டாடா ஏஸ் மினி டிரக் கொண்டு தொடங்கக் கூடிய 10 வகை தொழில்கள்

டாடா ஏஸ் மினி டிரக் கொண்டு தொடங்கக் கூடிய 10 வகை தொழில்கள்

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

இந்தியாவின் முன்னணி வர்த்தக மினி டிரக்கான டாடா ஏஸ் தனது ஒப்பற்ற வடிவமைப்பு மற்றும் பவர் பேக் சிறப்பம்சங்கள் மூலமாக ஆட்டோமொபைல் தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்துத் தொழிலில் டாடா ஏஸ் மினி டிரக் பெற்ற மாபெரும் வெற்றி ஒற்றை டாடா ஏஸ் மினி டிரக்கின் மூலமாக பல்வேறு தொழில்களைத் தொடங்கும் எண்ணத்தை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

டாடா ஏஸ் மினி டிரக்-கள் கடந்த 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி இந்தியாவில் தொழில்முனைவோருக்கு பல தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

ஒற்றை டாடா ஏஸ் மூலமாக ஒருவர் தொடங்கக் கூடிய 10 போக்குவரத்து தொழில்கள் பற்றிய கண்ணோட்டம் இதோ:

உணவு வழங்கும் தொழில்:
இந்தியா விவசாய நாடாக இருப்பதால், அது பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களின் உணவுக்கான தேவையை அது வழங்குகிறது. எனவே விவசாய பொருட்களை எடுத்துச் செல்வதற்கான தேவையும் அதிகமாக உள்ளது. இதுபோன்ற போக்குவரத்துத் தொழிலுக்கு டாடா ஏஸ் பொருத்தமாக உள்ளது.

குளிர் சேமிப்புத் தொழில்:
இந்தியாவில் அழியக் கூடிய பொருட்களை சேமிக்கும் நிலைகளுக்கு ஆதரவளிக்க டாடா மோட்டார்ஸ், ரீஃபர் கன்டெய்னர்கள் என்றழைக்கப்படும் இன்சுலேடட் கன்டெய்னர்கள், மின்ட் ரெஃப்ரிஜெரேட்டர்கள் பல ஏஸ் வகைகளை உருவாக்கியுள்ளது. இந்த மினி கன்டெய்னர்கள் தினமும் உள்ளூர் தொழில் மற்றும் சந்தைகளில் பயன்படுகின்றன.

வாடிக்கையாளர்களின் பொருட்களை நிர்வகித்தல்:
வெவ்வேறு நகரங்களிலிருந்து வாடிக்கையாளர்களின் பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் சென்று வழங்க ஒரு உறுதியான வாகனம் தேவை. பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் சென்று குறிப்பிட்ட பகுதியில் வழங்க டாடா ஏஸ் ஒரு கவர்ச்சிகரமான வாய்ப்பாக உள்ளது.

வாட்டர் டேங்க் தொழில்:
அடர்த்தியான நகரங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை டாடா மோட்டார்ஸை டாடா சூப்பர் மின்ட்-ஐ உற்பத்தி செய்யத் தூண்டியது. இது தனியார் தண்ணீர் போக்குவரத்தில் வெற்றிகரமான தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

மொபைல் கஃபேடரியா:
டாடா ஏஸ், உள்ளூரில் பயணித்து மக்களின் உணவுகள் மற்றும் பானங்களை வழங்கும் ஸ்டெயிலான மொபைல் ஸ்நாக் டிரக்கை வடிவமைத்து புதிய உச்சங்களை தொட்டுள்ளது.

சில்லறை விற்பனை வேன்:
டாடா ஏஸ் மினி டிரக்கை தயாரிப்புகளை விளம்பரப்படுத்த அல்லது சந்தையில் சாத்தியமாகும் வாடிக்கையாளர்களை கவருவதற்கான சந்தையில் சேவை வழங்க கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட வாகனமாக வடிவமைக்கலாம்.

ஏஸ் மினி டிரக் வாடகை தொழில்:
டாடா ஏஸ் மினி டிரக் பல்நோக்கு வர்த்தக வாகனமாக உள்ளது. வேலையின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாள் அல்லது அதற்கு அதிக நாட்களுக்கு வாடகைக்கு கொடுக்கலாம்.

கூரியர் தொழில்:
ஒரு வர்த்தக வாகனம் எப்போதும் கனரக சரக்குகளை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில்லை. முக்கியமான பார்சல்கள், ஆவணங்கள் மற்றும் கடிதங்களை அதிக அளவில் எடுத்துச் செல்லவும் டாடா ஏஸ் சிறந்த வாய்ப்பாகும்.

கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லுதல்:
"குட்டி யானை" என்று அழைக்கப்படும் டாடா ஏஸ் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கனரக கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வலிமை படைத்தது. இது பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த தொழிலாக கருதப்படுகிறது.

பால் வழங்கும் தொழில்:
டாடா ஏஸ் மினி டிரக் இல்லாமல் கனமான பால் கேன்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லுதல் இவ்வளவு எளிதாக இருந்ததில்லை. உயரம் குறைந்த பாரம் ஏற்றும் தளம் கனமான கேன்களை ஏற்றும் வேலையை எளிதாக்குகிறது.

துவக்கத்திலிருந்து டாடா ஏஸ் மினி டிரக்குகள் கிராமம் மற்றும் நகர்புறங்களில் பல்வேறு தொழில்களை உருவாக்கியுள்ளன. டாடா மோட்டார்ஸ் இணைய தளத்திற்கு வந்து உங்கள் தொழிலுக்கு ஏற்ற சரியான டாடா ஏஸ் வகையைத் தேர்வு செய்யுங்கள்.

தொடர்பான படைப்புகள்