2005ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா ஏஸ் இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது; புதிய வணிகங்களுக்கு உதவியது, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது, தொழில்முனைவு எண்ணத்தைத் தூண்டியது. அதன் நீடித்த தன்மைக்காகவும் அனைத்து வகை பரப்புகள் மற்றும் வானிலைகளிலும் திறம்படச் செயல்படுவதாலும் நாடு முழுவதிலுமுள்ள மக்கள் இப்பிராண்டை விரும்புகின்றனர்.
23 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோரின் நம்பிக்கைக்குரிய டாடா ஏஸ் கடந்த 15 ஆண்டுகளாக மினி டிரக் பிரிவில் வாடிக்கையாளர்களின் முதல் விருப்பமாக இருந்து வருகிறது. டாடா ஏஸ் வரிசையில் சமீபத்திய அறிமுகம் புதிய டாடா ஏஸ்கோல்ட் பெட்ரோல் ஆகும். இது அதிக மைலேஜ், அதிக சக்தி மற்றும் பிக்அப், அதிக சுமை தாங்கும் திறன், அதிக வசதி, குறைந்த பராமரிப்புடன் வருகிறது, இவையனைத்தும் இந்தப் பிரிவில் பிற வாகனங்களை விட அதிகபட்ச வருவாயை வழங்குகின்றன.
2005
2006
2007
2008
2009
2010
2011
2012
2014
2015
2016
2017
2018
2020