மினி டிரக்குகளுக்கான முக்கியமான, பொதுவான பராமரிப்புக் குறிப்புகள்

மினி டிரக்குகளுக்கான முக்கியமான, பொதுவான பராமரிப்புக் குறிப்புகள்

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

உங்கள் டாடா ஏஸ் மினி டிரக்கை குறைவாகவே பராமரிக்க வேண்டியிருந்தாலும், நீடித்த இயக்கத்திற்காக அதன் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பான சவாரிக்கு உத்தரவாதம் மற்றும் திடீர் பிரேக் ஃபெயிலியரை தவிர்க்க இதோ டாடா ஏஸ் உரிமையாளர்களுக்கான சில முக்கியமான பொதுவான பராமரிப்புக் குறிப்புகள்:

1. என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் பராமரிப்பு:
உங்கள் என்ஜின் கூலிங் சிஸ்டமை சர்வீஸ் செய்து கொள்ளுகொள்ளுங்கள் மற்றும் அவ்வப்போது டிரான்ஸ்மிஷன் திரவத்தை சோதனை செய்துகொள்ளுங்கள். இது பொதுவான பராமரிப்பின் பகுதியாகும். சோதனை செய்வதை எப்போதும் கடந்து செல்லக் கூடாது.

2. கார்புரேட்டரை ஆய்வு செய்யவும்:
உங்கள் டாடா ஏஸின் எரிபொருள் வடிகட்டியை சுத்தமாக வைத்திருக்கவும். அது சார்கோல் கேனிஸ்டரை அடைத்து கார்புரேட்டரை பாதிக்கலாம்.

3. கியர் பாக்ஸ்:
இது மினி டிரக்கில் முக்கியமான பங்கு வகிக்கிறது. கியர் பாக்ஸ் சுத்தமாக, லூப்ரிகேட் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்யவும் மற்றும் அனுகூலமான இயக்கத்திற்காக முறையான கூலிங் இருப்பதை உறுதி செய்யவும்.

4. டார்க் திரவம்:
டார்க் கன்வெர்ட்டரில் ஹைட்ராலிக் திரவம் பயன்படுத்தப்படுகிறது. இது கியர்களை மாற்ற டிரான்ஸ்மிஷன் கிளட்ச்களிலிருந்து அதிக ஆற்றலை மாற்றும் கனரக வேலைக்கான வாகனங்களுக்கு பயன்மிக்கது. கனரக வாகனங்களின் இயக்கத்திற்கு இந்தத் திரவம் முக்கியமானது.

5. க்ளட்ச்:
க்ளட்ச் ஆர்மை சோதிக்கவும். ஒவ்வொரு நுனியிலும் உள்ள பேரிங்குகளை சுத்தம் செய்து லூப்ரிகேட் செய்யவும். க்ளட்ச் கேபிளை இழுத்து க்ளட்ச் ஆர்ம் அசெம்பிளி ஸ்மூத்தாக வேலை செய்கிறதா மற்றும் அதன் அசல் நிலைக்கு திரும்புகிறதா என்று உறுதிப்படுத்தவும்.

6. பிரேக்குகள்:
ஆட்டோமொபைல் பிரேக்குள் சிக்கலான அமைப்புக் கொண்டவை ஆகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை முறையாக பராமரித்து சர்வீஸ் செய்ய வேண்டும். நெடுஞ்சலையில் உங்கள் டாடா ஏஸ் மினி டிரக்கின் மிகவும் முக்கியமான பாகம் என்பதால் பிரேக்குள் மீது கவனம் செலுத்தவும். உங்கள் வாகனத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலையை உறுதி செய்ய உங்கள் பிரேக்குகளை 6 மாதங்களுக்கு ஒருமுறை சோதிக்க வேண்டும்.

7. சக்கரங்களும் டயர்களும்:
உங்கள் ஏஸின் டயர் மற்றும் ரிம் வளைவுகள், தூசு, துரு இல்லாமல் இருக்க வேண்டும். டியூபை உள்ளே சொருகும் முன்பாக உள்பக்கத்தை சுத்தம் செய்யவும்.

8. சேசிஸை சுத்தமாக வைத்திருக்கவும்:
சாலையில் ஓடத் தகுதி பெற்ற வாகனத்தின் வெளிப்புறத் தோற்றமும் மிகவும் முக்கியமானது. வழக்கமாக சுத்தம் செய்வதன் மூலம் கறைகள் மற்றும் துருக்களை அகற்றவும். தேவைப்படும்போது நல்ல தரமான பெயின்ட் கொண்டு புதுப்பிக்கவும்.

உங்கள் மினி டிரக்கை எப்போதும் புதிதாக வைத்திருக்க மற்றும் உயர் செயல்திறன், வேகம், பாதுகாப்பை உறுதிப்படுத்த, வழக்கமான பராமரிப்புக்காக நேரம் மற்றும் சிறிது பணம் செலவழிப்பதை தவிர்க்கக் கூடாது. நீண்ட கால அளவில் இது வாகனத்தின் ஆயுளை உறுதிப்படுத்த கட்டாயமானது.

தொடர்பான படைப்புகள்