கடுமையான பகுதிகளுக்கான சிறந்த டாடா மினி டிரக்

கடுமையான பகுதிகளுக்கான சிறந்த டாடா மினி டிரக்

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

இந்தியா இமயமலையால் சூழப்பட்டிருப்பதால், இந்தியாவின் கடினமான பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் பயணம் சவால் மிகுந்ததாக உள்ளது. பல சிறிய வர்த்தக வாகனங்கள் மினி டிரக் சந்தையில் நிரம்பி வழியும் நிலையில் எல்லாப் பகுதியிலும் பயணிக்கக் கூடிய வாகனமே கடினமான பாதைகளிலும் உங்கள் பயணத்தை எளிதாக்கும்.

டாடா மோட்டார்ஸ் தொழில் நுட்பம் மூலமாக மட்டுமல்லாமல் கடினமான பாதைகளிலும் கன காரத்தை எடுத்துச் செல்ல உறுதியானதாக இருப்பது மற்றும் தனது டாடா ஏஸ் வகைகளின் மூலமாக வர்த்தக மினி டிரக் சந்தையைக் கட்டுப்படுத்தி வருகிறது. கடினமான இந்திய சாலைகளில் நீடித்து உழைக்கக் கூடிய டாடா ஏஸின் உறுதியை குறிப்பிடும் வகையில் அது "குட்டி யானை" என்று அழைக்கப்படுகிறது.

ஏஸின் உரிமையாளர்கள் எளிய பராமரிப்பு மற்றும் மேம்பட்ட போக்குவரத்துச் சேவைகள் மூலமாக பயன்பெறுகின்றனர். புதிய என்ஜின் தொழில்நுட்பம், நீடித்த பாடி மற்றும் பெரிய டயர்களை ஒருங்கே பெற்ற டாடா ஏஸ் அதிகபட்ச எடையாக 710 கிலோ எடையுடன் கிராமப்புற சாலைகள் மற்றும் நகர்புறத்தின் சமமற்ற குறுகலான சாலைகளில் சிறந்த செயல்திறனைக் காட்டுவதாக உள்ளது.

மினி டிரக் வகைகளில் டாடா ஜிப், டாடா ஏஸ் எச்டி, டாடா ஏஸ் கோல்டு, டாடா ஏஸ் எக்ஸ்எல், டாடா ஏஸ் மெகா, ஏஸ் மெகா எக்ஸ்எல், டாடா ஏஸ் சூப்பர் ஏஸ் மின்ட் ஆகியவை புகழ்பெற்ற ஏஸ் குடும்ப வாகனங்கள் ஆகும். இவை அதிகபட்சமாக 1 டன் வரையான எடையுடன் பல்வேறு பகுதிகளிலும் சரக்குகளை ஏற்றி சௌகரியமாக இயங்கக் கூடிய நம்பகமான வர்த்தக வாகனம் என்று மதிப்பிடப்பட்டுள்ளன. டாடா ஏஸ் மினி டிரக்குள் நாட்டில் லட்சக்கணக்கான தொழில் முனைவோர் மற்றும் பாரம் ஏற்றுவோரின் முக்கியமான தொழில் பங்குதாரராக நிரூபிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு பாரம் மற்றும் சாலை நிலைகளில் கையாள்வதற்கு பொருத்தமான சரக்கு மினி டிரக்காக தேர்வு செய்து உங்கள் தொழிலை வளர்த்து வருமானத்தை அதிகரியுங்கள். டாடா மோட்டார்ஸ் 50 கிமீ-க்கு ஒரு இடம் என ஒர்க் ஷாப்கள் மற்றும் 1600 சேவை மையங்கள் கொண்ட பரவலான நெட்வொர்க்கை கொண்டது. கடினமான பகுதிகள் அல்லது கடுமையான காலநிலை காரணமாக ஏறபடும் பழுதுகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

அதுபோன்ற சக்திவாய்ந்த டாடா ஏஸ் மினி டிரக்குகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் பல தொழில் முனைவோர் மற்றும் சிறிய அளவிலான தொழில் முனைவோரின் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்பான படைப்புகள்