TATA Ace Gold Petrol High Deck

ஏஸ் கோல்டு பெட்ரோல் ஹை டெக் (high deck)- முழுமையாகக் கட்டமைக்கப்பட்டது மற்றும் முதல் நாளிலிருந்தே வருமானம் ஈட்டத் தயாராக உள்ளது

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல் ஹை டெக் (high deck), டாட்டா மோட்டார்ஸிடமிருந்து வழங்கப்படும் பயன்பாட்டிற்குத் தயாரான மினி டிரக். இது பிரபலமான ஏஸ் கோல்டு பெட்ரோலின் ஹை பாடி வேரியன்ட் ஆகும். வாங்கிய பிறகு மாற்றியமைப்பதற்கான தேவை எதுவுமின்றி முதல் நாளிலிருந்தே வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.

உங்கள் தொழிலுக்காக ஏஸ் கோல்டு பெட்ரோல் வாகனத்தை வாங்குவது குறித்து யோசனை செய்துகொண்டிருக்கிறீர்களா? ஹை டெக் (high deck) வகை உங்களுக்கு வெற்றியைத் தரும் ஒரு வாகனமாக இருக்கக்கூடும் என்பதற்கான காரணம் இதோ. <33/33/56% > தொடர்ந்து படிக்கவும்.

இறுதி கட்ட டெலிவரியில் அரசன்

ஏஸ் கோல்டு, இந்தியாவின் விருப்பத்திற்குரிய மினி-டிரக் லாஜிஸ்டிக்குகளில் இறுதி கட்ட டெலிவரி பிரிவில் இது சந்தையில் முன்னணியில் உள்ளது.

இறுதி கட்ட டெலிவரி என்பது, அதன் பெயர் குறிப்பிடுவது போல, டெலிவரியின் இறுதி கட்டமாகும், இதில் ஒரு நகர அல்லது சிறு நகர ஹப்பில் உள்ள ஒரு இடைநிலை ஷிப்பிங் மையத்திற்குத் தயாரிப்பு வந்து சேர்ந்த பின்னர் அது வாடிக்கையாளரின் முகவரிக்கு அனுப்பப்படும், அந்த முகவரி கிராமப்புறப் பகுதிகளில் இருக்கக்கூடும், பெரும்பாலும் சரியான பாதை இணைப்பில்லாத பகுதிகளில் இருக்கக்கூடும்.

விநியோகச் சங்கிலியில் இறுதி கட்ட டெலிவரியின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்க முடியாது. உங்கள் தயாரிப்பு இதுவரை எட்டியிருந்தாலும், அது வாடிக்கையாளரைச் சரியான இடத்தில் மற்றும் சரியான நேரத்தில் சென்று சேரவில்லை என்றால் அதன் நோக்கம் தோல்வியடைந்துவிடும். எனவே, எந்தவொரு லாஜிஸ்டிக்ஸ் தொழிலுடனும் தொடர்புடைய 40% -க்கும் மேலான செலவுகள் இறுதி கட்ட டெலிவரி முதலீடுகளிலேயே பயன்படுத்தப்படுகின்றன. (மூலம்: ஃப்ராஸ்ட் & சல்லிவன்) இறுதி கட்ட டெலிவரியை உகந்ததாக்குவதைச் சுற்றியே ஒட்டுமொத்தத் தொழில்களும் கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

ஏஸ் கோல்டுடன் தொழிலைத் தொடங்குவதற்கு இது நல்ல நேரமா?

இன்று, பெருந்தொற்று காரணமாகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்வதற்கான தேவை அதிகமாக இருப்பதனால் லாஜிஸ்டிக்ஸ் துறைகள் வலுவாகச் செயல்பட்டு வருகிறது.

எனவே, வேலையின்மை மற்றும் பணி நிரந்தரமின்மை அதிகமாக இருப்பதனால், ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு இது ஒரு சாத்தியமான வணிகம் என்பதற்கான ஒரு தெளிவான அறிகுறி ஆகும்.

டாட்டா ஏஸ் உண்மையாகவே இறுதி கட்ட டெலிவரியில் முன்னிலையில் உள்ளது. டாட்டா ஏஸ் சந்தைக்குள் வருவதற்கு முன், ஆற்றல், நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் இடவசதி இல்லாத 3 சக்கர ரிக்ஷா டெம்போக்கள் மட்டும் தான் கிடைக்கக்கூடிய ஒரே தீர்வாக இருந்தது. மேலே உள்ள அனைத்தின் கலவையாக டாட்டா ஏஸ் வந்துள்ளது - இது அதிகப் பயணங்களுக்கு அதிகக் ஆற்றலையும், அதிக வருமானத்திற்கு அதிக கொள் திறனையும், குறைந்த பராமரிப்பு செலவுகளுடன் தருகிறது.

டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல் BS6

2005-ஆம் ஆண்டு இது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பயணத்தின் ஒவ்வொரு படியிலும் வாடிக்கையாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் டாட்டா ஏஸ் பரிணாம மாற்றம் அடைந்துள்ளது. டாட்டா ஏஸ் கோல்டின் அறிமுகம், இந்தியா முழுவதும் உள்ள லாஜிஸ்டிக்ஸ் தொழில்முனைவோருக்கு ஒரு பெரிய செய்தி ஆகும், அதன் செயல்திறன் மற்றும் பிக்அப் அதற்கான காரணமாகும் - பெட்ரோல்-டீசல் எரிபொருள் விலை சம அளவில் இருந்தாலும் ஏஸ்-இன் நன்மை இப்போது பெட்ரோலிலும் அத்துடன் அணுகக்கூடிய விலையிலும் கிடைக்கிறது.

