உங்கள் மினி டிரக்கில் எவ்வாறு சிறந்த மைலேஜை பெறுவது

உங்கள் மினி டிரக்கில் எவ்வாறு சிறந்த மைலேஜை பெறுவது

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

எனது டாடா ஏஸ் மைலேஜை அதிகரிக்க ஏதாவது வழி உள்ளதா? பெரும்பாலும் டாடா ஏஸ் ஓட்டுனர்கள் மற்றும் ஃப்ளீட் ஓனர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால், டாடா ஏஸோ அல்லது வேறு எந்த வாகனமோ உங்கள் பிக்அப் டிரக்கின் மலைலேஜை அதிகரிக்க யாரும் மாயாஜாலம் செய்து விட முடியாது. உங்கள் மைலேஜை சற்று அதிகரிக்க நீங்கள் பலவேலைகளை ஒன்றாகச் செய்ய வேண்டும். சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பின் மூலமாக சில மைலேஜ் பயனை அடைய முடியும். அதவேளையில் டிரைவர் என்ற முறையில் நீங்களும் உங்கள் பங்கிற்கு சில வேலைகளைச் செய்ய வேண்டும்.

உங்கள் டாடா ஏஸின் மைலேஜை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய சில வழிமுறைகள் இதோ:

1. உங்கள் டயர்களை பரிந்துரைத்த அழுத்தத்தில் வைத்திருங்கள்:
உங்கள் டயர்களை பரிந்துரைத்த அழுத்தத்தில் வைத்திருப்பதன் மூலமாக அதிக அழுத்தம் கொண்டதாகவோ அல்லது குறைந்த அழுத்தம் கொண்டதாகவோ இல்லாதிருப்பதன் மூலமாக நீங்கள் உங்கள் பிக்அப்பின் மலேஜை அதிகரிக்கலாம்.

2. ஏர் ஃபில்டரை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவும்:
அதிக காற்றோட்டம் இருந்தால், நீங்கள் சிறந்த மைலேஜை பெறுவீர்கள்.

3. சிறந்த ஓட்டும் பழக்கங்கள்:
படிப்படியான பிரேக்கிங், என்ஜினை புதுப்பிக்காமல் இருப்பது, எப்போதும் க்ளட்சை பாதி அழுத்தி வைத்திருக்காமல் இருப்பது உங்கள் வாகனத்தின் மைலேஜை அதிகரிக்கும்.

4. பாரம் ஏற்றும் இறக்கும்போது என்ஜினை ஆஃப் செய்து விடவும்:
5 நிமிட வேலையாக இருந்தாலும், அது ஒன்று சேர்ந்து இழப்பை ஏற்படுத்தும். எனவே என்ஜினை அனைத்து வைப்பதன் மூலம் நிறைய எரிபொருளைச் சேமிக்கலாம்.

5. நீண்ட டிராஃபிக் சிக்னல் உள்ள இடங்களில் என்ஜினை அணைத்து விடவும்:
நீங்கள் தினமும் பல சிக்னல்களில் என்ஜினை அணைப்பதன் மூலமாக எவ்வளவு எரிபொருளை சேமிக்கலாம் என்பது உங்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

6. சரக்கு இல்லாமல் ஓட்டும்போது சரக்குப் பகுதியை மூடி வைத்தல்:
சரக்குப் பகுதியில் உள்ள தார்ப்பாய் போன்றவை பறந்து கொண்டிருந்தால் அவை தேவையில்லாத எதிர்ப்பை காட்டி மைலேஜை குறைக்கலாம்.

7. அனுகூலமான வேகத்தில் செல்லவும்:
நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து நீங்கள் வேகத்தை அதிகரிக்கவோ அல்லது பிரேக் போடவோ தேவையில்லாத வேகத்தில் செல்லவும் மற்றும் முடிந்தவரை அதே வேகத்தில் செல்லவும். இந்த முறையில் நீங்கள் அதிக எரிபொருளைச் சேமிக்கலாம்.

8. எரிபொருள் இன்ஜெக்டர்களை வழக்கமாக சுத்தம் செய்யவும்:
இன்ஜெக்டர் ஸ்பிரேக்களை நுணுக்கமான எரிபொருள் மிஸ்ட் மூலமாக சுத்தம் செய்யவும். எரிபொருளை சிலிண்டருக்குள் தெளிப்பதன் மூலம் எரிபொருள் மைலேஜை அதிகரிக்கவும்.

9. நீங்கள் செல்லும் வழியை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும்:
பக்கமான ஆனால் போக்குவரத்து நெருக்கடியான சாலையில் செல்வதை விட தூரமான அல்லது போக்குவரத்து நெருக்கடி இல்லாத சாலையில் நீங்கள் அதிக எரிபொருளை சேமிக்கலாம்.

10. குளிர்காலத்தில் உங்கள் என்ஜினை சூடுபடுத்தவும்:
மிகவும் குளிர்ச்சியான வெப்பநிலையில், நீங்கள் உங்கள் பயணத்தை தொடங்கும் முன்பாக சில நிமிடங்கள் என்ஜினை ஓட விடவும். குளிர்ச்சியான என்ஜினை விட சூடான என்ஜின் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும்.

தொடர்பான படைப்புகள்