உங்கள் டாடா ஏஸில் சிறந்த மைலேஜ் உடன் தூரங்களை கடந்து செல்லுங்கள்.

உங்கள் டாடா ஏஸில் சிறந்த மைலேஜ் உடன் தூரங்களை கடந்து செல்லுங்கள்.

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

டாடா ஏஸ் துவங்கப்பட்டதிலிருந்தே அது அற்புதமானதாகவும் சந்தையை மாற்றக் கூடியதாகவும் இருக்கிறது. தொழிற்துறையில் அதனுடைய மதிப்பை பொறுத்த வரை அதன் விலைக்கு ஏற்றதாக இருக்கிறது. இது மினி டிரக்கின் உறுதியான கட்டமைப்புடன் பல எண்ணிக்கையிலான வகைகளை கொண்டதாக இருக்கிறது.

எந்தவொரு வர்த்தக வாகனத்தையும் மதிப்பிட மைலேஜ் என்பது ஒரு முக்கியமான அளவுகோலாக உள்ளது. இதில் டாடா ஏஸ் குறைந்ததாக இல்லை! இதனுடைய சிறிய மாடல் முதல் பெரிய மாடல் வரை, டாடா ஏஸ் பெரிய எரிபொருள் டேங்க் உடன் கிடைக்கிறது. நீங்கள் எங்கு சென்றாலும் மைலேஜ் நிம்மதி தரக் கூடியதாக இருக்கிறது.

டாடா ஏஸின் அடிப்படை மாடல்களில் 30 லிட்டர் எரிபொருள் டேங்க்கள் உள்ளன மற்றும் இவை லிட்டருக்கு 21-22 கிமீ* மற்றும் சிஎனஜி வகையில் கிலோவுக்கு 21 கிமீ மைலேஜ் கொடுப்பதாக உள்ளன.

ஏஸ் குடும்பத்தில் டாடா சூப்பர் ஏஸ் மின்ட் ஒரு பெரிய வாகனமாகும். 8.6 அடி சரக்கு ஏற்றும் பாடி கொண்ட இது நகரத்திற்குள்ளாக பெரிய/ கனமாக சரக்கு வாகனத்தை எடுத்துச் செல்லச் சிறந்தது. இதில் 38 லிட்டருக்கான பெரிய எரிபொருள் டேங்க் உள்ளது. இது லிட்டருக்கு 17. 9 கிமீ மைலேஜ் கொடுக்கிறது.

டாடா ஏஸ் மெகா சிறியது, இருந்தாலும் 7 அடி சரக்கு பாடி கொண்ட சக்திவாய்ந்த பிக்அப் கொண்டது. 5 ஸ்பீட் கியர்களை கொண்ட இது செயல்திறனில் விட்டுக் கொடுக்காமல் எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்கிறது. இதில் 30 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது. இது லிட்டருக்கு 21.4 கிமீ மைலேஜ் கொடுக்கிறது.

5.5 அடி மற்றும் 5.3 அடி பாரமேற்றும் பாடி கொண்ட ஏஸ் ஜிப் மற்றும் ஜிப் சிஎன்ஜி ஆகியவை ஏஸ் வாகனங்களில் சிறிய வாகனங்களாகும். எனவே, அவை மைலேஜ் மீட்டரில் பெரும் மாற்றத்தை கொடுக்கின்றன. லிட்டருக்கு 36 கிமீ மைலேஜ் கொடுக்கின்றன.

டாடா ஏஸ் ஜிப் வாகனம் ஏஸ் ஜிப் வாகனத்தை விட பெரியது. ஆனால் மற்ற வாகனங்களை விட சிறியது. இது 6.3 அடி பாடி மற்றும் 10 லிட்டர் எரிபொருள் டேங்க் கொண்டது. இது உங்களுக்கு லிட்டருக்கு 33.8 கிமீ* மைலேஜ் கொடுக்கிறது. இது நகரப் பகுதிக்கான சிறந்த வாகனமாகும்.

இறுதியில், புதிதாக துவங்கப்பட்ட டாடா ஏஸ் எக்ஸ்எல் மற்றும் டாடா ஏஸ் மெகா எக்ஸ்எல் இரண்டும் 30 லிட்டர் எரிபொருள் டேங்க் உடன் கிடைக்கிறது. இவை இந்த பிரிவில் சிறந்த மைலேஜ் கொண்டதும் ஆகும்.

ஓட்டும் பழக்கம், சாலை நிலை, காலநிலை மற்றும் வாகனத்தின் பொதுவான பராமரிப்பு என பல காரணிகளைப் பொறுத்து வேறுபடும். ஆனால் டாடா ஏஸ் வாகனங்கள் சிறந்த மைலேஜை கொடுக்கும் மற்றும் உங்கள் தொழிலைப் பற்றி கவலை இல்லாமல் இருக்கலாம் என்று சொல்வது சரியாக இருக்கும்.

தொடர்பான படைப்புகள்