“வர்த்தக டிரக்கிங் தொழிலை எவ்வாறு துவங்குவது”

“வர்த்தக டிரக்கிங் தொழிலை எவ்வாறு துவங்குவது”

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறை வர்த்தக ரீதியான வெற்றிக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலீடு மற்றும் வரவு-செலவு திட்டத்தின் அடிப்படையில் டிரக்கிங் தொழிலை துவங்குங்கள். நீங்கள் டாடா ஏஸ் அல்லது டாடா ஜிப் போன்ற சிறிய டிரக் மூலமாக உள்ளூர் டெலிவரிகளை துவங்கலாம். அல்லது ஏஸ் மெகா எக்ஸ்எல் அல்லது டாடா அல்ட்ரா போன்ற சற்றுப் பெரிய போக்குவரத்து வாகனங்களைக் கொண்டு வெவ்வேறு நகரங்களில் சரக்குகளை டெலிவரி செய்யும் தொழிலைத் துவங்கலாம். போக்குவரத்து சேவைகளைத் துவக்க நம்பகத்தன்மை வேண்டும். தொழிலுக்கான போக்குவரத்துச் சேவையில் நீங்கள் அவர்களை கைவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை வரவேண்டும்.

வர்த்தக டிரக்கிங் தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பாக, மதிப்பிடப்பட்ட விலைகள், சட்டப்பூர்வ போக்குவரத்துச் சட்டங்கள், லைசென்ஸ் கட்டணங்கள், வாகன அட்டவணைகள், நுழைவு கட்டணங்கள், பராமரிப்பு மற்றும் வேறு சம்பந்தப்பட்ட விதிமுறைகள் பற்றிய அறிவைப் பெற வேண்டும்.

நிதியுதவி பெறுதல்:
டிரக் தொழிலை தொடங்குவதற்கான அனுபவம் மற்றும் பாதுகாப்புடன் வாகனங்களில் முதலீடு செய்ய நீங்கள் வர்த்தக வங்கியிலிருந்து நிதியுதவி பெறலாம். நீங்கள் வங்கியிடம் நிதியுதவி பெற முடியாவிட்டால் டிரக் தொழிலை தொடங்குவதற்கு நிதி முதலீடு செய்யக் கூடிய ஒரு பங்குதாரர் கிடைப்பாரா என்று ஆலோசிக்கவும். நிதி பற்றாக்குறையாக இருக்கும்போது வாங்குவதற்கு பதிலாக வாகனங்களை வாடகைக்கு விடுவதும் ஒரு வாய்ப்பாகும்.

சாத்தியமாகும் வாடிக்கையாளர்களை தேடுதல்:
சாத்தியமாகும் வாடிக்கையாளர்கள் மற்றும் போட்டியாளர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு முழுமையான சந்தை ஆராய்ச்சி அவசியமானது. கச்சாப்பொருட்கள், தயாரான இருப்பு பொருட்கள், பேக் செய்யப்பட்ட தயாரிப்புகள் போன்றவற்றை தங்கள் கிட்டங்கியிலிருந்து கடைகளுக்கு எடுத்துச் செல்லத் தேவைப்படுவதால் டிரக் தொழிலுக்கு உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், விவசாயிகள், பில்டர்கள், சிறிய சேவை முகவர்கள் போன்றோர் சிறந்த வாடிக்கையாளர்களாக இருப்பார்கள்.

உங்கள் தொழிலை உள்ளூரில் விளம்பரம் செய்தல்:
ஒரு போட்டியில் ஒரு துவக்க தொழிலை நிலை நிறுத்த வேண்டும். உள்ளூர் செய்தித் தாளில் விளம்பரம் செய்து உங்களுக்குக் கிடைக்கக் கூடிய வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். சமுதாயப் பத்திரிகைகளின் வரிவிளம்பரங்கள் அல்லது யெல்லோ பேஜ்-களில் விளம்பரம் செய்யுங்கள். பிராண்டை உருவாக்குதல் உங்கள் நிறுவனத்தின் மதிப்பை அதிகரிக்கும். உங்கள் தொழிலின் பெயர், லோகோ, தொடர்பு விவரங்களை வாகனத்தில் எழுதவும். நீங்கள் டிரான்ஸ்போர்ட் புரோக்கர்களை அணுகி ஒப்பந்தங்களைப் பெறலாம்.

அங்கீகரித்த ஓட்டுனர்களை வேலையில் அமர்த்தவும்:
சுத்தமான பின்னணி மற்றும் ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள சட்டப்பூர்வமாகத் தகுதி பெற்ற கணரக ஓட்டுனர்களை வேலையில் அமர்த்தவும். ஓட்டுனருக்கு குறைந்தது 25 வயது இருக்க வேண்டும் மற்றும் சாலைப்பாதுகாப்பு, வாகனப் பாதுகாப்பு, சரக்குகளை பாதுகாப்பாக கையாளுவதில் நன்கு பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

எந்தவொரு தொழிலையும் போலவே, வர்த்தக டிரக் தொழிலில் அதற்கான பயன்களும் அபாயங்களும் உள்ளன. இது நீங்கள் எவ்வளவு நன்றாகத் துவங்கி, பராமரித்து தொழிலை தொடர்ந்து செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

தொடர்பான படைப்புகள்