திற்கு சரக்குகளை எடுத்துச் செல்லப் பொருத்தமானது.

2. டாடா ஏஸ் எக்ஸ்எல்:
டாடா ஏஸ் எக்ஸ்எல், டாடா எச்டி, ஏஸ் ஜிப், ஏஸ் ஜிப் எக்ஸ்எல்லை விட ஒரு படி உயர்ந்ததாகும். இது 702 சிசி என்ஜின் திறனுடன் 710 கிலோ பாரம் ஏற்றும் திறன் கொண்டதாகும். மேலும், இது முந்தைய வாகனங்களுடன் ஒப்பிடுகையில் ஏஸ் எக்ஸ்எல் 15% நீண்ட பாடியைக் கொண்டது. இது சரக்கு தொழிற்துறையில் புதிய அடையாளத்தை உருவாக்கியுள்ளது.

3. டாடா ஏஸ் மெகா:
"வாழ்க்கையில் வெற்றியும் மெகாவும்" என்ற ஏஸ் மெகாவின் முழக்கம் அதன் உண்மையை சொல்கிறது. நான்காவது தலைமுறை டிகோர் என்ஜின் மற்றும் 30 KW (40HP) சூப்பர் பவரை கொண்டுள்ளது. ஏஸ் மெகா 1 டன் உறுதியான பாரம் ஏற்றும் திறன் கொண்டது. இது வேகமான நீடித்து உழைக்கக் கூடிய சிறந்த மினி டிரக் ஆகும்.

4. டாடா ஏஸ் மெகா எக்ஸ்எல்:
நாங்கள் சிறிய வர்த்தக வாகன பிரிவில் 8.2 அடி நீளமுள்ள பாடி மற்றும் 1000 கிலோ பாரம் ஏற்றும் திறன் கொண்ட ஏஸ் மெகா எக்ஸ்எல்லை உருவாக்கியுள்ளோம். ஏஸ் மெகா எக்ஸ்எல் எல்லா வகை சாலைகளுக்கும் ஏற்றது நீண்ட தூரத்திற்கு பாரம் ஏற்றிச் செல்லச் சிறந்தது.

5. டாடா சூப்பர் ஏஸ் மினி:
ஏஸ் மெகா மற்றும் ஏஸ் எக்ஸ்எல்லை விட சற்று மேம்பட்ட டாடா சூப்பர் ஏஸ் மின்ட் 8.7 அடி நீள பாடியுடன் தொலைதூரத்திற்கு சரக்கு ஏடுத்துச் செல்லக் கூடியது மற்றும் 1000 கிலோ (1டன்) பாரம் ஏற்றக் கூடியது. 1396 சிசி என்ஜின் ஆற்றல் கொண்ட, மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. இது டாடா ஏஸ் குடும்பத்தில் சிறந்த மினி டிரக்குகளில் ஒன்றாகும். இது வேகமாக சரக்கு எடுத்துச் செல்வதற்கும் உணவு வாகனமாக மாற்றுவதற்கும் மிகவும் பொருத்தமானது.

6. டாடா ஏஸ் ஜிப் எக்ஸ்எல்:
நாங்கள் 2017-ல் ஏஸ் வாகனத்தை பெரிய அளவில் ஏஸ் ஜிப் எக்ஸ்எல்லை துவக்கினோம். இது வெற்றிகரமான ஜிப் மினி டிரக்காக உள்ளது. 15% நீண்ட பாடியை (6.3 அடி) கொண்ட இது அதிக வருமானத்தைக் கொடுக்கக் கூடியது. ஏஸ் ஜிப் எக்ஸ்எல் 600 கிலோ பாரத்தை எடுத்துச் செல்லக் கூடியது.

தொடர்பான படைப்புகள்