வணிக வாகனங்களின் முழு BS6 ரேஞ்சைப் போல, டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல் BS6 6 வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது.

  1. அதிக மைலேஜ், எரிபொருள் திறன் மிக்க எஞ்சின் மற்றும் எரிபொருள் நுண்ணறிவுள்ள அம்சங்கள்
  2. அதிக ஆற்றல் மற்றும் கிரேடெபிலிட்டியுடன் அதிக பிக்அப்
  3. 750 கிலோ வரையிலான அதிகக் கொள்திறனுக்காக அதிகம் உழைக்கும் சேஸ், சஸ்பென்ஷன் மற்றும் ஆக்ஸில்கள் காரணமாக அதிகப் பேலோட்
  4. புதிய டிஜிட்டல் கருவி தொகுதி, யுடிலிட்டி ஹோல்டர் மற்றும் USB சார்ஜருடன் அதிகக் கேபின் சௌகரியம் மற்றும் வசதி.
  5. நீண்ட சேவை இடைவெளிகள் மற்றும் 2 வருடங்கள்/72000 கி.மீ உத்திரவாதத்துடன் கூடிய ஒரு எளிமையான எஞ்சின் காரணமாகக் குறைவான பராமரிப்பு
  6. அதிக எரிபொருள் சேமிப்பு, அதிகச் சுமை கொள்திறன் மற்றும் குறைவான பராமரிப்பு காரணமாக அதிக இலாபம்

டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல் ஹை டெக் (high deck) வகை ஏன் ஒரு சிறந்த தேர்வு?

நீங்கள் ஏன் டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல் ஹை டெக் -ஐ தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான 5 முக்கியமான காரணங்கள் இதோ.

தொழிலுக்குத் தயாராக உள்ளது:

நீங்கள் ஏதாவது வணிக வாகனத்தை வாங்கும் போது, பணியில் செலவிடப்படும் அதிகபட்ச நேரம் அதிகபட்ச இலாபத்தை உங்களுக்குக் கொண்டுவருகிறது. கேரேஜ்கள் அல்லது வாகனத்தின் உடலமைப்பைக் கட்டமைக்கும் கூடத்தில் செலவிடப்படும் எந்தவொரு கூடுதல் நேரமும் உங்கள் வருமானத்தைத் தாமதிக்கிறது.

தயாராக உள்ள ஹை டெக் (High Deck) உடலமைப்புடன், டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல் நேரடியாகப் பணிக்குச் செல்கிறது. இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, முதல் நாளிலிருந்தே இலாபத்தை ஈட்ட இது உங்களுக்கு உதவுகிறது. டிரக்கில் நீங்கள் எந்தவொரு கூடுதல் மாற்றங்களும் செய்ய வேண்டியதில்லை.

தரம்:

வாகனத்தின் உடலமைப்பைக் கட்டமைப்பவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள், ஆனால் யாரை நம்புவதென்பது மிகவும் கடினமாகும். ஏன் வெறுமனே டாடா மோட்டார்ஸின் நம்பகமான தரத்தை நம்பக்கூடாது? அதிநவீனத் தயாரிப்பு செயல்முறை மற்றும் உயர் தர நெளி தன்மையுடைய ஸ்டீல் ஷீட்டின் பயன்பாடு ஒரு உறுதியான, திடமான உடலை உருவாக்குகிறது, அது சந்தையில் உள்ள பெரும்பாலானவற்றுடன் ஒப்பிடமுடியாத வகையில் உள்ளது.

குறைந்த டவுன் பேமெண்ட்:

வாகனக் கடனில் ஹை டெக் (High Deck) உடலமைப்புக்கான செலவும் அடங்கும், எனவே ஆரம்ப முதலீட்டைக் குறைக்கிறது. வெளியே இருந்து ஒரு வாகன உடலமைப்பைக் கட்டமைப்பவர் மூலம் மாற்றியமைப்பதற்கான கூடுதல் செலவுகள் எதுவும் இல்லை.

நம்பகத்தன்மை:

2 வருடங்கள் அல்லது 72000 கி.மீ -இன் எங்களுடைய நிலை உத்தரவாதத்தின் கீழ் வாகனம் மட்டுமல்ல, ஹை டெக் (high deck) உடலமைப்பும் பாதுகாக்கப்படுகிறது.

சேமிப்புகள்:

மிகவும் சிக்கனமான விலையில் ஹை டெக் (high deck) உடலமைப்பு வருகிறது. வாங்கிய நேரத்திலிருந்தே, பெரிய சேமிப்புகளைச் செய்ய இது உங்களுக்கு உதவுகிறது. உங்கள் தொழிலைத் தொடங்கும் போது ஒரு ஓட்டுநரை அதில் ஈடுபடுத்துவது போன்ற பிற தொழில் தேவைகளுக்கான நிதிகள் கையில் இருப்பதற்கு அது உதவுகிறது, எனவே டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல் ஹை டெக் (High Deck) -ஐ தேர்ந்தெடுப்பது எப்போதும் நன்மை தரும் ஒன்றாகும்.

இப்போது, நீங்கள் உங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்துகொண்டு, ஏஸ் கோல்டுடன் உங்கள் தொழிலைத் தொடங்குவதற்கான முதல் நடவடிக்கையை நீங்கள் மேற்கொள்ளலாம். அதிகபட்சக் கடனுதவி மற்றும் பிற அற்புதமான விருப்பத்தேர்வுகளுடன், ஆன்லைனிலேயே ஏஸ் கோல்டு பெட்ரோல் ஹை டெக் (high deck) வகையை நீங்கள் முன்பதிவு செய்யலாம்.

தொடர்பான படைப்புகள்