டாடா ஏஸ் எக்ஸ்எல்லின் பயன்பாடுகள்

டாடா ஏஸ் எக்ஸ்எல்லின் பயன்பாடுகள்

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

டாடா மோட்டார்ஸ் 2005-ம் ஆண்டு டாடா ஏஸை அறிமுகப்படுத்தியது. விரைவிலேயே அது இந்தியாவில் விற்பனையாகும் நம்பர் 1 மினி டிரக்காக ஆனது. 12 ஆண்டுகளில் டாடா ஏஸ் குடும்பத்தின் வாகனங்கள் 20 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டு புகழ்பெற்ற "குட்டி யானை" இன்னும் பெரிதாக, உறுதியானதாக, டாடா ஏஸ் எக்ஸ்எல் ஆக வெளியிடப்பட்டது.

டாடா ஏஸ் எக்ஸ்எல் 15% பெரிதானதாக, 2500 மிமீ (8.2 அடி) சரக்கு பாடி, உறுதியான பாடியுடன் தனது முந்தைய வாகனத்தை விட ஒரு படி மேம்பட்டதாகும். இது 11.6 KW (16HP) @ 3200r/m மெக்கானிக்கல் ஃப்யூயல் பம்ப் என்ஜின், உறுதியான லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் நன்றாக பார்ப்பதற்கு அகன்ற ஸ்க்ரீன், அகன்ற கதவு திறப்பு ஆங்கிள் மற்றும் 30 லி எரிபொருள் டேங்க் கொண்டது.

எதற்காக டாடா ஏஸ் எக்ஸ்எல் பயன்படுத்தப்படுகிறது?

1. ஸ்டாக் (திறந்த பாரமேற்றும் பகுதி) மாடல் பயன்பாடுகள்:
கேஸ் சிலிண்டர்கள், பால் கேன்கள், மினரல் வாட்டர், பால், காய்கறி கூடைகள், எஃப்எம்சிஜி, பிளைவுட், ஃபர்னிச்சர், பைப்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல பயன்படுகிறது.

2. முழுவதும் கட்டப்பட்ட மாடல் பயன்பாடுகள்:
டாடா ஏஸ் மாடல்கள் முன்னதாக கட்டப்பட்ட கீழ்க்கண்டவை போன்ற கேட்டரிங் தொடர்பான தொழில்களுக்குப் பயன்படுகிறது:

ஏ) கோல்டு செயின் டிரான்ஸ்போர்ட்:
டாடா ஏஸ் எக்ஸ்எல்லை ரெஃப்ரிஜெரேடட் கன்டெய்னருடன் கொண்டு வரலாம். இது இந்த வகுப்பில் சிறந்த என்ஜின் பொருத்தப்பட்டு மேம்பட்டதாக தொடர்ச்சியான குளிர்ச்சியூட்டுவதாக உள்ளது. இந்த வகை வாகனங்கள் குளிர்ச்சி தேவைப்படும் உறைய வைக்கப்பட்ட இறைச்சிகள், ஐஸ் க்ரீம்கள், மருந்துகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல பயன்படுகிறது.

பி) கன்டெய்னர் சரக்கு:
டாடா ஏஸ் எக்ஸ்எல் கன்டெய்னர் டிரக் வகையிலும் வருகிறது. நீடித்து உழைக்க மற்றும் பாதுகாப்பிற்காக உயர் தர மடிப்புகள் கொண்ட இன்சுலேடட் கன்டெய்னரை கொண்டது.

சி) தண்ணீர் டேங்கர்:
1 கிலோலிட்டர் திறனுடன் ஏஸ் எக்ஸ்எல் சிறிய தண்ணீர் மற்றும் பால் வழங்குதல் தொழிலுக்குச் சிறந்தது.

டி) கார்பேஜ் டம்ப்ஸ்டர் (நகராட்சி பயன்):
டாடா ஏஸ் எக்ஸ்எல் குப்பைகளை அப்புறப்படுத்தவும் பயன்படுகிறது. இது
ஹைட்ராலிக் சிஸ்டம் உடன் சக்திவாய்ந்த என்ஜின் கொண்டதாக இருப்பதால் குப்பை நிர்வாகத்திற்கு சிறந்ததாக உள்ளது. ஏஸ் எக்ஸ்எல்லின் பாக்ஸ் டிப்பர் சிறிய அளவிலானதாக இருப்பதால் இது குப்பைகளை சேகரிக்க குறுகலான சந்துகளிலும் சென்று திரும்பக் கூடியது.

ஈ) உணவு டிரக்:
உணவு டிரக் மாடல் ஸ்டீல் கன்டெய்னர்/ ரேக், நீடித்த ஆயுள் மற்றும் பாதுகாப்புக்கான மடிப்புள்ள பாடியுடன் கிடைக்கிறது. இதில் போதுமான மொபைல் கிச்சன் மற்றும் சேமிப்பு பகுதி உள்ளது. பெரும்பாலான உணவு டிரக்களின் தேவைக்கு இது போதுமானது.

மொத்தத்தில் டாடா ஏஸ் எக்ஸ்எல், உறுதியான வாகனம் மற்றும் சிறந்த மைலேஜ் உடன் தொழில் போக்குவரத்துக்கான நம்பகமான வாகனமாக உள்ளது. குறைந்த பராமரிப்புச் செலவும் சிறந்த பாரமேற்றும் திறனும் கொண்டது.

தொடர்பான படைப்புகள்